ஜனவரி 20 வரை பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை- தமிழக அரசு.
- ததமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
- தமிழ்நாட்டில் கோவிட்19 தொற்றை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- ஞாயிற்றுக்கிழமை உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி.
- திருமண நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதி; தமிழ்நாடு அரசு.
- ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்வோர் அலுவலக அடையாள அட்டை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு.
- அனைத்து தனியார்/அரசு சார்பில் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது; தமிழ்நாடு அரசு.
- அனைத்து பள்ளிகளிலும், 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை; தமிழ்நாடு அரசு.
- மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி மறுப்பு; தமிழ்நாடு அரசு.
- கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாளை முதல் பயிற்சி நிலையங்கள் (Training and coaching centres) செயல்பட தடை; தமிழ்நாடு அரசு
- அரசு, தனியார், மருத்துவம் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளைத் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு ஜன.20ம் தேதி வரை விடுமுறை; தமிழ்நாடு அரசு
- அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி; தமிழ்நாடு அரசு.
- சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்; தமிழ்நாடு அரசு.
- இரவு நேர ஊரடங்கின்போது பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி; தமிழ்நாடு அரசு.
- அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது மக்களுக்கு அனுமதி மறுப்பு; தமிழ்நாடு அரசு.
- பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது; தமிழ்நாடு அரசு.
- மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து போக்குவரத்து தொற்று பாதுகாப்பு நெறிமுறைகளுடன் தொடர அனுமதி; தமிழ்நாடு அரசு.
- கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பேருந்து, புறநகர் இரயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி; தமிழ்நாடு அரசு.
- கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்; தமிழ்நாடு அரசு.
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment