Monday, August 1, 2022

✍🏻📬📬இயற்கை வாழ்வியல் முறை📬📬கருங்காலி நன்மைகள்.

✍🏻📬📬இயற்கை வாழ்வியல் முறை📬📬கருங்காலி நன்மைகள்.

📬📬📬📬📬

கருங்காலி மரத்தின் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது. நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் ரத்தக் குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும்.

📬📬📬📬📬

கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும். பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

📬📬📬📬📬

இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்

📬📬📬📬📬

கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால் உடல் பலமடையும். கரப்பான் நோயினை போக்கவல்லது.

📬📬📬📬📬

பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும் பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்மலட்டுத் தன்மையைப் போக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலை குறைக்கும்.

📬📬📬📬📬

கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.


📬📬📬📬📬

கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும். சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்.

📬📬📬📬📬

வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதைஅருந்துவது நல்லது.

 📬📬📬📬📬

இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்

📬📬📬📬📬

குழந்தை கைக்கு கிடைக்கிறது எல்லாத்தையும் வாயில வைக்கும். அது வாயில வைக்குறது பிளாஸ்டிக்கா இருக்கும் பட்சத்தில், அதோட ஆரோக்கியத்துக்கு நீங்க ஆப்பு வைக்குறீங்கன்னு அர்த்தம். சரி அப்போ அதுக்கு மாற்று என்ன. இருக்கு, நிறையவே இருக்கு. மர விளையாட்டு பொருள்கள். குறிப்பா மரப்பாச்சி பொம்மைகள். இந்த மரப்பாச்சி பொம்மைகள் கருங்காலி மரத்துல செய்வாங்க. இப்போ கருங்காலி மரம் சாகுபடி குறைஞ்சு போனதால, இந்த மரப்பாச்சி பொம்மைகளும் வேற மரத்துல பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. கருங்களி மர கலரு வரணும்னு, அந்த கலருல பெயிண்ட் அடிச்சி விட்டுறாங்க. எப்படி சரியான மரப்பாச்சி பொம்மைகளை அடையாளம் கண்டு பிடிக்கறதுன்னு சொல்றேன்

📬📬📬📬📬

அரசாங்க பூம்புகார் கடைகளில் இது கிடைக்கும். அதுலேயும் சரியான கருங்காலி மர பொம்மையை எப்படி தேர்ந்தெடுக்கறது? கருங்காலி கொஞ்சம் வாசனையான மரம். சந்தனம் மாதிரி ஒரு வாசம் வரும். ரொம்ப உறுதியா இருக்கும். மரத்தை அரைச்சா அடர் சிவப்பு நிறத்துல ஒரு மாவு வரும். சின்ன பொம்மைகள் 400 ரூபாய் விலை இருக்கும். இதோட பயன்கள் என்னனு கூகுளை கேளுங்க நிறைய விளக்கம் குடுக்கும்

📬📬📬📬📬

வீட்டுக்கு வாங்கிட்டு வந்து அதை நல்ல தண்ணியில கழுவி நகத்தால சுரண்டி பாருங்க. போலி பொம்மையாக இருந்தால், பெயிண்ட் நகத்தோட பேந்து வரும். நல்ல கருங்காலி மரமா இருந்த வாசனை, மற்றும் அடர் சிகப்பு நிறத்துல ஒரு சாயம் வரும். இதை குழந்தைங்க வாயில வைக்க விடுங்க, நோய் எதிர்ப்பு சக்தி வளரும், சளி, இருமல் தொந்தரவு குறையும். வருங்கால இளைய சமுதாயம் ஆரோக்யமா வளரட்டும். இளைய சமுதாயம் இருக்கட்டும் , உங்க குழந்தை ஆரோக்யமா இருக்கட்டும்

📬📬📬📬📬

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...