✍🏻🟠🟠இயற்கை வாழ்வியல் முறை🟠🟠இலந்தை பழத்தின் நன்மைகள்.
🟠🟠🟠🟠🟠
இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவைகளில் ஒன்றுதான் இலந்தைப்பழம் அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன.
🟠🟠🟠🟠🟠
சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.
உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.
இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன.
இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.
🟠🟠🟠🟠🟠
இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.
🟠🟠🟠🟠🟠
துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்.
பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி
மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த
உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்.
இலந்தை நெறுங்கனியை யெண்
அகத்தியர் குணபாடம்
நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
🟠🟠🟠🟠🟠
இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.
🟠🟠🟠🟠🟠
உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.
🟠🟠🟠🟠🟠
உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
🟠🟠🟠🟠🟠
பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.
🟠🟠🟠🟠🟠
உடல் வலியைப் போக்க
சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.
🟠🟠🟠🟠🟠
பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
🟠🟠🟠🟠🟠
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது 🟠🟠🟠🟠🟠
கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தைப் பழத்துக்குள் புழுநோய்
இந்த நோயுள்ள பழத்தைக் கடிக்கும்போது உதட்டில் புழு பட்டால் சில நிமிடங்கள் உதட்டில் எரிச்சல் இருக்கும்.
🟠🟠🟠🟠🟠
கருப்பை பிரச்சினையால் மாதவிலக்கு சமயங்களில் அதிக வலி, கரு உருவாகாமை, அப்படியே உண்டானாலும் கருச்சிதைவு போன்றவை ஏற்படும்.
கருப்பை தொடர்பான பிரச்சினைகளுக்கு இதற்கு இலந்தை இலை நல்ல மருந்தாக விளங்குகிறது.
இலந்தை இலை ஒரு பிடி அளவு எடுத்து, அதனுடன் 6 மிளகு, 4 பூண்டு பல்லு சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
இப்படி செய்து வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கி, வலியும் குறையும். கரு உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தை இலையின் மகத்துவம்
இலந்தை பழத்தில் நிறைய சக்திகள் உள்ளன. அதேப்போல இலந்தை இலையிலும் அதிக மருத்துவ சக்திகள் உள்ளன.
இலந்தை இலையை மை போல் அரைத்து வெட்டுக் காயத்தின் மீது வைத்து கட்டினால் விரைவில் காணம் குணமாகும்.
இலந்தை இலையை அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசு மோரில் கலந்து குடித்து வர எருவாய் கடுப்பு குணமாகும்.
இலந்தை இலையை அரைத்து அந்த விழுதைக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
இலந்தை இலையை மைபோல் அரைத்து பூசி வர மயிர் புழுவெட்டு நீங்கும்.
இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை, உள்ளங் கால்களில் பூசி வர, அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு.
🟠🟠🟠🟠🟠
வயிற்றுக் கடுப்புக்கு மருந்து
பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம்.
அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான்.அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது.
இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும்.
வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.
🟠🟠🟠🟠🟠
இழந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.
இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சிபெறும்.
எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு.
உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு.
கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும்.
🟠🟠🟠🟠🟠
தற்போது பெரும்பாலான இளைய தலைமுறைக்கு தலையாய பிரச்சினையே தலை முடிதான். தலை முடி உதிர்வது, இள நரை, பொடுகு போன்றவைதான்.
இவை பெரும்பாலும், சுற்றுச்சூழல் கெட்டிருப்பது மற்றும் பணிச் சுமை காரணமாக ஏற்படுகிறது.
இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தை இலையையும் சிறுகிளைகளையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்களின் மீது வைத்துக் கட்ட அவை சீக்கிரம் பழுத்து உடையும்.
🟠🟠🟠🟠🟠
புத்திக் கூர்மைக்கு இலந்தை பழம்
மந்த புத்தியுள்ளவர்கள் இலந்தைப் பழத்தை தொடர்ந்து உண்டு வர மூளை புத்துணர்வு பெறும்.
ஒரு கைப்பிடி இலந்தம்பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அது 1_2 லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எடுத்து வைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு இதை அருந்தி வர மூளை புத்துணர்ச்சி பெறும்.
பற்களில் ஏற்படும் கூச்சம், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு போன்றவைகளுக்கு இலந்தையை மென்று தின்பது நல்ல பலன் தரும்.
இதில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு அதிக நன்மைகளை அளிக்கிறது.
எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியும், உடம்புக்கு பலமும் தரும் வகையில் இலந்தை பழம் அமைந்துள்ளது.
எல்லாப் பழங்களையும் உணவுக்கு முன்பு தான் சாப்பிட வேண்டும். ஆனால் இலந்தைப் பழத்தை பகல் உணவுக்குப் பின்பு உண்பதால் நன்கு ஜீரணமாவதும் பித்தமும் கட்டுப்படும்.
காட்டு இலந்தை
இந்த பழங்களிலுள்ள ஜிஜுவாய்டுகள், ஜிஜுவோசைடுகள், ரோசியோசைடுகள் போன்ற பிளேவனாய்டுகள், வைட்டமின் சி, கௌமாரியோலைட்டுகள் ஆகியன உடலில் ஏற்படும் ஒவ்வாமையை நீக்கி, மூளை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கத்தையும் மன அமைதியையும் தருவதுடன், உணவு, சிறுநீர்ப்பாதை மற்றும் சுவாசப் பாதையில் தோன்றும் வறட்சியை நீக்கி, புண்களை ஆற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகின்றன.
பழுத்த காட்டு இலந்தைப்பழங்களை கையால் பிசைந்து, கொட்டையை நீக்கி, அத்துடன் 8 பங்கு நீர்விட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து, பாகு பதத்தில் மீண்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை தினமும் இரவு படுக்கும்பொழுது 5 முதல் 10 மில்லியளவு சாப்பிட்டுவர உடல் எரிச்சல் தணிந்து, ரத்தஅழுத்தம் சீராகும். சுறுசுறுப்பு உண்டாகும். அடிக்கடி இந்த காட்டு இலந்தை சர்பத்தை குடித்துவர ஆரோக்கியம் மேம்படும். யுனானி மருந்துக்கடைகளில் கிடைக்கும் சர்பத்-ஏ-உன்னாப் என்ற யுனானி மருந்தில் சீமை இலந்தைப்பழம் சேர்க்கப்படுகிறது. இதனை 15 முதல் 30 மில்லியளவு தினமும் 1 அல்லது 2 வேளை சாப்பிட்டுவர உணவுப்பாதை வறட்சி நீங்கி, உடல் குளிர்ச்சியடையும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தை இலைச் சாற்றினை உள்ளங்கை, உள்ளங்கால்களில், தினம் பூசி வர அங்கு அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.
குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.
🟠🟠🟠🟠🟠
கருப்பை தொடர்பான பிரச்சினைகளுக்கு இலந்தை இலை நல்ல மருந்தாக விளங்குகிறது.
இலந்தை இலை ஒரு பிடி அளவு எடுத்து, அதனுடன் 6 மிளகு, 4 பூண்டு பல்லு சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
இப்படி செய்து வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கி, வலியும் குறையும். கரு உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்
🟠🟠🟠🟠🟠
இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர, ஆறாத புண்ணும் ஆறும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தை இலையையும், பட்டையையும் ஒன்றிரண்டாக இடித்து குளிக்கின்ற நீரில் கலந்து காய்ச்சி குளித்து வர தலைக்குத்தல், குடைச்சல் நீங்கும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தையைப் பட்டையை இடித்து நீர்விட்டு கஷாயமாக காய்ச்சி குடித்து வர சுரம் தணியும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தை மரத்தின் வேரை அரைத்து பூச மூட்டு வலி குணமாகும்.
🟠🟠🟠🟠🟠
இதன் வேர்ப்பட்டையை இடித்து பிழிந்தச் சாற்றை 15 மில்லி அளவு குடிக்க மலச்சிக்கல் குணமாகும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தைப் பழத்தை உண்டவுடன் நீர் அருந்தக் கூடாது. அப்படி செய்தால் பேதி ஆகும்.
🟠🟠🟠🟠🟠
இலந்தைப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது தொடர்ந்து சில நாள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்வாய்வு உடல் வாகு கொண்டவர்கள் இந்தப் பழத்தை உண்ணாமல் இருப்பது நல்லது.
🟠🟠🟠🟠🟠
🌷🌷🌷🌷🌷
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
No comments:
Post a Comment