Saturday, December 18, 2021

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் "வேதியியல் மன்ற துவக்க விழா"

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் "வேதியியல் மன்ற துவக்க விழா" 

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் வேதியியல் ஆராய்ச்சி துறை சார்பில் "வேதியியல் மன்ற துவக்க விழா" 18/12/2021 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இவ்விழாவின் துவக்கமாக வரவேற்புரையை துறைத்தலைவி முனைவர் அ.கஸ்தூரி அவர்கள் வழங்கினார்கள். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் வேதிப்பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் பதிவாளருமான முனைவர் M.அறிவழகன் அவர்கள் வேதியியல் மன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் மாசு கட்டுப்பாடு, ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சியில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் எடுத்து கூறினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் A.R.பொன்பெரியசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் Er.பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் வேதியியலின் அவசியம் குறித்தும் அடிப்படை பயன்பாட்டில் வேதியியல் என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சி சுந்தரம் அவர்களும் வாழ்த்துரை வழங்கி விழாவினை சிறப்பு செய்தனர். மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக முதுகலை மாணவன் S.கார்த்திக் நன்றிவுரை கூறி விழாவினை நிறைவு செய்தார். இவ்விழா சிறப்பாக நடைபெற வேதியியல் துறையின் அனைத்து பேராசிரியர்களும் மற்றும் மாணவர்களும் ஒத்துழைப்பு நல்கினர். நாட்டு வாழ்த்தோடு விழா இனிதே நிறைவுபெற்றது.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. எப்போது , எங்கு நிகழும்.

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. எப்போது , எங்கு நிகழும். செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சந்திரன் சந்திர கிரகணம் நடைபெற்றது. அப்போது நி...