Tuesday, November 30, 2021

✍🏻🏕️🏕️இயற்கை வாழ்வியல் முறை🏕️🏕️நாட்டுக் கருவேல மரத்தின் நன்மைகள்.

✍🏻🏕️🏕️இயற்கை வாழ்வியல் முறை🏕️🏕️நாட்டுக் கருவேல மரத்தின் நன்மைகள்.

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேல மரம், தொன்மையான மரம் என்பதற்கு நிறைய மருத்துவ நூல்களில் அதன் நற்பயன்கள் எடுத்துரைக்கப்பட்டிருந்தாலும், பேச்சு வழக்கில் பண்டைக்காலம் தொட்டு இன்று வரை பேசப்படும் பழஞ்சொல்

🏕️🏕️🏕️🏕️🏕️

ஆலும் வேலும் பல்லுக்குறுதி

ஆல், ஆலமரக் கிளையை ஒடித்து, அதைக் கொண்டு பல் துலக்கி வர, பல் வலி மற்றும் பல் சம்பந்தமான அனைத்து பாதிப்புகளும் விலகும் என்றனர், பெரியோர். இதைப்போல அவர்கள் சொன்ன மற்றொரு மரம், கருவேல மரம்.

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேல மரத்தின் கிளைகளையும் உடைத்து, பல் துலக்கி வர, பல் பாதிப்புகள் விலகும் என்றனர். சிலர், வேல் என்றால் வேப்ப மரம் என்று எண்ணிக் கொண்டு, வேப்பங்குச்சிகளால், பல் துலக்கி வருவார்கள். அதுவும் நன்மைதான், கெடுதல் இல்லை, ஆயினும், இந்த பழஞ்சொல் குறிப்பிட்டது, ஆல மரத்தையும், கருவேல மரத்தையும் தான்.

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேல மரத்தின் உறுதித்தன்மை, அதில் நிறைந்துள்ள தாதுக்கள் மற்றும் உயிர்மச் சத்துக்கள், பல் துலக்கும்போது, வாயில் செயலாற்றி, பல் ஈறு வலி, பல் ஆடுவது, பல் கூச்சம் போன்ற பல் கோளாறுகளை சரி செய்யும் தன்மை மிக்கது

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேல மரத்திற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு

கருவேல மரத்தையும், இடையில் வந்த சீமைக் கருவேல மரத்தையும் மக்கள் ஒன்றென எண்ணிக் குழம்பிக்கொள்ள காரணம், அவை தோற்றத்தில் ஒன்று போல இருப்பதே. ஆயினும், இரண்டும் வெவ்வேறு தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது, உருவத்தில் மட்டும்தான் ஒற்றுமையே தவிர, செயலில், நற்பலன்களில் கருவேல மரமே, சிறந்தது. சீமைக்கருவேல மரம், அடுப்பெரிக்க மட்டுமே, பயன்படும்

🏕️🏕️🏕️🏕️🏕️

தேசத்தின் பாரம்பரிய மரங்களில் ஒன்று,, கருவேல மரம். பெரும்பாலும், செம்மண் நிலங்களில் வளரும் தன்மையுள்ளது, ஆயினும் தற்காலங்களில், எல்லா வகை இடங்களிலும், வளர்கிறது.

தனி மரங்களாக வளராமல், ஒரு குடும்பம் போல, கூட்டாக வளரும் இயல்புடைய கருவேல மரங்கள், வயல்வெளிகள், தோட்டங்களில் வேலியை க் காக்கும் மரங்களாக வளர்ந்திருப்பதை, நாம் கண்டிருக்கலாம். சிறிய வடிவிலான இலைகள் மற்றும் இல மஞ்சள் வண்ண பூக்களுடன் திகழும் கருவேல மரங்களின் காய்கள் அவரைக்காய் போல நீண்ட பட்டையான தோற்றத்தில் இருக்கும் சிறிய முடிகள் நிறைந்தவை.

🏕️🏕️🏕️🏕️🏕️

காற்றடிக்கும் காலங்களில், காய்ந்த காய்களின் உள்ளிருக்கும், விதைகளின் சத்தம் காற்றில், எழுப்பும் ஒலி, சலங்கை ஒலி போல ஒலிப்பதை, இந்த மரங்களை நாம் கடந்து செல்கையில் கேட்க முடியும். மிகவும் உறுதியான வைரம் பாய்ந்து காணப்படும் இந்த மரங்களின் பாகங்கள் விவசாயப் பொருட்கள் தயாரிப்பில் பயனாகின்றன

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேல மரத்தின் இலைகள் மற்றும் காய்கள் கால்நடைகளுக்கு சிறந்த உணவாகிறது. கருவேல மரத்தின் இலைகள், காய்கள் மரப்பட்டைகள் மற்றும் பிசின் அதிக மருத்துவப் பயன்கள் மிக்கவை. இரும்புச்சத்து, மற்ற தாதுக்கள், வைட்டமின்கள் இவற்றுடன் வாலைன், தெரோனின் மற்றும் லைசின் போன்ற அமினோ அமிலங்களும் மிகுந்து காணப்படுகின்றன

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேல மரம், பல் வலி பாதிப்புகளுக்கு மட்டுமல்ல, ஆண்களின் மகப்பேறின்மை பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகிறது உயிரணுக்களின் ஆற்றலை மேம்படுத்தி, உடல் நலத்தையும், மன நலத்தையும் காக்கும் சிறப்பு மிக்கது, கருவேலம் பட்டைகள் மற்றும் அதன் பிசின்

🏕️🏕️🏕️🏕️🏕️

பேதியைப் போக்கும், சுவாச பாதிப்புகளை சரியாக்கும், கொடிய வியாதிகளையும் போக்கும் வல்லமை மிக்கது, இந்த கருவேல மரம்

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேலம் இலைகளை அரைத்து, சாறெடுத்து, தண்ணீரில் கலந்து பருகி வர, உடல் சூட்டினால் ஏற்பட்ட பேதி மற்றும் வயிற்றுப் போக்கு பாதிப்புகள் விலகி, உடல் சோர்வு நீங்கும்

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேலம் பிஞ்சு பூக்களை தூளாக்கி, பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட, இருமல் விலகும்

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேலம் பட்டையை தூளாக்கி, அதை சிறிது நீரில் கலந்து, கொதிக்க வைத்து, குடிநீர் போலப் பருகி வர, சுவாசக் கோளாறுகளால், பேசமுடியாமல் தொண்டைக் கட்டிக்கொள்வது, தொண்டைப் புண் பாதிப்புகளை குணப்படுத்தும்

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேலம் பிசினை காயவைத்து, தூளாக்கி, அதை நெய்யில் கலந்து உண்டுவர, மகப்பேறின்மை பாதிப்புகள் அடைந்த ஆண்களின் உயிரணுக்கள் ஆற்றல் பெற்று, குழந்தைப் பேறு அடைய வாய்ப்பு ஏற்படும்

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேலம் பிசின் தான், அக்கால சிறுவர்களுக்கு பள்ளி பாட மபுத்தகங்கள் மற்றும் நோட்டுகளுக்கு அட்டை போடும் பிரௌன் தாளை ஓட்டும் பசையாகப் பயன்பட்டது.

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேல மரத்தில் இருந்து பிசினை சேகரித்து, அவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி, ஒரு கொட்டாங்குச்சி எனும் தேங்காய் மூடியில் இட்டு வைப்பார்கள். சற்று நேரம் கழித்து, தண்ணீரில் நன்கு ஊறியதால், தைலம் போல இருக்கும் பிசினை அட்டைகளின் ஓர மடிப்பை ஒட்டப் பயன்படுத்துவர் சிறுவர்கள்.

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேலம் பட்டைகள் உடல் உறுதியாக வலுவடைய வைக்கவும், இரத்த பாதிப்புகளை சரிசெய்யவும் மருந்தாகிறது. இத்தகைய சக்திமிக்க கருவேலம் பட்டைகளைக் கொண்டு, நாம் வீட்டிலேயே எளிய முறையில் பற்பொடி தயாரிக்கலாம்

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவேலம் பட்டைகளை உலர்த்தி, தூளாக்கி அத்துடன் கடுக்காய் தூள் அல்லது திரிபலா சூரணம் சேர்த்து நன்கு கலந்து அத்துடன் தூளாக்கிய கிராம்புகளை சிறிது சேர்த்து நன்கு கலக்கி, ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக்கொண்டு, தினமும், இந்தப் பொடியைக்கொண்டு கைகளால் பல் துலக்கி வர, பல் கூச்சம், ஈறு வலி மற்றும் பல் ஆடுவது போன்ற பாதிப்புகள் விலகி, பற்கள் பளிச்சென மின்னும்

🏕️🏕️🏕️🏕️🏕️

கருவக்காய்களைக் கொஞ்சம் நீர் ஊற்றி இடித்து வடித்துத் தேங்காய் உடைத்த கொட்டாங்குச்சிகளில் ஊறவைப்பர். ஊறிய நீரை வெய்யிலில் காயவைப்பர். அதன் சாறு கெட்டியானதும் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ளும் பொட்டுக்குப் பயன்படுத்துவர்

நன்றாக உலர்ந்து கெட்டியான இதன் பாலில் சொட்டு நீர் ஊற்றிக் குழைந்தும் பொட்டாகப் பயன்படுத்துவர். இந்தப் பொட்டு நிழலாடும். அதாவது அந்தப் பொட்டுக்குள் அடுத்தவர் தன் முகத்தைப் பார்க்கலாம்

இதைப் போலத் தமிழர் பயன்படுத்திய மற்றொரு பொட்டு வேங்கைப்பொட்டு. இது செங்கரு நிறம் கொண்டது. கருவம் பொட்டு கருகரு நிறம் கொண்டது.

🏕️🏕️🏕️🏕️🏕️

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

டிச.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு - 10 முக்கிய அறிவிப்புகள்.

டிச.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு - 10 முக்கிய அறிவிப்புகள்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

பெண் குழந்தை இருந்தால் அரசின் ரூ.50,000 நிதியுதவியை பெறலாம்.

பெண் குழந்தை இருந்தால் அரசின் ரூ.50,000 நிதியுதவியை பெறலாம். 

குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, திருமணம் போன்றவற்றிற்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.. அதில் ஒன்று தான், தமிழக முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், ரூ.50,000, 2 பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.25,000 வழங்கப்படுகிறது. மேலும் அந்த பெண் குழந்தைக்கு 18 வயது முதிர்வடைந்த பிறகு முதிர்வுத்தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நலப் பிரிவு அலுவலர், மகளிர் நல அலுவலர்களிடம் இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை பெற முடியும்.. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பர்ப்பித்தால் அரசின் இந்த நிதியுதவியை பெற முடியும்..

என்னென்ன ஆவணங்கள் தேவை :

  • அசல் வைப்புநிதிப் பத்திரம்
  • பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல்
  • பயனாளியின் பெயரில் தனி வங்கிக் கணக்குப் புத்தக நகல்

என்னென்ன நிபந்தனைகள் :

  • ஒரே ஒரு பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது.
  • இத்திட்டத்தில் விண்ணப்பித்த பிறகு ஆண் குழந்தைகளை தத்து எடுக்க கூடாது.
  • பெண் குழந்தைக்கு 3 வயது நிறைவடவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். .
  • 40 வயதுக்குள் குழந்தைகளின் தாய், குடும்பநல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
  • ரூ.72,000-க்குள் வருமானம் இருப்பதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்..
  • ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Monday, November 29, 2021

BSNL க்கு திரும்பும் வாடிக்கையாளர்கள்- Airtel, Jio, Vodafone மீது வாடிக்கையாளர்கள் கோபம்.

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா...?தொடங்கி விட்டதா மூன்றாவது அலை...?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...