Thursday, December 22, 2022

பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1,000 பொங்கல் பரிசு.

பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1,000 பொங்கல் பரிசு.

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் இருக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

துகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000/- ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை!

ஜனவரி 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த முறை கரும்பு, வெல்லம், பருப்பு, நெய், மஞ்சள் உள்ளிட்ட பரிசு தொகுப்புகள் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இந்த அறிவிப்புக்கு ரூ 2,356. 67 கோடி அரசுக்கு செலவு ஏற்படும். கடந்த முறை ரொக்கம் வழங்கப்படாத நிலையில் இந்த முறை வழங்கப்படுகிறது.

21 பொருட்கள் இல்லை அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ரொக்க பணம் வழங்க பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிய நிலையில் தமிழக அரசு வழங்கவில்லை. அவ்வாறு வழங்கிய 21 பொருட்களிலும் குளறுபடிகள் இருந்தன. சிலருக்கு சில பொருட்கள் கிடைக்கவில்லை, வெல்லம் உருகியது, புளியில் பல்லி தலை என்றெல்லாம் புகார்கள் எழுந்தன. மொத்தத்தில் பொருட்கள் தரமானது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...