Thursday, July 14, 2022

TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் வந்தாச்சு-டவுன்லோட் செய்வது எப்படி?

TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் வந்தாச்சு--டவுன்லோட் செய்வது எப்படி?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஹால்டிக்கெட் (Hall Ticket) இந்த வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே ஹால்டிக்கெட்டை எவ்வாறு டவுன்லோடு செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த குரூப் 4 தேர்வுகள் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. 7382 பணியிடங்களுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுவாக தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக ஹால் டிக்கெட் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்படலாம். ஹால் டிக்கெட் வெளியிடப்பட்ட பின்னர்,

முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்கு முகப்பு பக்கத்தில் ஹால் டிக்கெட் டவுன்லோட் (Hall Ticket Download) என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது வேறு ஒரு பக்கம் திரையில் காண்பிக்கப்படும். அங்கு நிரந்தர பதிவு விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் உங்கள் பயனர் ஐ.டி (User ID) மற்றும் கடவுசொல் (Password) உள்ளிட்டு, திரையில் கேட்கப்படும், கேப்சா வினாவிற்கு விடையளித்து உள் நுழைய வேண்டும்.

இல்லை எனில் நேரடியாக முகப்பு பக்கத்தில் நிரந்தர பதிவு விவரங்கள் (Registered User) என்பதை கிளிக் செய்து உள் நுழைய வேண்டும்.

தற்போது, உள் நுழைந்தவுடன் டாஷ்போர்டில் குரூப் 4 தேர்வு உள்ளிட்ட நீங்கள் தற்போது விண்ணப்பித்துள்ள தேர்வுகளின் விவரங்கள் காண்பிக்கப்படும்.

அதில் குரூப் 4 தேர்வுக்கு நேராக ஹால் டிக்கெட் டவுன்லோட் என்று இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் விண்ணப்ப எண் கொண்டு உள்நுழைய வேண்டும். இப்போது உங்கள் ஹால்டிக்கெட் திரையில் காண்பிக்கப்படும். அதனை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.  



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...