காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.
திங்கள் கிழமை (26.09.22) காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பார்வையாளர் தினம் கொண்டப்பட்டது. இதில் இதுவரை செய்யப்பட்ட நவீன ஆராய்ச்சிகள் குறித்த கண்காட்சி இடம் பெற்றது. நேரு நினைவு கல்லூரி இயற்பியல் மற்றும் வேதியியல் துறை சார்ந்த சுமார் 30 மாணவ, மாணவிகள் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டனர். அதில் லெட் ஆசிட் பேட்டரி, லித்தியம் அயன் பேட்டரி, சோடியம் அயன் பேட்டரி, மெட்டல் அயன் பேட்டரி, மெட்டல் சல்பர் பேட்டரி, metal-Air பேட்டரி, Flow பேட்டரி போன்ற அனைத்து வகையான பேட்டரி குறித்தும், அதன் பயன்கள் மற்றும் தேவைகள் குறித்தும் தெளிவாக ஆராச்சியாளர்கள் எடுத்து கூறினர். சூப்பர் மின்தேக்கி மூலம் மின்சார வாகனம் தயாரித்தல் குறித்தும், இதன் மூலம் எதிர்கால எரிபொருள் பயன்பாட்டை சமாளிக்க, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க போன்ற பல்வேறு தேவைகள் குறித்தும் தெளிவாக விளக்கினர். பொருட்களின் அரிமான (இரும்புக் மேற்பரப்புகளில் பிடிக்கும் துருவை) விளைவுகளை வேதியியல் முறையில் நீக்க முடியும் எனவும், பல்வேறு கட்டிடங்கள், ராணுவ உபகரணங்கள், பாலங்கள், கப்பல்கள் எவ்வாறு அரிமான இழப்புக்களை தடுக்கிறார்கள் எனவும், புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டது.
கண்ணாடி பொருட்களை எவ்வாறு அறிய அழகு பொருட்களாக பற்றி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பலவகையான ஆராய்ச்சி பொருட்களை சோதனை செய்யும் உயர் தெளிவுத்திறன் பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கி (HR -TEM), புல உமிழ்வு ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (FE-SEM), X-Ray Powder Diffraction (XRD), Raman Spectrometer, ஃபோரியர்-மாற்றும் அகச்சிவப்பு நிறமாலை (FT-IR), Ultraviolet Visible Spectroscopy (UV-Vis-NIR), Mass spectrometry போன்ற உயர் நிறமாலை கருவிகள் செயல்படும் விதம் தெளிவாக விளக்கப்பட்டது.
No comments:
Post a Comment