Tuesday, February 7, 2023

நாமக்கல் பழைய பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நட்சத்திர திருவிழா.

நாமக்கல் பழைய பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நட்சத்திர திருவிழா.


நாமக்கல் மாவட்டம் பழையபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கட்கிழமை மாலை (06.02.23) நட்சத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வைர விழா காணும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரியப்பிள்ளை அவர்கள் இந்த விழாவை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற இஸ்ரோ இளநிலை விஞ்ஞானி பால சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று விளக்கங்களை அளித்தார். இதில் விண்வெளி குறித்தும், வளிமண்டலம் குறித்தும், இஸ்ரோவில் உள்ள பல்வேறு ராக்கெட்டுகள் (SLV, SSLV, PSLV, GSLV, GSLV MK-III) செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படு விதம் போன்றவற்றை எடுத்துரைத்தார். மேலும் விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி செய்யும்  சந்திக்கும் அவர்கள் ஆராய்ச்சி நம் நாட்டிற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.




நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் சூரிய குடும்பம் உருவான விதம் பற்றி எடுத்துரைத்தார். மேலும் அண்மையில் தோன்றிய பச்சை வால் நட்சத்திரம் உருவான விதம், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, பனிக்கட்டி போன்ற இந்த வேதி சேர்மங்கள் வால் நட்சத்திரத்தில் இருப்பதால்தான் பச்சை நிறத்தில் இந்த வால் நட்சத்திரம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த வால் நட்சத்திரத்தை பார்க்க முடியும் என்று போன்ற பல அறிய தகவல்களை கூறினார்.




இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிநவீன தொலைநோக்கி மூலம் வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், செவ்வாய் கோள், அழகிய நிலா ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் படிக்கும் மாணவன் தேவநாதன் மற்றும் பாஸ்கரன், மூன்றாம் ஆண்டு இளநிலை வேதியல் படிக்கும் ஹரிஹர வள்ளியப்பன் மாணவ மாணவிகளுக்கு  விளக்கம் அளித்தனர்.இந்த விழாவில் 300க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெற்றனர்.


தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், நேரு நினைவுக் கல்லூரி, பழையபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், NMC ஆஸ்ட்ரோ கிளப், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகியவை இணைந்து இந்த நட்சத்திர திருவிழாவை நடத்தியது.






No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...