Monday, October 18, 2021

தொலைக்காட்சியுடன் சென்று பாடம் நடத்தி வரும் ஆசிரியர்.

தொலைக்காட்சியுடன் சென்று பாடம் நடத்தி வரும் ஆசிரியர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழை மாணாக்கர்களுக்கு உதவிடும் விதமாக, வீதிகள் தோறும் தொலைக்காட்சியுடன் சென்று பாடம் நடத்தி வரும் ஆசிரியரை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டியுள்ளார்.

சீர்காழி அருகே நெம்மேலியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சீனிவாசன். அந்தப் பள்ளியின் மாணாக்கர்களில் பலர் தொலைக்காட்சி வசதியற்றவர்கள் என்பதால், கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் பயில முடியாமல் இருப்பதைப் பார்த்துள்ளார். அவர்களுக்காக சொந்த செலவில் சக்கர நாற்காலியில் ஒலிபெருக்கி உள்ளிட்ட வசதிகளுடன் எல்இடி தொலைக்காட்சியை பொருத்தி, ஒவ்வொரு தெருவாகக் கொண்டுசென்று கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தி வருகிறார். இதுபற்றி புதிய தலைமுறையில் செய்தி ஒளிபரப்பானது. இந்நிலையில், ஆசிரியர் சீனிவாசனின் கல்வி சேவையை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு பாராட்டியுள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் ஆசிரியர் சீனிவாசனிடம் கல்விகற்கும் பிள்ளைகள் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள் என்பதில் ஐயமில்லை என குறிப்பிட்டுள்ளார்.


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி.

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒர...