Tuesday, January 25, 2022

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த

  • சிற்பி பால சுப்பிரமணியம் (இலக்கியம்)
  • சமூக சேவகர் தாமேதரன்
  • செளகார் ஜானகி (கலை)
  • முத்து கண்ணம்மாள் (கலை)
  • வீரசாமி (மருத்துவம்)
  • ஏ.கே.சி. நடராஜன் (கலை)

ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு.

2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் - பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள்/சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன.

மிக அரிய மற்றும் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம விபூஷன்’ விருதும், மிக உயரிய வகையில் தலைச்சிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம பூஷன்’ விருதும், எந்தத் துறையிலும் தலைசிறந்த பணியாற்றியவர்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2022-ம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில், பழம்பெருமை நடிகை செளகார் ஜானகியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கலை - இலக்கிய பிரிவில் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.







No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...