இஸ்ரோ, உலக விண்வெளி வார கண்காட்சி-நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்.
1957-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி ’ஸ்புட்னிக்-1’ என்கிற செயற்கை விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ’உலக விண்வெளி’ வாரமாக கொண்டாடுகின்றன. மனிதகுலத்தின் தேவைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள இஸ்ரோ, சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையம், சென்னை இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரியில் விண்வெளி கண்காட்சி மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியது. அதில் நேரு நினைவு கல்லூரி மூன்றாம் ஆண்டு வேதியியல் மாணவன் ஹரிஹர வள்ளியப்பன் பங்கேற்று ஒளி மூலமாக தகவல் (LI-FI) பரிமாறும் தொழில்நுட்பம் குறித்த சோதனை விளக்கினார். இந்த தொழில்நுட்பம் மூலம் அதிவேக மற்றும் பாதுகாப்பான தொலைத்தொடர்புக்கு பயன்படுத்த முடியும்.
மேலும் மூன்றாம் ஆண்டு ஆங்கில மாணவி பாவத்தாரணி விண்வெளி நிலைப்பு தன்மை குறித்த பேச்சு போட்டியில் பங்கேற்றார். உலக விண்வெளி வார நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை துறைதலைவர்கள், ஒருங்கிணைப்பாளர், முதல்வர், கல்லூரி தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் பாராட்டினர்.
இது போன்ற தகவல் பெறhttps://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment