✍🏻☔☔இயற்கை வாழ்வியல் முறை☔☔கோபுரம் தாங்கி பயன்கள்.
☔☔☔☔☔
கோபுரம் தாங்கி செடியானது, நில வேம்புவை போன்று இருக்கும். இதன் பூக்கள் வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் காணப்படும். விதைகள் நெல் போன்று இருக்கும்.
☔☔☔☔☔
கோபுரம் தாங்கி செடியை பயன்படுத்தி வயிற்றுப்போக்கு, சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்றை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.
☔☔☔☔☔
இலை, விதை, தண்டு அடங்கிய கோபுரம் தாங்கி செடி ஒரு பிடி அளவு எடுத்து கொள்ளவும்.
☔☔☔☔☔
அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
☔☔☔☔☔
இதை வடிகட்டி குடிக்கும் போது வயிற்றுப்போக்கு, நீர்த்தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும்.
☔☔☔☔☔
ஒரு பங்கு இலை பசையுடன், இரண்டு பங்கு நல்லெண்ணை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை தலைக்கு தேய்த்தால் முடி உதிர்வது கட்டுப்படும். புழுவெட்டு சரியாகும். முடி வளரும். இது தலை சூடு, வியர்வையை தணிக்கும்.
☔☔☔☔☔
சம அளவில் இலை பசையை, கடுகு எண்ணையுடன் சேர்த்து குழம்பு பதத்தில் காய்ச்சி எடுக்கவும்.
☔☔☔☔☔
இதை பாம்பு, தேள், பூச்சிகள் கடித்த இடத்தில் மேல்பூச்சாக போடும்போது விஷம் தணிக்கிறது. கடி வாயில் பூசினால் வலி, வீக்கம் குறையும்.
☔☔☔☔☔
இதன் இலையை அரைத்து நெற்றியில் போடும் போது தலைவலி சரியாகும்.
☔☔☔☔☔
வேர் பகுதியை காயவைத்து பொடித்து வைத்து, காலை மற்றும் மாலையில் சிறிதளவு சாப்பிடும் போது எலும்புகள், தசைகள் பலப்படும். உடல் தேற்றியாக பயன்படுகிறது. சோர்ந்த உடலுக்கு பலம் தருவதாக அமைகிறது.
☔☔☔☔☔
கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, 500 மில்லியாக சுண்ட வைத்து வடிகட்டி காலை மாலை உணவுக்கு முன் குடித்து வந்தால் சிறுநீர் நன்கு வெளியேறும்
☔☔☔☔☔
சிறுநீர் எரிச்சல் குறையும். கோபுரந்தாங்கி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிடவும். கால், கை, மூட்டுகளில் ஏற்படும் வலியை விரட்டும்.
☔☔☔☔☔
கோபுரந்தாங்கி இலைகளை ஐம்பது இலைகள் அளவுக்கு எடுத்துக் கொண்டு, அந்த இலைகளைப் பிழிந்து சாறெடுத்து தனியே வைத்துக் கொண்டு, ஒரு இரும்பு வாணலியில் கால் லிட்டர் நல்லெண்ணெய் விட்டு, சற்று சூடானதும், கோபுரந்தாங்கி இலைச்சாறை எண்ணெயில் கலந்து, இலையின் பச்சை வண்ணம் முழுக்க முழுக்க எண்ணெயில் நன்கு இறங்கும்வரை கொதிக்க வைத்து, பின்னர் இந்த எண்ணெய் ஆறியதும், ஒரு குடுவையில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.
தடவும் முறை
குளிக்க செல்லும்போது, கோபுரந்தாங்கி தைலத்தை தலையில் தடவி, அரை மணி நேரம் நன்கு எண்ணெய் தலையில் ஊறிய பின், தலையை சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பு தேய்த்து நன்கு அலசி குளித்து வந்தால், தலை மற்றும் உடல் சூடு குறைந்து விடும். உடல் குளிர்ச்சி அடைந்து, கண் பார்வை மேம்படும், தலைமுடி உதிர்தல் குணமாகி, தலைமுடி கருமையாக நன்கு அடர்த்தியாகவுமு் செழித்து வளரச் தொடங்கும்
☔☔☔☔☔
சிலருக்கு, தலைமுடி சில இடங்களில், கொத்து கொத்தாக முடி கொட்டி ஆங்காங்கே சொட்டையாக முடி நீங்கி இருக்கும், விஷ ப்பூச்சிகளின் கடியினாலோ அல்லது அவற்றின் எச்சத்தாலோ உண்டாகும் இந்த பாதிப்புகள், மிகப்பெரிய மன அழுத்தத்தைக் கொடுக்கும். அதை எப்படி மீண்டும் வளரச் செய்வது என்றும் தெரியாது. இதனாலேயே சிலர் வெளியில் செல்வதற்குக் கூட தயங்குவார்கள்.. இந்த புழுவெட்டு பாதிப்புகள் நீங்க, கோபுரந்தாங்கி தைலம் ஒரு வரப்பிரசாதமாகும். கோபுரந்தாங்கி இலைகளை அரைத்துச் சாறெடுத்து தலையில் தேய்த்து குளித்து வர, தலைப் புண், புழு வெட்டு, படை போன்றவை குணமாகி, முடி கொத்தாக உதிர்ந்த இடங்களில் திரும்பவும், முடி கருகருவென வளர ஆரம்பிக்கும்.
☔☔☔☔☔
🌷🌷🌷🌷🌷
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment