சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய கருந்துளை: என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான துளை போன்ற பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு கொரோனல் துளை (Coronal Hole) என பெயரிட்டுள்ளனர்.
இது பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமற்போனது போன்று தெரிகிறது. இந்த கொரோனல் ஓட்டையை சூரியனின் தென் துருவ பகுதி அருகே கடந்த 23 ஆம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளது.
கொரோனல் துளை தோன்றியதால், புவி காந்த புயல்கள் அல்லது சூரியக் காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான NOAA எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனல் துளையில் இருந்து புறப்படக்கூடிய, மணிக்கு 2.9 இலட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும், அது வெள்ளிக்கிழமை (31) நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பூமியின் காந்தப்புலம், செயற்கைக்கோள்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பதை விஞ்ஞானிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
சூரியனில் ஒரே வாரத்தில் தோன்றிய இரண்டாவது துளை இதுவாகும். சூரியனை ஆய்வு செய்யும் நாசாவின் Solar Dynamics ஆய்வகத்தால் 2 துளைகளும் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 23 ஆம் திகதி சூரியனின் தென்துருவ பகுதியில் ஒரு துளை கண்டறியப்பட்டது.
கொரோனல் துளைகள் என்பது அதிவேக சூரிய காற்றின் ஒரு ஆதாரமான காந்த பகுதிகளாகும். தீவிர புற ஊதா ஒளியின் பல அலை நீளங்களில் பார்க்கும்போது அவை இருட்டாகத் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.