Tuesday, December 28, 2021

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31%ஆக உயர்வு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31%ஆக உயர்வு


தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான அகவிலைப்படி 17% லிருந்து 31%ஆக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மேலும் சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ரூ. 3 ஆயிரம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு ரூ.1000, ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசாகவும் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.

அதேபோல் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை ஜனவரி 1-ஆம் தேதிமுதல் 17%லிருந்து 31% ஆக உயர்த்தி வழங்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் போனஸ் வழங்க ரூ.8,894 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தவிட்டிருக்கிறார்.







GO Order Link

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...