Wednesday, September 21, 2022

கர்ணம் மல்லேஸ்வரி விருது பெற்ற மாணவிகள்.

கர்ணம்  மல்லேஸ்வரி விருது பெற்ற மாணவிகள். 


சேலம் நெய்க்காரபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் P. ஜாஸ்மின் மற்றும் A.ரிஸ்வானா பர்வீன் ஆகிய இரு மாணவிகள் ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 47kg, 43Kg பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்திருந்தனர். 



அரசு பள்ளி மாணவர்களை விளையாட்டு துறைகளில் ஊக்குவிக்கும் விதமாக பள்ளி நிர்வாகம், சேலம் தோழா FM 90.0 MHZ  மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சங்கம் சார்பாக  பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக செல்வி.T. ஆனந்தி, காவல் துணை ஆணையர், திரு.S.சிவரஞ்சன்,DSO , திரு. J.ட்ரவீன் சார்லஸ்டன்,DYO,  R.V.முத்துசாமி, தோழா FM நிர்வாகி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் மாணவிகளின் பயிற்றுநர் G.பொன்சடையன் அவர்களுக்கு "துரோணாச்சாரியார் விருது" மற்றும் மாணவிகளுக்கு "கர்ணம்  மல்லேஸ்வரி விருதும்"   தோழா FM 90.0 MHZ  சார்பாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவை சுவாமி விவேகானந்தர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.


இதனைத் தொடர்ந்து இதே பள்ளியில் தமிழ் மன்றம், அறிவியல் கண்காட்சி, சுதந்திர தின போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.



நன்றி: குமரேசன், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சங்கம்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி.

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒர...