Tuesday, October 25, 2022

இன்றைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரில் பார்க்கலாமா?

 இன்றைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரில் பார்க்கலாமா?


சூரிய கிரகணம் இன்றைய தினம் மாலையில் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் தெரியும். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் என்பதால் மக்கள் கிரகணம் நிகழ்வதை பார்க்க ஆர்வமாக உள்ளனர். சூரியனையும் கிரகணம் நிகழ்வதையும் வெறும் கண்களால் பார்க்க கூடாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது சூரியனை நிலவு மறைக்கிறது. இதுதான் கிரகணம். நம்முடைய பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும். அமாவாசை நாளில் தான் இந்த சூரிய கிரகணம் நிகழும். மழை இல்லாமல் இருந்தால் கிரகணத்தை தெளிவாக பார்க்கலாம். பொதுவாகவே மூன்று விதமான சூரிய கிரகணம் நடக்கிறது. முழு சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம். இன்றைய தினம் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழ்கிறது. முழுவதுமாக சூரியனை சந்திரன் மறைக்கும் போது பூமி இருளாகும் இது முழு சூரிய கிரகணம் எனப்படும். அதேபோல் சந்திரன் சூரியனுடைய ஒரு பகுதி மட்டும் மறைக்கும் போது ஏற்படுவது பகுதி நேர சூரியகிரகணம் ஆகும்.


வானத்தில் நிகழும் அதிசய நிகழ்வான சூரிய கிரகணம் இன்று மாலை நிகழ உள்ளது. ஒரு ஆண்டு இரண்டு சூரிய கிரகணம், இரண்டு சந்திர கிரகணம் நிகழும். இதில் சில கிரகணங்கள் மட்டுமே இந்தியாவில் தென்படும். நம்முடைய நாட்டில் சூரிய கிரகணம் தென்பட்டால் மட்டுமே கிரகண தோஷம் ஏற்படும்.


சூரிய கிரகணம் எங்கெங்கு தெரியும் 

இன்றைய தினம் நிகழ உள்ள சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், வடக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் தென்பட உள்ளது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்படும்.


இந்தியாவில் சூரிய கிரகணம் 

இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் மாலை 4.29 மணிக்கு தென்படும். இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். சூரிய கிரகணம் மாலை 4 மணி 29 நிமிடங்களுக்குத் தொடங்கி இதனுடைய உச்சகட்ட மறைப்பு நிலை மாலை 5 மணி 30 நிமிடங்களுக்கும், சூரியன் மறையும்போது 5 மணி 48 நிமிடமுமாகும்.


நீண்ட நேரம் தெரியும் பகுதிகள் 

அதிகபட்சமாக குஜராத் மாநில துவாரகாவில் சூரிய கிரகணம் நீண்ட நேரம் நீடிக்கும். இதுதவிர மும்பை, புனே, தானே, டெல்லி, ஆமதாபாத், சூரத், ஜெய்பூர் இந்தூர், போபால், லூதியானா, ஆக்ரா, சண்டிகர், உஜ்ஜயினி, மதுரா, போர்பந்தர், காந்திநகர், சில்வாசா, பனாஜி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக சூரிய கிரகணம் தென்படும்.

எங்கு குறைவாக தெரியும் 

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். திப்ருகர், இம்பால், இடாநகர், கோஹிமா, சில்சார், அந்தமான் மற்றும் நிகாபார் தீவுகளில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்களும் இந்த சூரிய கிரகணம் தென்படும். திப்ருகர், இம்பால், இடாநகர், கோஹிமா, சில்சார், அந்தமான் மற்றும் நிகாபார் தீவுகளில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது.

என்ன செய்யக்கூடாது 

சூரிய கிரகணத்தை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கிரகணம் இல்லாத நாட்களில் நாம் வெறும் கண்களால் சூரியனை பார்க்க முடியாது கண்கள் கூசும். ஆனால், கிரகணத்தின்போது சூரியனை வெறும் கண்களால் எளிதாக பார்க்க முடியும். அவ்வாறு 50 முதல் 90 விநாடிகள் பார்க்கும்போது, நமக்கு தெரியாமல் சூரியனின் கதிர்கள் கண்களின் விழித்திரையின் மத்திய பகுதியை பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சூரிய கிரகணத்தை பார்க்க விரும்புவோர் அதற்கான சிறப்பு கண்ணாடியை அணிந்து பார்க்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Solar Eclipse 2022<<---Guide Link






தமிழகத்தில் தென்படும் நேரம் :

இடம் 
துவங்கும் நேரம் 
சூரியன் மறையும் நேரம் 
உச்சபட்ச கிரகணம் 
முடிவுறும் நேரம் 
மறைப்பு அளவு 
சென்னை 
17.14
17.44
17.50
18.25
9.7%
புதுவை 
17.17
17.47
17.52
18.24
7.8%
தஞ்சை 
17.21
17.51
17.53
18.22
6.2%
ராமேஸ்வரம்  
17.28
17.51
17.54
18.19
3.9%
கன்னியாகுமரி 
17.32
17.55
18.00
18.17
2.8%
மதுரை 
17.24
17.53
17.56
18.22
5.2%
கோவை 
17.18
17.52
17.59
18.24
7.3%
வேலூர் 
17.13
17.49
17.50
18.26
9.9%

கர்பிணி பெண்களுக்கு ஆபத்தா?

கிரகணச் சமயத்தில் சூரியனில் எந்தவொரு சிறப்பு மாற்றமும் ஏற்படுவதில்லை. எப்போதும் போல நாற்புறமும் தன் ஒளியை வீசிக்கொண்டு இருக்கிறது. வேறு எந்த சிறப்பு மர்மக்கதிர்களும் வெளிப்படுவது இல்லை. கிரகணத்தின் போது உணவு உண்ணக்கூடாது என்று கூறுவது தவறானது. கிரகணத்தின் போது எந்தவித சிறப்பு கதிர்களும் பூமியில் வருவதில்லை. கிரகணத்தின் போது உண்பதால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதற்கு எந்தவித அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. கிரகணத்தின் போது பறவைகள் உணவு உண்கின்றன. ஆடு, மாடுகள் புல்லை மேய்கின்றன அவைகளுக்கு எந்தவித தீங்கும் ஏற்படுவதில்லை. எனவே வதந்திகளை நம்பாமல் தாராளமாக உணவை உட்கொண்டு மகிழுங்கள்.

பூமி இருக்கும் திசையில் இடையில் நிலவு வந்து மறைத்து விடுவதால் பூமியில் சில பகுதிகளில் சூரிய முகம் மறைக்கப்படுகிறது. அந்த பகுதியில் மட்டும் கிரகணம் தென்படும்.
உலகில் வேறெங்கும் கிரகணத்தைக் கண்டு கர்ப்பிணிப் பெண்கள் ஓடி ஒளிந்துக்கொள்வதில்லை. அங்கெல்லாம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.
கருக்கொண்ட பூச்சிகள் முதல் விலங்குகள் வரை அதன் போக்கில் கிரகணத்தின் போது வெளியே திரிந்துகொண்டு தான் உள்ளன. அவற்றுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.

சூரிய, சந்திர கிரகணம் என்பது அற்புதமான வானக்காட்சி. இயற்கையின் இந்த விளையாட்டைப் பாதுகாப்பாக கண்டு களிக்க வேண்டும். வெறும் நிழலைக் கண்டு அச்சப்படுவது அறிவியலுக்கு முரணானது.

நன்றி: த.வி.வெங்கடேஸ்வரன் முதுநிலை விஞ்ஞானி விஞ்ஞான் பிரசார்,  புது டெல்லி.


இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...