Monday, March 27, 2023

இன்று ஒரே வரிசையில் 5 கிரகங்கள்...வானில் நிகழும் அதிசயம்..!

இன்று ஒரே வரிசையில் 5 கிரகங்கள்...வானில் நிகழும் அதிசயம்..!

அந்தி மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப்பிறகு தொடுவானத்தின் மேற்கு பக்கத்தில் 5 கிரகங்கங்களின் அணிவகுப்பை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். அதில் நமது கண்களுக்கு வரிசையாக குரு, சுக்கிரன். செவ்வாய், புதன், யுரேனஸ், கூடவே சந்திரனையும் பார்க்கலாம்.

சில தினங்களுக்கு முன்பாக வானத்தில் சந்திரனும், சுக்கிரனும் அருகருகே வானத்தில் பிரகாசமாக ஜொலித்ததை பலரும் பார்த்து ரசித்தனர். இந்த வாரத்தில் நாளைய தினம் 5 கிரகங்கள் ஒரே வரிசையில் இருப்பதை காண முடியும்.

சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை உற்றுக் கவனிக்க வேண்டும் என்று நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக் குறிப்பிட்டுள்ளார்.

ராசி மண்டலத்தில் இன்றைய தினத்தில் கும்ப ராசியில் சனி, மீன ராசியில் சூரியன், புதன், குரு, மேஷ ராசியில் ராகு, சுக்கிரன், ரிஷப ராசியில் சந்திரன், மிதுனராசியில் செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. துலாம் ராசியில் கேது பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் வரிசையை நாளை வானத்திலும் தெளிவாக வெறும் கண்களில் காணலாம். சூரியன் மறைந்த அரைமணி நேரத்திற்குள் இந்த கிரகங்களின் வரிசை பார்த்து ரசிக்கலாம். அப்போது செய்யும் வேண்டுதலுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

மேற்குப்பகுதியில் வானம் தௌிவாக இருக்கும்போது உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை பார்த்து ரசிக்கலாம். வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றை தெளிவாக பார்த்து ரசிக்கலாம். சந்திரனும் அருகில் இருக்க நாம் பிரகாசமாக ஒளிரும் கிரகங்களைப் பார்க்கலாம்

செவ்வாய் அருகில் நிலவு அதிலும் செவ்வாய் கிரகம் செந்நிறத்தில் நிலவுக்கு அருகில் இருப்பதை பார்க்கலாம். யுரேனஸ், புதன் கிரகங்களையும் சுக்கிரனுக்கு மேலே பச்சையாக ஒளிர்வதை பார்க்கலாமாம். கடந்த ஆண்டு கோடைகாலத்தில் 6 கிரகங்கள் அதிகாலையில் கிழக்குப் பகுதியில் வரிசையாக தோன்றின. இப்போது மேற்கில் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றப்போகின்றன.



.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு.

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு. துறையூர் நகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம...