பெண் குழந்தை இருந்தால் அரசின் ரூ.50,000 நிதியுதவியை பெறலாம்.
குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, திருமணம் போன்றவற்றிற்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.. அதில் ஒன்று தான், தமிழக முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், ரூ.50,000, 2 பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.25,000 வழங்கப்படுகிறது. மேலும் அந்த பெண் குழந்தைக்கு 18 வயது முதிர்வடைந்த பிறகு முதிர்வுத்தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நலப் பிரிவு அலுவலர், மகளிர் நல அலுவலர்களிடம் இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை பெற முடியும்.. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பர்ப்பித்தால் அரசின் இந்த நிதியுதவியை பெற முடியும்..
என்னென்ன ஆவணங்கள் தேவை :
- அசல் வைப்புநிதிப் பத்திரம்
- பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல்
- பயனாளியின் பெயரில் தனி வங்கிக் கணக்குப் புத்தக நகல்
என்னென்ன நிபந்தனைகள் :
- ஒரே ஒரு பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது.
- இத்திட்டத்தில் விண்ணப்பித்த பிறகு ஆண் குழந்தைகளை தத்து எடுக்க கூடாது.
- பெண் குழந்தைக்கு 3 வயது நிறைவடவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். .
- 40 வயதுக்குள் குழந்தைகளின் தாய், குடும்பநல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
- ரூ.72,000-க்குள் வருமானம் இருப்பதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்..
- ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment