Saturday, January 8, 2022

✍🏻🪙🪙இயற்கை வாழ்வியல் முறை🪙🪙நாயுருவி மூலிகையின் நன்மைகள்.

✍🏻🪙🪙இயற்கை வாழ்வியல் முறை🪙🪙நாயுருவி மூலிகையின் நன்மைகள்.

🪙🪙🪙🪙🪙🪙

நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென தனித்துவமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கச் செய்யும்; ஆரோக்கியம் தரும்; காய்ச்சலைத் தடுக்கும்; கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும்

நாயுருவி அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய சிறுசெடி. நாயுருவி இலைகள் முட்டை வடிவமானவை, எதிரடுக்கிலே அமைந்தவை. நாயுருவி தண்டுகள் பட்டையானவை, நாயுருவி மலர்க்கொத்துகள் நீண்டவை. நுனியிலோ கிளைகளிலோ காணப்படும். மலர்கள் சிறியவை. இருபால் தன்மையானவை. நாயுருவி விதைகள், அவற்றைச் சூழ்ந்துள்ள சிறு முட்களுடன் எளிதில் ஒட்டிக்கொண்டு பரவும் தன்மையானது. தமிழகமெங்கும், தரிசு நிலங்கள், சாலையோரங்கள் மற்றும் ஈரப்பாங்கான பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

அபமார்க்கி, காஞ்சரி, சரமஞ்சரி, சேகரீகம், நாயரஞ்சி, மாமுனி ஆகிய மாற்றுப் பெயர்களும் நாயுருவி தாவரத்திற்கு உண்டு. நாயுருவி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. நாயுருவியை எரித்தால் கிடைக்கும் சாம்பலில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. மலைப்பகுதியில் வளரும் செடிகள் சிவப்பான தண்டுகளுடன், சிவந்த இலைகளுடன் காணப்படும். இவற்றுக்கு செந்நாயுருவி அல்லது படருருக்கி என்கிற பெயர் உண்டு.நாயுருவி வேரை நீரில் கழுவி, சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். இந்தத் தூளால் பல் துலக்கி வரலாம் அல்லது பச்சை வேரை சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு அதனால் (வேப்பங்குச்சியால் பல்துலக்குவது போல) பல் துலக்கி வர பற்கள் உறுதியடையும்.

🪙🪙🪙🪙🪙🪙

மூலநோயால் அவதிப்படுபவர்கள் அதிலும் ரத்த மூலம் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் நாயுருவி இலையை பயன்படுத்தலாம். நாயுருவி இலையை அரைத்து பசையாக்கி சம அளவு நல்லெண்ணெய் கலந்து குழைத்து சாப்பிட வேண்டும். ஒரு வாரம் வரை தொடர்ந்து காலை மாலை வேளைகளில் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். 10 மில்லி அளவு எடுத்துகொண்டால் போதுமானது.

🪙🪙🪙🪙🪙🪙

இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து எருமைத்தயிரில் காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தாலும் ரத்த மூலம் சீராகும். நாயுருவி விதைகளை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி துத்திக்கீரையுடன்வதக்கி சாதத்தோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். நாயுருவி இலையை மஞ்சளுடன் கலந்து அரைத்து மூலத்தில் வைத்து கட்டி வந்தால் இதமாக இருக்கும்.

🪙🪙🪙🪙🪙🪙

நாயுருவி இலையை பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் இருக்கும் சளி வெளியேறும். இருமல் இருந்தாலும் அவை குறைய தொடங்கும். நாயுருவி வேரை உலர்த்தி பொடித்து சிட்டிகை அளவு பொடியுடன் சிட்டிகை அளவு மிளகுத்தூள் கலந்து தேனில் குழைத்து கொடுத்தால் இருமல் குணமாகும்

🪙🪙🪙🪙🪙🪙

காய்ச்சல் இருக்கும் போது நாயுருவி இலையோடு பனைவெல்லம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு உள்ளுக்கு கொடுத்தால் காய்ச்சல் குறையும். வளரும் பிள்ளைகளுக்கு இதை கஷாயமாக காய்ச்சியும் வடிகட்டி கொடுக்கலாம்.


🪙🪙🪙🪙🪙🪙

சரும பிரச்சனைகளை தீர்ப்பதில் நாயுருவி சிறப்பாக செயல்படும். நாயுருவி இலையை அம்மியில் வைத்து அரைத்து சொரி, சிரங்கு, படை போன்ற இடங்களில் தடவ வேண்டும். இரவு நேரத்தில் இதை தடவி, காலை வேளையில் கிருமி நாசினி சோப்பு கொண்டு கழுவி விட வேண்டும். பிறகு தேங்காயெண்ணெய் தடவி வர வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால் சொரி,சிரங்கு மறையும்.

​🪙🪙🪙🪙🪙

நாயுருவி இலையை முன் தினம் இரவு சுத்தம் செய்து மறுநாள் விடியற்காலையில் உரலில் போட்டு இடித்து கசக்கி பிழிந்து வடிகட்டி எடுக்கவும். எட்டு தேக்கரண்டி சாற்றுக்கு ஒரு டம்ளர் அளவு மோர் கலந்து நன்றாக கலக்கி சூரிய உதயத்துக்கு முன்பு குடித்துவிட வேண்டும்

🪙🪙🪙🪙🪙

தொடர்ந்து 7 நாட்கள் வரை குடித்துவந்தால் பெரும்பாடு குணமாகும். பெரும்பாடு என்பது மாதவிலக்கு பிரச்சனை ஆகும். நாயுருவியை எரித்தால் சாம்பல் கிடைக்கும் சாம்பலில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. இந்த சாம்பலை 5 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து குழைத்து கொடுத்து வந்தால் மாதவிலக்கு தடை நீங்கும்

🪙🪙🪙🪙🪙🪙

வயிற்றுவலி, அஜீரணம், புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள் நாயுருவி வேரைக் காசாயமிட்டு அருந்தி வருவது நல்லது.

🪙🪙🪙🪙🪙🪙

சிறுநீர் அடைப்பு உள்ளவர்கள் நாயுருவி சமூலத்தைக் குடிநீரிட்டு 60 மி.லி. முதல் 120 மி.லி. வீதம் அருந்தி வர சிறுநீரைப் பெருக்கும்.

🪙🪙🪙🪙🪙🪙

பின் குறிப்பு: இந்தச் செய்திகள்  மூலிகையிலும் உள்ள மருத்துவ நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கான தகவல்களுக்காகவே தரப்படுகிறது. 

உடலுக்கு உடல் மாறுபடும் என்பதால் மூலிகையை பயன்படுத்தும் முன்

படித்த பட்டதாரி மருத்துவர் அல்லது இயற்கை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றபின்பு பயன்படுத்தவும்.

🪙🪙🪙🪙🪙🪙

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...