Wednesday, November 3, 2021

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை - அரசாணை வெளியீடு.

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை - அரசாணை வெளியீடு.

இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு  வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‌'‌'தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்‌பேரவையில்‌, கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல்‌துறை மானியக்‌ கோரிக்கையின்‌ மீதான விவாதத்திற்கு பதிலளித்துப்‌ பேசுகையில்‌, ‌'காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌ நலனைப்‌ பேணிக்‌ காத்திட ஏதுவாகவும்‌, தங்களது குடும்பத்தாருடன்‌ போதிய நேரம்‌ செலவிடுவதற்காகவும்‌, இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்கள்‌ முதல்‌, தலைமைக்‌ காவலர்‌ வரையிலான காவலர்கள்‌ அனைவருக்கும்‌ வாரத்தில்‌ ஒரு நாள்‌ ஓய்வு வழங்கப்படும்‌' என்று அறிவித்தார்‌.

இந்த அறிவிப்பினைச்‌ செயல்படுத்தும்‌ விதமாக, காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌ நலனைப்‌ பேணிக்‌ காத்திட ஏதுவாகவும்‌, தங்களது குடும்பத்தாருடன்‌ போதிய நேரம்‌ செலவிடுவதற்காகவும்‌, இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்கள்‌ முதல்‌, தலைமைக்‌ காவலர்‌ வரையிலான காவலர்கள்‌ அனைவருக்கும்‌ வாரத்தில்‌ ஒரு நாள்‌ ஓய்வு வழங்கிட தமிழக முதல்-அமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் இன்று (3-11-2021) உத்தரவிட்டுள்ளார்‌. அதற்கான அரசாணை இன்றைய தினம்‌ பிறப்பிக்கப்பட்டுள்ளது .

காவலர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு, முதல்-அமைச்சர்  வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல்‌ பணியில்‌ இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும்‌ காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும்‌, உற்சாகத்தோடும்‌ தங்கள்‌ பணியினை அவர்கள்‌ மேற்கொள்ள வழிவகுக்கும்‌'‌'.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.




இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...