Wednesday, January 12, 2022

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) புதிய தலைவராக சோம்நாத் நியமனம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO)  புதிய தலைவராக சோம்நாத் நியமனம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோமநாத்தை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தற்போது சிவன் செயல்பட்டு வருகிறார். சிவனின் பதவிக்காலம் முடிவடைந்ததால் இஸ்ரோவுக்கு புதிய தலைவரை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ''இஸ்ரோ தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோமநாத் செயல்படுவார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராக சோமநாத் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment

13 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

  13  லட்சம்  பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம்  குறித்த  மாணவ ,   மாணவிகள்   மற்றும்   ஆசிரியர்கள்  கருத்துக்கள் (Feedba...