Tuesday, May 10, 2022

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தரவு அறிவியல் மாணவ-மாணவிகள் தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் கல்வி சுற்றுலா.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தரவு அறிவியல் மாணவ-மாணவிகள் தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் கல்வி சுற்றுலா.


தேசிய புவி ஆய்வு மையம், கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு புவி வளங்கள், வானிலை, செயற்கைக்கோள் தரவுகள் ஆராய்ச்சி போன்ற பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தரவு அறிவியல் பிரிவை சார்ந்த 42 மாணவ-மாணவிகள் தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் 09.05.22  திங்கள்க்கிழமை கல்வி சுற்றுலா சென்றனர்.

இதில் புவி உள்ள வளங்கள் குறித்த திட ஆய்வு மையத்தில் பொருட்களின் ஆயிரம் மடங்கு உருப்பெறுக்கி மற்றும் தனிமங்களின் அளவை காட்டும் SEM-EDS நிறமாலைமானி செயல்படும் விதம் குறித்தும், பொருட்களின் தன்மை குறித்து அறியும் XRD நிறமாலைமானி குறித்தும், பொருட்களை திட நிலையாக மாற்றி அதன் வழியே X-கதிர் அனுப்பும் போது ஆராயும் XRF நிறமாலைமானி குறித்தும், பொருட்களின் அணு நிறை மற்றும் மின்சுமை பற்றி அறியும் MASS நிறமாலைமானி குறித்தும், ரேடார் எதிரொளிப்பு மூலம் புவி வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் குறித்து செய்யப்படும் ஆய்வு, மென்பொருள் குறித்தும், நீரின் தூய்மை நிலை குறித்து ஆராயும் குரமோட்டோகிராபி குறித்தும், செயற்கைகோள் தரவுகள் வைத்து புவியின் காலநிலை குறித்து எவ்வாறு ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது, தமிழ்நாடு மற்றும் கேரளா நிலபரப்பு எவ்வாறு மாறுபடுகிறது என்பது பற்றியும் தெளிவாக மாணவர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.
மேலும் தேசிய புவி ஆய்வு மைய ஆராய்ச்சிகள் குறித்து காணொளி காண்பிக்கப்பட்டது.
 

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...