Sunday, December 19, 2021

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மகாகவி பாரதியாரின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் போட்டிகள்.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மகாகவி பாரதியாரின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் போட்டிகள்.



புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி தமிழாய்வுத் துறையில் 17-12-2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மகாகவி பாரதியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். திருச்சி தேசியக் கல்லூரி தமிழாய்வுத் துறைப் பேராசிரியர் முனைவர் இரா. பத்மா அவர்கள் நடுவராக பொறுப்பேற்று வெற்றியாளர்களைத்  தேர்ந்தெடுத்து சிறப்புரை வழங்கினார். மதியம் 2 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழாய்வுத் துறைப் பொறுப்பாளர் முனைவர் சி. பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா. பொன் பெரியசாமி அவர்கள் தலைமை உரையாற்றினார். தலைமை உரையில் காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு- என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா என்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் எடுத்துரைத்தார்.


கல்லூரி தலைவர் திரு .பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழாய்ந்த தலைவர்களின் பிறந்த நாளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துவதன் மூலம் மாணவர்களின் தனித்திறனை அறிய முடியும் என வாழ்த்துரை வழங்கினார். மேலும் நிகழ்வில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி சுந்தரம், கல்லூரி தலைவர் அவர்களின் தவப் புதல்வர் பா. சூரியா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தமிழாய்வுத் துறை பேராசிரியர் அ. சசிகலாதேவி நன்றியுரை கூறினார். தமிழாய்வுத் துறை மாணவர்கள் செ.கன்னிகா ரெ. சௌந்தர்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.











இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...