Wednesday, October 19, 2022

இஸ்ரோ, உலக விண்வெளி வார கண்காட்சியில் பங்கேற்ற நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

இஸ்ரோ, உலக விண்வெளி வார கண்காட்சியில் பங்கேற்ற நேரு நினைவு கல்லூரி மாணவர்கள். 


1957-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி ’ஸ்புட்னிக்-1’ என்கிற செயற்கை விண்கலம் விண்ணில்  ஏவப்பட்ட நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை உலக விண்வெளி வாரமாக கொண்டாடுகின்றன. மனிதகுலத்தின் தேவைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. 


இதை முன்னிட்டு இஸ்ரோ மகேந்திரகிரி (IPRC) பிரிவால் நாமக்கல் மஹிந்திரா பொறியியல் கல்லூரியில் உலக விண்வெளி வாரம் அக்டோபர் 17 முதல் 19 வரை ISRO SPACE-EXPO 2022 கொண்டாடப்பட்டது. அதில் நேரு நினைவு கல்லூரி கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறையை சார்ந்த சுமார் 50 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். 


இந்த இஸ்ரோ கண்காட்சியில்  VIKAS, CYRO, PSLV-PS4, CE-20,  CUS போன்ற நவீன ரக PSLV, GSLV ராக்கெட்டில் பயன்படுத்தும் என்ஜின்கள் மற்றும் விண்வெளி உடைகள் ஆகியவற்றை நேரடியாக பார்க்க முடிந்தது. மேலும் இந்தியாவின் சரித்திர சந்திராயன்-1, சந்திராயன்-2, மங்கள்யான் மற்றும் உலக சாதனை 104 செயற்கைக்கோள் ஏவியது பற்றிய காட்சி விளக்கங்களுடன் தெளிவாக விளக்கினார்கள். இஸ்ரோ இதுவரை செலுத்திய செயற்கைகோள்கள், அடுத்து செலுத்த இருக்கும் ககன்யான், ஆதித்யா போன்றவை திட்ட மாதிரிகளுடன் விளக்கப்பட்டது.


இஸ்ரோவில் என்ன என்ன வேலை வாய்ப்புகள் உள்ளன, எவ்வாறு வேலை பெறுவதற்கு படிக்க வேண்டும்,  எவ்வாறு போட்டி தேர்வில் வெற்றி பெறுவது போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளால் கருத்தரங்கம் மூலம் விளக்கினார்கள்.  பங்கேற்ற அனைவருக்கும் இஸ்ரோ சான்றிதழ் வழங்கப்பட்டது.



































இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOcஇந்த Telegram  குழுவில் இணையவும்.https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQஇந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...