Monday, February 28, 2022

தினம் ஒரு புத்தகம்-ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க- கோபிநாத்.

தினம் ஒரு புத்தகம்-ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க- கோபிநாத்.


 புத்தகத்திருவிழாவில் வாங்கிய புத்தகம்.


 தனக்கு கிடைத்த வாய்ப்பில் தான் சந்தித்த மனிதர்கள்,  படித்த புத்தகங்கள்,  பயணங்கள் இவை தனக்கு சொன்னதை நமக்குச் சொல்லியிருக்கிறார் இந்த நூலில்.


 நாம் சவால்கள் என நினைத்துக்கொண்டு இருந்தவற்றை இந்த புத்தகம் சாதாரணம் என்று சொல்லலாம். சாதாரணம் என்று நினைத்துக் கொண்டிருந்த வற்றை சவால்கள் என்று விளக்கலாம்.


 அதை நம் வாழ்வோடு பொருத்திப் பார்த்து குறிப்பிட்ட விஷயத்தில் நமது வேலை என்னவாக இருக்க வேண்டும் என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது.


 நூலிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. உங்களிடம் இல்லையோ அதில் தான் உங்கள் சந்தோஷம் இருக்கிறது என்று நீங்கள் முடிவுக்கு வந்து விடுகிறீர்கள்.


சந்தோஷத்தை தன்னுள்ளே வைத்து இருக்கிறவன், அதை வெளியில் தேடிக் கொண்டிருக்க மாட்டான்.

 அதற்காக அவன் அலைய போவதுமில்லை.

 அளவுக்கு அதிகமாக சிரிக்கவும் கண்ணீர் விடவும் நம் சமூகம் சொல்லாத தடை ஒன்று வைத்திருக்கிறது.

 சிரிப்பதில் பெண்களுக்கு 

அழுவதில்ஆண்களுக்கு

 சிரிப்பு வந்தால் சிரிங்கள் அழுகை வரும்போது அழுது கொள்ளலாம்.

 கொஞ்சமாக சிரித்து, கொஞ்சமாக அழுவதை விட நிறைய சிரித்து நிறைய அழுங்களேன்.


நாளை குறித்த எல்லா கவலைகளும் பின்னால் இருப்பது தோல்வி குறித்த பயம் தான்.

 நான் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் தான்


 தோற்காமல் இருப்பது என்பது வெறும் பாதுகாப்பு உணர்வு.

 வெற்றி பெறுவதென்பது நம் ஆசை இலக்கு.

 உங்கள் எண்ணம் வெற்றி குறித்த இருக்கிறது என்றால் இலக்கு நோக்கி ஓடுங்கள்.

 தோல்வியின் பின்னால் ஓடாதீர்கள்.


 ஒரு வேலையை கடினம் என்று நீங்கள் நினைக்கிற போதே அதை நீங்கள் இஷ்டப்பட்டு செய்யவில்லை என்பதுதான் அர்த்தம்.


 எந்த கணத்தையும் சுவாரசியம் ஆக்கிக்கொள்ள நம்மை சுற்றி நிறைய விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

 நாம்தான் அவற்றை கவனிப்பதில்லை.

 

 எதிர் கட்சி காரன் பாத்தா என்ன நினைப்பான் என்பதுதான் நம்மில் பலரின் வாழ்க்கையாக இருக்கிறது.


 எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது.

 நீங்கள் தப்பு செய்ய வேண்டும் என்று நினைக்காமல் செய்யும் எந்த செயலையும் விமர்சனங்களுக்காக பயந்துகொண்டு செய்யாமல் முடங்கிப் போகாதீர்கள்.


புரியாதவர்கள் புலம்பிக் கொண்டிருக்கட்டும்.

நீங்கள் உங்கள் மன ஹீரோவுடன் கைகுலுக்கி விட்டு கஜினி முகமதுவின் குதிரையில் ஏறுங்கள்.

 இந்த உலகம் முழுவதும் உங்களுக்குத்தான். விளையாடுங்கள்.


 நீங்கள் உங்களை கவுரவமாகப் பாருங்கள். ஆராதியுங்கள் .

இந்த உலகம் உங்களை எப்படி பார்க்கவேண்டும் என்பதன் முதல் புள்ளி உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது.

 கருத்துகளை மாற்றிக் கொள்வதில் ஒன்றும் குற்றமில்லை. அது தவறாக இல்லாத பட்சத்தில்.

 பூமி உருண்டையா தட்டையா என்பதில் தொடங்கி நிறைய கொள்கைகள் காலத்திற்கு காலம் மாறிக் கொண்டிருக்கின்றன.


 உங்களை இயக்கத்தான் கொள்கைகள் முடக்க அல்ல .


அன்பு செலுத்துவதே ஆனந்தமான அனுபவம் என்கிறபோது அவர் திருப்பி செலுத்தினால் தான் சந்தோஷம் என்றில்லை.


 அன்பை கொடுப்பதும் பெறுவதும் ஒரு ஆத்மார்த்தமான அனுபவம். உங்களிடம் அன்பு செய்ய இந்த உலகமே காத்திருக்கிறது.

 நீங்கள் சொல்வதையும் நாடு கேட்கும்.

 நீங்கள் மனதில் நான் சொல்வதை உலகம் கேட்கும் என்று நம்பினால்.


 நீங்கள் நினைத்ததை பெற ஆழ்மனதின் திடமொன்று போதும்.

 பணம் உள்பட எல்லாவற்றையும் அது கொண்டு வந்து சேர்க்கும்.


 நீங்கள் இழந்தது எதாய் வேண்டுமானாலும் இருக்கட்டும்.

 நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.


 நம்மை பாராட்டவும் தட்டிக் கொடுக்கவும் உண்மைகளை தெளிவுபட சொல்லவும் தயாராக இருப்பவர்களுடன் தொடர்பில் இருங்கள்.

 நீங்கள் தடுமாறும்போது உங்களை தாங்கிப் பிடிப்பதும் முன்னேறும்போது தட்டிக் கொடுப்பதும் இவர்கள்தான்.


 இந்தப் புத்தகம் உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் வேகமாக புரிந்துகொள்ள உதவும்.


 நன்றி: தோழமையுடன்-சீனி.சந்திரசேகரன்.

Book Purchase Link

No comments:

Post a Comment

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025. சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே ந...