Tuesday, January 11, 2022

உலகில் முதல்முறையாக பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை.

உலகில் முதல்முறையாக பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை.

அமெரிக்காவில் 57 வயது மனிதருக்கு பன்றியின் இதயத்தைப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மிகவும் சிக்கலான இந்த மாற்று அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு, அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதேபோன்ற ஒரு அறுவை சிகிச்சை முறை, 24 ஆண்டுகளுக்கு முன்பே சோதனை செய்து பார்க்கப்பட்டது.


அசாம் மாநிலத்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் Dr.தனிராம்-பருவா, இதயக் கோளாறு உள்ள 32 வயது நபருக்கு பன்றியின் இதயத்தையும் நுரையீரலையும் மாற்றம் செய்தார். ஆனால், உடலில் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த நபர் ஒரு வாரம் கழித்து உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் பல இடங்களில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மனித உறுப்புகள் மாற்றுச் சட்டம்-1994இன் கீழ் மருத்துவர் பருவா கைது செய்யப்பட்டு 40 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தை விசாரித்த அசாம் மாநில அரசு, இந்த மாற்று அறுவை சிகிச்சை சோதனை முறை "நெறிமுறையற்றது" என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...