Monday, December 19, 2022

படைப்பிலக்கிய பயிற்சி பெற்ற நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

படைப்பிலக்கிய பயிற்சி பெற்ற நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.


திருச்சிராப்பள்ளியில் தூய வளனார் கல்லூரியில் தமிழாய்வுத்துறை வேர்கள் அறக்கட்டளை மற்றும் நம்ம திருச்சிராப்பள்ளி இதழுடன் இணைந்து நடத்திய படைப்பிலக்கிய பயிலரங்கு (டிசம்பர் 16-17) நடைபெற்றது.   இதில் நமது நேரு நினைவுக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இளங்கலைத் தமிழ்  மாணவன் ஏ.கிருபாகணேஷ் மற்றும் முதலாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல்   மாணவி ச.மனோஜினி ஆகியோர் பங்கு பெற்று  செய்தி குறிப்பு தயாரித்தல், கட்டுரை வடிவமைப்பு, புத்தக உரை தயாரித்தல், கவிதை நடை போன்ற பல்வேறு படைப்பிலக்கியம் மாதிரிகள் தயாரித்தனர்.








படைப்பிலக்கிய பயிலரங்த்தின் தொடக்க விழாவில் திருச்சிராப்பள்ளி பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மற்றும் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோரைப் பாராட்டி பயிலரங்கைத் தொடக்கி வைத்து விழாப்பேருரை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.
தொடக்க விழாவில் வரவேற்புரை வழங்கிய முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் மாணவர்களுக்கு படைப்பிலக்கியத்தின் பயன்களை எடுத்துரைத்தார். அறிமுகவுரை வழங்கிய முனைவர் ஞா.பெஸ்கி மாணவர்களுக்கு மனம் என்ற தலைப்பில் பேசினார்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

13 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

  13  லட்சம்  பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம்  குறித்த  மாணவ ,   மாணவிகள்   மற்றும்   ஆசிரியர்கள்  கருத்துக்கள் (Feedba...