Tuesday, January 18, 2022

செயற்கை நிலா - சீன விஞ்ஞானிகள் சாதனை.

செயற்கை நிலா - சீன விஞ்ஞானிகள் சாதனை.

ஈர்ப்பு விசை சார்ந்த ஆய்வுகளை எளிதாக மேற்கொள்ள வசதியாக சிறிய செயற்கை நிலவை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

அண்டை நாடான சீனா, விண்வெளி ஆய்வில் வேகமாக முன்னேறி வருகிறது. மின் செலவை குறைக்க ஏற்கனவே செயற்கை சூரியனை சீனா உருவாக்கி உள்ளது. இந்நிலையில் உலகிலேயே முதன் முறையாக செயற்கை நிலவை சீனா உருவாக்கி உள்ளது.

இது குறித்து, இத்திட்டத்தின் தலைவரும், சீன சுரங்கம் மற்றும் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானியுமான லி ருய்லின் கூறியதாவது:
நிலவைப் போலவே செயற்கை நிலவை உருவாக்கி உள்ளோம். நிலவில் ஈர்ப்பு விசை இல்லை என பலர் நினைக்கின்றனர். அது தவறு. புவியீர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு, நிலவில் உள்ளது. இதற்கு அங்கு நிலவும் காந்த அலைகள் தான் காரணம். இத்தகைய குறைந்த ஈர்ப்பு விசையை விமானம் அல்லது 'டிராப் டவர்' சோதனையில் தற்காலிகமாக உருவாக்க முடியும்.

ஆனால் செயற்கை நிலவில் இத்தகைய ஈர்ப்பு விசையை நாம் விரும்பும் காலம் வரை நீட்டித்துக் கொள்ளலாம். இதனால் சீனா, பிற நாடுகளைப் போல ஈர்ப்பு விசையற்ற விமானங்களில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல் ஆய்வுகளை சுலபமாக மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...