Monday, January 17, 2022

✍🏻🛌🛌இயற்கை வாழ்வியல் முறை🛌🛌உடலும் உணவும் உறக்கமும்.

✍🏻🛌🛌இயற்கை வாழ்வியல் முறை🛌🛌உடலும் உணவும் உறக்கமும்.

🛌🛌🛌🛌🛌

ஆரோக்கியமான தூக்கம் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. தூக்கம் வர எளிய வழிகள் சிலவற்றை பார்க்கலாம்.

🛌🛌🛌🛌🛌

மனிதனின் அன்றாட வாழ்வில் மிகவும் இன்றியமையாதது தூக்கம். உணவு இல்லமல் கூட ஒரு சில நாட்கள் உயிர் வாழலாம் ஆனால் தூக்கம் இல்லமால் உயிர் வாழ்வது கடினமான ஒன்று.

🛌🛌🛌🛌🛌

ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தூங்கி எழுந்தால் மட்டுமே உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.


🛌🛌🛌🛌🛌

தினமும் 6 தொடக்கம் 8 மணிநேர தூக்கம் அனைவருக்கும் அவசியம். 10 மணிக்கு முதல் வெளிச்சம் இல்லாமல் இருட்டில் தூங்குவது சிறந்தது.

🛌🛌🛌🛌🛌

தூக்கத்தின் நன்மைகள்

 🛌🛌🛌🛌🛌

 சில எளிய வழிகள்

தூக்கத்தின் நன்மைகள்

ஆழ் நிலை தூக்கத்தில் தான் உடல் தன்னை தானே குணப்படுத்திக் கொள்கின்றது

🛌🛌🛌🛌🛌

நாம் தூங்கும் போது தான் மூளைக்கு தேவையான ஓய்வு கிடைக்கின்றது. நல்ல தூக்கம் மூளை நன்றாக தொழிற்பட உதவுகின்றது.

🛌🛌🛌🛌🛌

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலைகள் தூக்கத்தில் தான் நடக்கின்றது.

🛌🛌🛌🛌🛌

இருட்டில் சரியான நேரத்துக்கு தூங்கும் போது மெலோடினின் என்ற சுரப்பி சுரக்கின்றது. மெலோடினின் என்ற சுரப்பி சுரப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

🛌🛌🛌🛌🛌

உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

இளமைத் தோற்றத்தை பாதுகாக்கிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.

உடல் வளர்சிக்கு தேவையான கோர்மோன்கள் சுரப்பதற்கு மெலோடினின் உதவுகின்றது.

மெலோடின் சுரப்பி சுரப்பது தடைப்படும் காரணிகள்


🛌🛌🛌🛌🛌

வெளிச்சத்தில் உறங்குவது

புகைபிடிக்கும் பழக்கம்

அதிக மன அழுத்தம்

சூரிய ஒளி உடலுக்கு படாமல் இருத்தல்

உடல் ஆரோக்கியத்திற்கு மெலோடினின் மிகவும் முக்கியமானது மெலடோனின் அளவு உடலில் குறையும் போது பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் உடலில் ஏற்படும்

🛌🛌🛌🛌🛌

இரவு தூக்கம் இன்மையால் ஏற்படும் பிரச்சனைகள்

சரியான அளவு தூக்கமின்மை மற்றும் சரியான நேரத்திற்கு தூங்கவில்லை என்றால் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல பாதிப்புக்கள் ஏற்படும்

நரம்புத் தளர்ச்சி

ஆண்மை குறைபாடு

பெண்களுக்கு கருச்சிதைவுகரு உருவாவதில் தாமதம் ஏற்படுதல்

உடல் உஷ்ணமாதல்

மலச்சிக்கல் ஏற்படுதல்.

கண் எரிச்சல்

தலை வலி, தலை சுற்று, தலை இடி.

ஞாபக மறதி.

சோம்பல்.

உடல் வலி

பசியின்மை மற்றும் சாப்பிட இயலாமை.

வயிற்றுப்பொருமல் மற்றும் வாந்தி

🛌🛌🛌🛌🛌

ஒரு மனிதன் 10 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கவில்லை என்றால் ஒன்று இறப்பு ஏற்படும் இல்லையென்றால் மனநிலை பாதிப்பு ஏற்படும்

🛌🛌🛌🛌🛌

சரியான தூக்கம் வராமைக்கான காரணங்கள்

அதிக மன அழுத்தம்

அதிக வேலைப் பளு.

தவறான வேலைப்பளுபோதைப்பழக்கம்.

🛌🛌🛌🛌🛌

 நமக்குச் சீரான தூக்கத்தைத் தரும் சில உணவுகள் இங்கே

🛌🛌🛌🛌🛌

தூங்குவதற்கு முன்னர் சூடாகப் பால் குடித்துவிட்டு தூங்கினால், இரவு அமைதியான நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இதற்குப் பாலில் இருக்கும் கால்சியம் சத்துதான் முக்கியக் காரணம். பால் மெலட்டோனின் ஹார்மோன் மற்றும் ட்ரிப்டோஃபேன் அமினோ அமிலம் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்தும். பால் பொருள்களான சீஸ், தயிர், மோர் என அனைத்துமே உறக்கத்துக்கு மிகவும் நல்லவை. உடல்பருமனாக இருப்பவர்கள், அதிக எடையுடன் இருப்பவர்கள் லோ-ஃபேட் பால் பொருள்களைப் பயன்படுத்தலாம்

🛌🛌🛌🛌🛌

கடல் உணவுகளில் நமக்கு அதிகம் கிடைப்பது மீன்தான் மீன்களில் காலா மீன், மத்தி மீன் போன்றவை உறக்கத்துக்கு மிகவும் உதவுபவை. இதிலுள்ள வைட்டமின் டி, ஒமேகா 3 அமிலம், நல்ல கொழுப்புச்சத்து முதலியவை தூக்கத்தைத் தூண்டுபவை

🛌🛌🛌🛌🛌

அடர் பச்சை நிறத்திலுள்ள கீரைகள் அனைத்துமே தாதுப்பொருள்கள், வைட்டமின்கள் ட்ரிப்டோஃபேன் அமினோ அமிலம் நிறைந்தவை. கீரைகளில் மக்னீசியம், கால்சியம் அதிகம் இருக்கும். இரவில் கீரையை சாலட்டில் (Salad) கலந்து சாப்பிடுவது, சாறாக உட்கொள்வது போன்றவை `லேக்டுகேரியம்’ (Lactucarium) என்ற ஒருவகை பால் திரவ (Milk Fluid) உற்பத்தியைத் தூண்டக்கூடியது. இது நல்ல தூக்கம் வரச் செய்யும். சிலர் இரவில் கீரை சாப்பிட மாட்டார்கள். அவர்கள் மதிய உணவில் கீரையைச் சேர்த்துக்கொள்ளலாம்

🛌🛌🛌🛌🛌

பழங்கள்

ஆப்பிள் அவகேடோ, வாழைப்பழம், கிவி பழம் போன்றவை உறக்கத்துக்கு உத்தரவாதம் தருபவை. இரவு வேளையில் பால் குடித்த பிறகு வாழைப்பழம் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், படுக்கையில் தூக்கம் வர சிரமப்படுபவர்கள்; தூக்கத்துக்கு இடையில் கண்விழிக்கிறவர்கள் உறங்கப்போவதற்கு முன்னர் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடலாம். நிம்மதியான உறக்கத்தை தரும்.

🛌🛌🛌🛌🛌

நட்ஸ்

பேரீச்சம் பழம், பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டுவருவது, உடலில் உள்ள கால்சியம் குறைபாட்டைச் சீர்செய்யும். நட்ஸின் மூலம் நல்ல கொழுப்புச்சத்து, வைட்டமின், தாதுச் சத்துகள், ஒமேகா 3 அமிலம் எனப் பல சத்துகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு 20 கிராம் என்ற விகிதத்தில் நட்ஸ் சாப்பிடலாம் எனப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்

🛌🛌🛌🛌🛌

மேலே குறிப்பிட்ட உணவுகள் மட்டுமல்லாமல், பூசணி விதை, ஓட்ஸ் கஞ்சி, புளிப்புச் சுவை கொண்ட செர்ரி பழங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ் வகைகள், காய்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உறக்கத்துக்கு உதவும். அதற்காக இரவில் மட்டுமே இவற்றைச் சாப்பிடுவது தவறு. நல்ல தூக்கத்துக்கு, சரியான நேரத்தில்; சரியான உணவைச் சாப்பிடவேண்டியது மிக அவசியம். அதேபோல மன இறுக்கமில்லாத சூழலும், ரிலாக்ஸான மூடும் உறக்கத்துக்கு மிக அவசியம்

🛌🛌🛌🛌🛌

நன்றாக தூக்கம் வர சில இயற்கை  வழிமுறைகள்

🛌🛌🛌🛌🛌

வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித் தால் நன்றாக தூக்கம் வரும்

🛌🛌🛌🛌🛌

ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்னை தீரும்

🛌🛌🛌🛌🛌

முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும்

🛌🛌🛌🛌🛌

மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் தூக்கம் வரும்.

🛌🛌🛌🛌🛌

  மருதாணிப் பூக்களை தலையணையின் அடியில்

வைத்துத் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வரும்

🛌🛌🛌🛌🛌

மணலிக் கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி இரவு நேரத் தில் தினமும் 2கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நன்றாக  தூக்கம் வரும்.

🛌🛌🛌🛌🛌

மணலிக் கீரையை உலர் த்திப் பொடியாக்கி தின மும் காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் டென்ஷன் குறைந்து நல்ல தூக்கம் வரும்

🛌🛌🛌🛌🛌

20 கிராம் கொத்தமல்லியுடன், 3 கிராம் கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்

🛌🛌🛌🛌🛌

உணவில் கவனம் எடுத்துக்கொள்வதுபோலவே சில வாழ்வியல் முறைகளிலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மதிய நேர தூக்கத்தைத் தவிர்ப்பது, படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு குட்டி வாக் போவது, சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கும் இடையில் ஒரு மணி நேரம் இடைவெளிவிடுவது, படுக்கையில் போன், லேப்டாப் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் இருப்பது, சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்வது போன்றவையும் தூக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும். மது, புகை போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

சீக்கிரம் தூக்கம் வர எளிமையான வழிமுறை மெல்லிய இசை கேட்பது புத்தகம் படிப்பது

 ஒரு நல்ல தூக்கம் மட்டுமே அழகான, ஆரோக்கியமான விடியலை நமக்குத் தரும்; ஒரு நல்ல விடியல்தான் ஒரு நல்ல நாளுக்கான தொடக்கம். அதற்கு இன்றைக்கே அடித்தளமிடுவோம்.


🛌🛌🛌🛌🛌

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...