Sunday, October 17, 2021

✍🏻👨‍💼👨‍💼இயற்கை வாழ்வியல் முறை👨‍💼👨‍💼👨‍💼புங்கை மரத்தின் நன்மைகள்.

✍🏻👨‍💼👨‍💼இயற்கை வாழ்வியல் முறை👨‍💼👨‍💼👨‍💼புங்கை மரத்தின் நன்மைகள்.

👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼

புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை. தீப் புண்களை ஆற்றும் சக்தி புங்கை மரத்தின் பட்டைக்கு உள்ளது. புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை இவை மூன்றையும் நன்கு அரைத்து புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.

👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼

புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் தீரும்.

👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼

பல் துலங்க நமது முன்னோர்கள் புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.

புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.


👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼

புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி உள்ளது புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼

புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும். இதில்லாமல், புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் ஆறும். புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்.

👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼

புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும். புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் . நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும். இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும்.

👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼

 புங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும். பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கலந்து சாப்பிட்டால் மதுமேக ரணங்கள் தீரும். இதை சாப்பிடும் போது புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் அசைவ உணவு சாப்பிடுதலை முற்றிலும் தவிர்க்கவும்.

👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🍩🍩🍩🍩🍩

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚 

 உடலில் உள்ள  எல்லா உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய  இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த   ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

🍩🍩🍩🍩🍩

(( செல் நம்பர்)) ((7598258480)) ((6383487768))

🍩🍩🍩🍩🍩

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH : 9750895059.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...