Sunday, January 9, 2022

✍🏻📍📍இயற்கை வாழ்வியல் முறை📍📍இரத்தம் தூய்மை அடைய இயற்கை வழிமுறைகள்.

✍🏻📍📍இயற்கை வாழ்வியல் முறை📍📍ரத்தம் தூய்மை அடைய இயற்கை வழிமுறைகள்.

📍📍📍📍📍

ஆரோக்கியமான சருமத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ரத்தம் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக முகப்பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் தோன்றலாம். மேலும் தூய்மையற்ற ரத்தம் ஒவ்வாமை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை தடையின்றியும், சீராகவும் கொண்டு செல்வதற்கு இரத்த சுத்திகரிப்பு முக்கியமானது. சில வகை உணவு பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் ரத்தத்தை சுத்திகரிப்பது பற்றி பார்ப்போம்.

📍📍📍📍📍

பீட்ரூட் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்வதற்கு பீட்ரூட் பரிந்துரைக்கப்படுகிறது. அதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் ரத்தத்தை சுத்திகரிக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். கல்லீரலின் செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்யும்.

📍📍📍📍📍

வெல்லம் இது இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் இரும்பு சத்து உடலில் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு வழிவகை செய்யும். ரத்தக்கட்டிகளையும் நீக்க உதவும். இதுதவிர ஹீமோகுளோபின் அளவை மீட்டெடுப்பதற்கும் வெல்லம் உதவும். செரிமானத்திற்கும் துணைபுரியும்

📍📍📍📍📍

துளசி: ரத்தம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட ஒட்டுமொத்த உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி துளசிக்கு இருக்கிறது. அனைத்து நச்சுக்களையும் சிறுநீர் மூலம் வெளியேறவும் வைத்துவிடும். தினமும் ஏழு, எட்டு துளசி இலைகளை சாப்பிடலாம். ஒரு கப் துளசி தேநீரும் பருகலாம்

📍📍📍📍📍

மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக விளங்கும் மஞ்சள் ரத்தத்தில் உள்ள நச்சுக்கூறுகளை சுத்தம் செய்வதற்கும் உதவும். பாலுடன் மஞ்சள் கலந்து பருகலாம்.

📍📍📍📍📍

கேரட்டில் உள்ள சத்துகள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. கேரட்டை ஜூஸ் வடிவில் உட்கொள்வது மிகவும் சிறந்தது. இதனால் உடலுறுப்புகள் சுத்தமாகும் செயல்முறை ஊக்குவிக்கப்படும்.

📍📍📍📍📍

செம்பருத்திப் பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 கிளாஸ் வெந்நீரில்  1 ஸ்பூன் செம்பருத்தி பூவின் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடலின் சோர்வை குறைந்து ரத்தத்தை தூய்மை அடையச் செய்யும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி  நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.


📍📍📍📍📍

இரத்தம் சக்திமிகு திரவமாக இருக்க முருங்கை கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வாழைப்பூ, நாவல் பழம், உலர்ந்த திராட்சை, முளைகட்டிய தானியங்கள் ஆகியவை அடிக்கடி நான் உணவில் சேர்க்க வேண்டும்.

📍📍📍📍📍

இரத்தம் சுத்தமாக சில வழி முறைகள்

கடுக்காய்ப்பொடி 5 கிராம், கிராம்பு பொடி 4 கிராம் இரண்டையும் சேர்த்து 100 மிலி நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி சிறிதளவு நெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க 2,3 தடவை பேதியாகும். இது போல் வாரம் ஒரு முறை அல்லது அவ்வப்போது செய்து வர இரத்தத்தை தூய்மையாக்கும்.

📍📍📍📍📍

புளிச்சக்கீரையை துவையலாக செய்து சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தப்படுத்தி அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.

📍📍📍📍📍

இஞ்சியை நன்றாக இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தமாக்கும்.

📍📍📍📍📍

இலந்தை பழம் சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

பூண்டு இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

📍📍📍📍📍

புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு கழுவி பின் இரண்டு இலைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும். இந்த மருத்துவத்தை வேப்பிலை தளிரும் காலத்தில் ஒரு மாதம் முழுவதும் வருடத்திற்கு ஒரு முறை என பழக்க படுத்திக் கொண்டால் ஆயுளுக்கும் ரத்தம் சுத்தமாக இருக்கும்.

📍📍📍📍📍

அருகம்புல் சாறுடன் கீழாநெல்லி சேர்த்து அரைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாவதோடு ரத்தமும் தூய்மையாகும்.

📍📍📍📍📍

ரத்தம் சுத்தமாக தண்டுக் கீரை, மிளகு , மஞ்சள், தேங்காய்பால் மருந்து

தண்டுக் கீரையை களைந்து அதனுடன் சிறிது மிளகு , சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும் ரத்தமும் சுத்தமாகும்.

📍📍📍📍📍

சித்த மருத்துவத்தில் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் மூலிகைகளாக பரங்கிப்பட்டை நெல்லிக்காய், வில்வம், வல்லாரை, வெங்காயம், அருகம்புல் போன்ற இயற்கை மூலிகைகள் பயன்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டையோ காலை மாலை  வேளைகளில் உணவுக்கு சற்று முன் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு தண்ணீருடனோ, வெந்நீரிலோ கலந்து வாயில் போட்டு  ஒரு நிமிடம் வைத்திருந்து பின் விழுங்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு விடும். அதில் வளரும்  கிருமிகள் அழிக்கப்படும்

 📍📍📍📍📍

இதில் அருகம்புல்லும், வில்வமும்,  சாதாரண அரிப்பையும், படர்தாமரை எனப்படும் தோல் வியாதியையும் உடனே போக்கி மிக விரைவில் பலன் தரும்.

📍📍📍📍📍

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...