Sunday, March 27, 2022

✍🏻மரமும்🌴மனிதனும்📋📋 ஆலமரத்தின் பயன்கள்.

✍🏻மரமும்🌴மனிதனும்📋📋 ஆலமரத்தின் பயன்கள்.

📋📋📋📋📋📋

ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.

📋📋📋📋📋📋

மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது. அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

📋📋📋📋📋📋

இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது. அதுவும் ஒவ்வரு ஆலமரமும் மிகப்பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.

📋📋📋📋📋📋

பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தபடுவதில்லை, மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும். தியானம்கூடிவிடும். இது அனுபவ பூர்வமான உண்மை.

📋📋📋📋📋📋  

இம்மரத்தின் அடியில் தவம் இருப்பவர்களுக்கு ஞானம் பெற்றுத் தருவதில் ஆல மரத்துக்குத் தனி மகிமைஉண்டு. இந்த மரத்தடியில் ஊர்கூட்டம் நடத்தினால் மக்கள் அமைதியாக உணர்ச்சிவசப்படாது இருப்பார் என்று நம் முனோர் அறிந்திருந்தனர்.

📋📋📋📋📋📋

ஆலமரமானது காற்றில் நஞ்சுப் பொருள் கலந்திருந்தாலோ, அல்லது சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டிருந்தாலோ, கழிவுநீர்களில் நஞ்சு காற்றில் கலந்திருந்தாலோ நஞ்சுத்தன்மையின் நஞ்சு நீக்கி உயிர் காற்றை வெளியாக்க வல்லது. இந்த ஆலமரமானது சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை படர்ந்து இருக்கும். இதன் விழுதுகள் தாய் மரமானது சில காலத்தில் அழிந்து விட்டாலும் கூட விழுதுகள் வேரூன்றி படர்ந்து வளரும். ஒரு மரம் சாலையின் அருகில் வைத்து விட்டால் படர்ந்து வளர்வது இம்மரம் என்பதாலும் இந்த ஆலமரத்தில் நஞ்சு நீக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் இந்த மரம் சாலை ஓரங்களிலும், கிராம எல்லைகளிலும், நகர எல்லைகளிலும் வைக்கப்படுகிறது.

📋📋📋📋📋📋

இம்மரத்தின் ஆயுள் 5ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இம்மரம் நிழலுக்காக மட்டும் என்பதில்லை. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாகனங்கள் இல்லாதபோது சாலை ஓரங்களில் ஆல மரக்கன்றுகளை ஏன் வளர்த்து வந்தார்கள் என்று கேள்வி எழலாம். அந்த காலத்தில் சாலையில் செல்லக் கூடிய ஆடு, மாடு, குதிரை, பன்றி, யானை, கழுதை ஆகியவற்றின் சாணம், கோமியம் சாலையில் கிடக்கும். சாணி சூரியசக்தியை இழுத்து கிருமிகளை அழிக்கும். அப்போது அந்த நஞ்சுக்காற்றை உறிஞ்சி உயிர்காற்றை கொடுப்பது ஆலமரம்.

📋📋📋📋📋📋

சுமைதாங்கி கல்லும், அதன் அருகில் படுக்கை கல்லும், தண்ணீர் தொட்டியும், நடைபாதை கிணறும் ஆல மரத்தின் அடியிலேயே இருக்கும். நடைபாதை கிணறு என்பது கீழே இருக்கும் தண்ணீர் வரை நடந்தே சென்று ஆடு, மாடு, குதிரை, யானை ஆகியவை கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டு வரும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள கிணறு நடைபாதை கிணறு என்று பெயர். இது நாளடைவில் வழக்கு பெயராக நடப்பாகிணறு என்று பெயர் மருவியது. இந்த கிணற்றில் போர் முனைக்குச் செல்லும் காலாட்படை, குதிரைப்படை ஆகியவை தண்ணீர் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கும் இடம் இந்த ஆலமரத்தின் கீழ் ஆகும்.

📋📋📋📋📋📋

சுமைதாங்கி கல்லை அதன் அருகில் படுக்க போட்டிருப்பது ஆலமரத்தின் அடியில் மட்டுமே. ஏனென்றால் வழிப்போக்கர்கள் சுமைதாங்கி கல் மீது பாரத்தை வைத்து விட்டு சிறிது நேரம் அங்கே அமரும்போது உடலில் உள்ள வலியை போக்க உயிர் காற்றை தரும். இதனால் ஏற்கனவே நடந்து வந்த தூரத்தில் இருமடங்கு தூரத்தை மீண்டும் கடக்க உடல் வலிமையையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.

📋📋📋📋📋📋

அவர்கள் கொண்டுவரும் சுமை காயாகவோ, ஈர விறகாகவோ இருந்தால் அதில் உள்ள நச்சுக்காற்றை பிரித்து உயிர்காற்றை தருவதால் மீண்டும் சுமையை எடுத்துச்செல்லும்போது அதன் பளு குறைவாக இருக்கும். சுமைதாங்கி கல்லும், படுக்கைக் கல்லும் கருங்கல்லாகத்தான் வைப்பார்கள், காரணம் ஆலமரம் வெளியிடும் உயிர் காற்றை இழுத்து வைக்கும் குணம் கருங்கல்லுக்கு மட்டுமே உண்டு. இதைத்தான் “காலைக்கல்லும் மாலைப்புல்லும் ஆளை வெல்லும்” என்று சொல்லப்பட்டது இதுவே ஆகும்.

📋📋📋📋📋📋

மாடு கன்று போடும் போது வெளியாகும் பனிக்குடம், நச்சுக்கொடி, பிள்ளைக்கொடி ஆகியவை கன்று போட்டு மூன்று மணி நேரம் கழித்து வெளியாகும் அவைகளை கோணிப்பையில் (சாக்குப்பை) போட்டு ஆலமரத்தில் கட்டியிருப்பதை நாம் நாடு முழுவதிலும் பார்த்து இருக்கிறோம். இதை உடுப்பு என்பார்கள். எத்தனையோ மரங்கள் இருக்கும் போது, ஆலமரத்தில் மட்டும் கட்டுவதற்கு காரணம் காற்றில் நிலவும் நச்சுக் காற்றையும் அதன் துர்வாடையும் வெளியே போகாமல் அந்த நச்சுக்காற்றை சுத்தம் செய்வது ஆலமரமே என்பதால் இம்மரத்தில் கட்டப்படுகிறது. மேலும் இந்த நச்சு காற்றினால் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கிறது. இதையே மற்ற மரங்களில் கட்டினால் அன்றே நாற்றம் வீசி நச்சுக் காற்று பரவி நோயை உருவாக்கும். அது மனிதன் முதல் விலங்குகள் வரை பரவும்.

📋📋📋📋📋📋

ஆலமரத்தில் கட்டும் உடுப்பு எக்காலத்திலும் நாற்றம் வீசுவது இல்லை. இதை மண்ணில் புதைத்தால் அந்த மண் கெட்டுப்போவதுடன் நோய்கிருமிகளை உருவாக்கி உயிர்காற்றை அழித்து நச்சுக்குரிய நோயை(ஒவ்வாமை என்கிற அலர்ஜி) உருவாக்கும். இந்த ஆலமரத்தின் பொது குணம் துவர்ப்பும், கார்ப்பும் அதிகம் பொருந்திய மரம். துவர்ப்பு சத்து மலம், நீர், கரு, கர்ப்பப்பை மாசு ஆகியவற்றை வெளியேற்றும் தன்மை உடையது.

📋📋📋📋📋📋

கார்ப்பு சத்து சுவாசப்பை (நுரையீரல்) ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருளை நீக்கி ரத்தத்திற்கு போஷாக்கை கொடுக்கும். இதன் விதை ஆண்களுக்கான கல்ப லேகியங்கள் அனைத்திலும் ஆலம் விதை இடம்பெறும். ஆலமரத்தில் நீண்டு தொங்கும் விழுதுகள் அதன் நுனிப்பகுதியில் ஒரு அடி அளவு வெட்டி எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து பொடி செய்து இரவில் நூறு மில்லி தண்ணீரில் அரை தேக்கரண்டி தூளை கலக்கி வைத்துவிட்டு காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் குடிக்கவேண்டும்.


📋📋📋📋📋📋

இப்படி 21 நாள் அல்லது 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கர்ப்பப் பையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் சமப்பட்டு உடல் ஆரோக்கியத்தை உண்டு செய்யும். இது உடல் பெருக்கும் தன்மையும் உள்ளது. வயிற்றில் வரும் எட்டு விதமான புண்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் இதனுடைய பட்டை பயன்படுகிறது. ஆலம்பாலை வெள்ளை துணியில் நனைத்து காயவைத்து கொளுத்தி சாம்பலாக்கி அந்த சாம்பலை பலநாட்கள் ஆறாத ரணங்களுக்கு தேங்காய் எண்ணெயில் அல்லது வெண்ணெயில் குழைத்து போட்டால் ஆறிவிடும்.

📋📋📋📋📋📋

மரத்தை கல்லால் குத்தி அதில் வரும் பாலை வாய்ப்புண், அச்சரம் போன்றவற்றிற்கு தடவினால் குணமாகும். ஆலம் இலை, கொழுந்து ஆகியவை லேகியங்களுக்கு பயன்படும். ஆலமரத்தின் விழுதில் பல்துலக்க பல் கெட்டிப்படும். இதைத்தான் “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பார்கள். பல் மட்டுமல்ல உடலிலுள்ள அனைத்து அவயங்களுக்கும் இந்த ஆலமரம் உதவுகிறது

📋📋📋📋📋📋

ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும்மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

📋📋📋📋📋📋

ஆலமரத்தின் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகிறது.

கனிகளை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம்திடப்படும். ஞாபகமறதி நீங்கும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.

📋📋📋📋📋📋

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழம் மொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால்பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.

📋📋📋📋📋📋

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரை சேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும்.

📋📋📋📋📋📋

தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும், கவர்ச்சி பெறவும் பயன்படுகின்றன. விழுதுகளின் தலைப்பகுதியில்மஞ்சளும், சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சி பெறும்.ஆலம் விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாப்பிட்டால் நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.

📋📋📋📋📋📋

ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து, மாதவிலக்குப்பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.

📋📋📋📋📋📋

ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக்குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது.

சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், உடலுறவின் போது வெகு சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், புண், அதிக மாதவிடாய், இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.இம்மரத்தின் வேர்மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்து, இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.

📋📋📋📋📋📋

வெட்டை நோயைக் குணப்படுத்த  ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வரலாம். மேலும், ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் நோயும் வெட்டை குணம்பெறும்.

📋📋📋📋📋📋

ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும்.கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

📋📋📋📋📋📋

மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் சீதபேதியைக் குணப்படுத்தலாம்.அளவுக்கு அதிகமாக மாதவிடாய்க் கழிவதையும் இது தடுத்து நிறுத்துகிறது.

📋📋📋📋📋📋

கனிகளை நன்றாக உலர்த்தி, அரைத்து, 12 கிராம் அளவு பாலில் கலந்து கொடுக்கலாம். ஞாபக மறதியைப்போக்கவும் இந்திரியத்தைத் திடப்படுத்தவும் இவை மிகவும் உதவுகின்றது. கனியை நிழலில் உலர்த்திபவுடராக்கி, சம அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால் மூலம்,சிறுநீர்ப்பை சம்பந்தமான குறைபாடுகள் குணப்படுகின்றது.

📋📋📋📋📋📋

வெட்டை, மூலம், ஞாபக மறதி, இருமல், ஈறு வீக்கம், பேதியைக் கட்டுப்படுத்த பட்டை பயன் அளிக்கிறது.

📋📋📋📋📋📋

ஆல மர விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரையில் உண்ணக் கொடுக்கலாம். இதன் மூலம்இந்திரியம் தீர்த்துப் போதல், இந்திரியப் போக்கு போன்றவை குணப்படுகிறது.

ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் ஆறு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து வடிகட்டிஅதில் வெண்ணெய் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி நின்றுவிடும்.

ஆலமர விழுதுகளை எரித்து தண்ணிரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் தெளிந்த நீரைக்குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது.

📋📋📋📋📋📋

ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் இந்திரியத்தில்உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து போதல், ஞாபக மறதி நோய், கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.

📋📋📋📋📋📋

ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது தவறான உடல் உறவினால் வரும் வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது.

📋📋📋📋📋📋

ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காது, மூக்கு, பல் நோய்கள், சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்க பயன் தருகிறது.

📋📋📋📋📋📋

ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால்புண்கள் ஆற விடுகின்றது.

📋📋📋📋📋📋

வீட்டுக்கு ஒரு ஆல மரத்தை வளர்த்தால் அல்லது தெருவுக்கு, ஊருக்கு ஒரு ஆலமரத்தை வளர்த்தால் குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும், மனப் பதட்டம் நீங்கி மனதிற்கு அமைதியும்கிடைக்கும்.

📋📋📋📋📋📋

ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன. இந்த விதைகள் நுண்ணியவையாக இருந்தாலும் மருத்துவ குணம் நிறைந்தவை.

📋📋📋📋📋📋

ஆலமரத்தின் விழுதுகளுக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அந்த விழுதுகள் படர்ந்திருப்பதைப் பார்த்தாலே ஒரு சாத்வீகத் தன்மை உண்டாகும். அதனால், ஆலமரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மரம். அதனை வைத்து பராமரித்தால் ஆக்சிஜன், ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும்.

📋📋📋📋📋📋

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்வார்கள். கருவேல மரத்தின் குச்சி, ஆலமரத்தின் குச்சி ஆகிய இரண்டாலும் பல் துலக்கும் போது பல்லினுடைய ஈறுகள் வலுவடைகிறது. குறிப்பாக ஆலங்குச்சியில் ஒருவிதமான துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும். மேலும், அதில் கொஞ்சம் பாலும் இருக்கும். இந்தப் பால் தேய்க்கத் தேய்க்க பல்லுக்கு இயற்கையான உரத்தைக் கொடுத்து சக்தியைக் கொடுக்கிறது. அதனால்தான் அதுபோன்ற பழமொழி சொன்னது.

📋📋📋📋📋📋

மேலும், அதன் இலைகள், பட்டைகள் இதற்கெல்லாம் நிறைய மருத்துவ குணம் உண்டு. இலைக் கசாயம் சளித் தொந்தரவை நீக்கவல்லது. பட்டைகள் உள்ளுக்குள் இருக்கும் இரணத்தை ஆற்றக்கூடியது. வாய்ப்புண் போன்றவற்றை ஆலமரத்தில் இருந்து வடியும் பால் குணமாக்கும். ஆலம் பட்டைகள் ஆணின் உயிரணுக்கள், விந்தணுக்களை வலுப்படுத்தக்கூடிய சக்தி உண்டு. ஆலம் பழத்தை பதப்படுத்தி உண்பவர்களும் உண்டு.

📋📋📋📋📋📋

ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

📋📋📋📋📋📋

ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது. மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். நாற்பத்தி எட்டு நாட்கள் இந்தபொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.சிறுவர்கள் முதல்பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொருத்து தினசரி ஒரு ஸ்பூன் பாலில் கலந்து அருந்தலாம்.

📋📋📋📋📋📋

ஆலம் பழம் தசைவலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது.

📋📋📋📋📋📋

பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி போகும்…

📋📋📋📋📋📋

சிறந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று, சுளுக்கு, ரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், ரத்தக் கட்டுகளையும் நீக்கும். எலும்புகள் வலிமையையும்

📋📋📋📋📋📋

வீட்டுக்கு ஒரு ஆல மரத்தை வளர்த்தால் அல்லது தெருவுக்கு, ஊருக்கு ஒரு ஆலமரத்தை வளர்த்தால்குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும், மனப் பதட்டம் நீங்கி மனதிற்கு அமைதியும்கிடைக்கும்.

📋📋📋📋📋📋

பின்குறிப்பு.

இவையெல்லாம் மருத்துவர் ஆலோசனை பெற்றபின் பின்பற்றவும்.

📋📋📋📋📋

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...