Saturday, April 8, 2023

நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை 2022-2023 செய்த சாதனை தொகுப்பு.

நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை 2022-2023 செய்த சாதனை தொகுப்பு.


PG AND RESEARCH DEPARTMENT OF PHYSICS

ANNUAL REPORT-2022-23

Department Activities:

·         Nine students from Muthayammal College of Arts and Science, Rasipuram, undergone “15 days Internship Programme in Physics” from 08.08.2022 to 27.08.2022.

·         In view of Dr. APJ. ABDUL KALAM’s birth day “The National Youth Uprising Day” was celebrated on 15.10.2022.

·         Dr. R. Venkatesan, Division Head, Radiology and Environmental Safety and Mrs. Jalaja Madanmohan, Head, Technical Coordination and Public Awareness Section, IGCAR, Kalpakkam, delivered the Special address on the occasion of birthday of The Father of “Indian Nuclear Programme” Homi J. Bhabha on 27.10.2022.

·         In view of “Galileo Galilei’s telescope invention” the four days (from 07.01.2023 to 10.01.2023) “Star Party Event” was conducted with the newly bought High-tech Telescope from 6 Pm to 9 Pm in our College for general public and the students.

·         Workshop on “Space Observatory and Opportunities” was conducted on 11.01.2023. Mr. Mohanraj, Astro-Photographer, Behind Earth, delivered the special lecture and training.

·         Observing “Green Comet” event through telescope was conducted on 04.02.2023.

·         In view of “National Science Day” the “Moon Festival” – (Observing Moon and other Celestial bodies through telescope in the evening time) – was celebrated jointly by Astro Club of NMC and department of Physics from 25.02.2023 to 28.02.2023

·         Jupiter and Venus Conjunction 2023” event was observed through the newly bought High-tech telescope on 01.03.2023

·         “World Women’s Day” was celebrated in the ‘CVR’ Hostel by Observing Celestial Objects in the night sky through the telescope on 08.03.2023

Students Achievements:

·         Students M. SARIGA- P21PHY111 and J. PRAVEENA- P21PHY110 of II-M.Sc Physics got selected for TNSCST (Tamil Nadu State Council for Science and Technology) Student Project Scheme with the stipend of Rs.7500/- for the period 2022-2023.

·         Students participated a three days Workshop on “Recent Developments in Neutrino Astrophysics” at Saint Joseph’s College, Trichy from 01.02.2023 to 03.02.2023

·         Students attended Mini PTTS (Physics Training and Talent Search Program) at Kamaraj University, Madurai from 01.02.2023 to 03.02.2023

·         Students visited CECRI (CENTRAL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTE), Karikudi for CSIR-CERI OPEN DAY & SCIENCE EXHIBITION.

·         25 Students participated “World Space Week Expo” at Mahendra Arts and Science College, Namakkal from17.10.2022 to 19.10.2022

·         Students of Physics department got overall Second place in the Inter-Collegiate Sports meet and March-Past held on 26.12.2022.

Staff Performances:

·           Mr.R.Kabilan has published 3 research articles in Reputed Journals and one Research-article presented in international conference

·         Mr.P.Ramesh has published research article in Reputed Journal, one Research-article presented in international conference and participated Workshops and 3 Seminars.

·              Ms.S.Manimegali has been awarded Ph.D and has published 2 Research-articles in Reputed journals.

·             Dr.S.Muruganantham has published 1 research articles in Reputed Journals.

·             Dr.K.Parimala has published 4 research articles in Reputed Journals and One research-scholar has completed Ph.D under her guidance. 

 

இயற்பியல் துறை விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் இரண்டாமிடம் பெற்றது.





இஸ்ரோ ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கெட் ஏவுவதை நேரில் கண்டு களித்த நேரு நினைவுக் கல்லூரி மாணவர்கள்.


நேரு நினைவுக்கல்லூரி இயற்பியல் துறை சேர்ந்த 30 மாணவ மாணவியல் ராக்கெட் ஏவுதலை நேரில் பார்வையிட்டனர். இஸ்ரோவால் முதல்முறையாக எஸ் எஸ் எல் வி ராக்கெட் இப்போதுதான் ஏவப்பட்டது. அதாவது சிறிய வகை செயற்கைக்கோள் ஏவுவதற்காக பிறந்த செலவில் இந்த புதிய வகை ராக்கெட் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டது. இந்த ராக்கெட்டில் EOS-2 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

பள்ளி மாணவர்கள் தயாரித்த 75 செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட் வழியாக வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ராக்கெட் ஏவுதலை நேரடியாக கண்டு களித்த மாணவர்கள் ராக்கெட் தொழில்நுட்பம் பற்றியும் செயற்கைக்கோள் வேலை செய்வததைப் பற்றியும் மிகவும் விளக்கமாக தெரிந்து கொண்டனர்.


"இஸ்ரோவின் SSLV-D1 தவறான வட்டப்பாதையில் வைத்த செயற்கைக்கோள்கள் இனி பயன்படாது" என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்களை எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் (லாஞ்ச் வெஹிக்கிள்) சுமந்து சென்றது. குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் முதலாவது பயணத்திலேயே நிர்ணயித்த இலக்கில் உள்ள வட்டப்பாதைக்கு பதிலாக நீள் வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை ராக்கெட் வைத்ததால் அவை அனுப்பி வைக்கப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லை.

                     


நேரு நினைவுக் கல்லூரி மாணவிகளின் ஆய்வுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் நிதி உதவி.

 நேரு நினைவு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை இயற்பியல் பயிலும் M.சரிகா மற்றும் J.பிரவினா ஆகிய மாணவிகள் கிரீன் நானோ தொழில்நுட்பம் மூலம் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான  தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்னர் ஆய்வு சுருக்கம் சமர்ப்பித்தனர். இந்த ஆய்வு சுருக்கத்தை பரிசீலித்து, இந்த ஆய்வு செய்வதற்காக 7500 நிதியுதவி அளித்துள்ளது. இந்த இயற்பியல் உதவி பேராசிரியர் P.ரமேஷ் அவர்கள் வழி காட்டினார்.

இந்த உதவி தொகை பெற்ற மாணவிகளை கல்லூரி தலைவர், செயலர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர், இஸ்ரோ பாலசண்முகம் மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் பாராட்டினர்.






Students attended Mini PTTS (Physics Training and Talent Search Program) at Kamaraj University, Madurai from 01.02.2023 to 03.02.2023.







Students participated a three days Workshop on “Recent Developments in Neutrino Astrophysics” at Saint Joseph’s College, Trichy from 01.02.2023 to 03.02.2023.





Paper Presentation





காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.


திங்கள் கிழமை (26.09.22) காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பார்வையாளர் தினம் கொண்டப்பட்டது. இதில் இதுவரை செய்யப்பட்ட நவீன ஆராய்ச்சிகள் குறித்த கண்காட்சி இடம் பெற்றது.  நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை சார்ந்த  சுமார் 20 மாணவ, மாணவிகள் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டனர். அதில் லெட் ஆசிட் பேட்டரி, லித்தியம் அயன் பேட்டரி, சோடியம் அயன் பேட்டரி, மெட்டல் அயன் பேட்டரி, மெட்டல் சல்பர் பேட்டரி,  metal-Air  பேட்டரி, Flow பேட்டரி போன்ற அனைத்து வகையான பேட்டரி குறித்தும், அதன் பயன்கள் மற்றும் தேவைகள் குறித்தும் தெளிவாக ஆராச்சியாளர்கள் எடுத்து கூறினர்.  சூப்பர் மின்தேக்கி மூலம் மின்சார வாகனம் தயாரித்தல் குறித்தும், இதன் மூலம் எதிர்கால எரிபொருள் பயன்பாட்டை சமாளிக்க,   சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க போன்ற பல்வேறு தேவைகள் குறித்தும் தெளிவாக விளக்கினர். பொருட்களின் அரிமான (இரும்புக் மேற்பரப்புகளில் பிடிக்கும் துருவை) விளைவுகளை வேதியியல் முறையில் நீக்க முடியும் எனவும், பல்வேறு கட்டிடங்கள், ராணுவ உபகரணங்கள், பாலங்கள், கப்பல்கள் எவ்வாறு அரிமான இழப்புக்களை தடுக்கிறார்கள் எனவும், புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டது. 

கண்ணாடி பொருட்களை எவ்வாறு அறிய அழகு பொருட்களாக பற்றி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.  பலவகையான ஆராய்ச்சி பொருட்களை சோதனை செய்யும் உயர் தெளிவுத்திறன் பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கி (HR -TEM),  புல உமிழ்வு ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (FE-SEM),  X-Ray Powder Diffraction (XRD), Raman Spectrometer, ஃபோரியர்-மாற்றும் அகச்சிவப்பு நிறமாலை (FT-IR), Ultraviolet Visible Spectroscopy (UV-Vis-NIR), Mass spectrometry போன்ற உயர் நிறமாலை கருவிகள் செயல்படும் விதம் தெளிவாக விளக்கப்பட்டது.



நேரு நினைவு கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாள்-உறுதிமொழி ஏற்பு. 


இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும், கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்துசக்தியாக விளங்கினார் அப்துல் கலாம்எனவே, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15-ம் நாள் இளைஞர் எழுச்சி நாளாக  ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுகிறது.


நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக இளைஞர் எழுச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்துல் கலாம் வளர்ந்த விதம், அறிவியல் துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய சாதனைகள், மக்கள் குடியரசு தலைவராக அவரின் எளிமை போன்ற பல கருத்துக்களை கருத்துக்களை மாணவ மாணவிகள் அறிந்து கொண்டனர்.

நமது வாழ்வில் துன்பத்தில் துவளும் யாரேனும் ஒருவர் வாழ்வில், நாம் ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி, அவரை துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றால், நாம் மனிதனாக பிறந்த பலன் நம்மை முற்றிலும் வந்ததையும் என்ற  அப்துல் கலாம் உறுதிமொழி பேராசிரியர்கள் முன்னிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.













நேரு நினைவு கல்லூரியில் இந்திய அணுக்கருவியலின் தந்தை,  ஓமி பாபா  பிறந்த நாள் விழா.


நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 27.10.2022ல் இந்திய அணுக்கருவியலின் தந்தை, ஓமி பாபா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்  ஓய்வு பெற்ற கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு தலைவர், IGCAR கல்பாக்கம் டாக்டர் ஆர். வெங்கடேசன், கலந்து கொண்டு  இந்திய அணுக்கருவியலின் தந்தை,  ஓமி பாபா  சாதனை குறித்து பேசினார்.  மேலும் அவர் பேசுகையில் மேலை நாடுகளுக்கு இணையாக, உலகின் 12 வது நாடக அணுசக்தியில் உயர வழிவகுத்தவர் ஓமி பாபா. ஐன்ஸ்டீனின் ஆற்றல் சமன்பாட்டை வைத்து தோரியும் அணுவை பயணிப்படுத்தி ஆற்றல் தயாரிக்கும் முறையை உருவாக்கியவர் ஓமி பாபா. ஏனென்றால் உலகிலேயே 2 வது அதிக தோரியம் கிடைக்கும் நாடு இந்தியா ஆகும். அணு கழிவுகள் அதன் கதிரியக்கம் வெளியிட மிக நீண்ட காலம் எடுப்பதால், பாதுகாப்பாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெளிவாக எடுத்து கூறினார். நிலவு ஏன் புவி ஈர்ப்பு விசையால் கீழே விழாமல் சுற்றுகிறது, செயற்கைக்கோள் எவ்வாறு சுற்றுகிறது என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார். மேலும் புவி ஈர்ப்பு விசையால் தண்ணீரின் வேகம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை பல பரிசோதனை மூலம் மாணவர்களே செய்ய வைத்து தெளிவாக விளக்கினார்.  


தலைமை தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்,  பொது விழிப்புணர்வு பிரிவு, IGCAR கல்பாக்கம்ஜலஜா மதன்மோகன்பேசுகையில் உலகிலே இரண்டாவது அதிகமான தோரியம் இந்தியாவில் உள்ளதுஇதை வைத்து எவ்வாறு யுரெனியமகா மாற்றி அணு சக்தி மூலம் மின்சாரம் உருவாகும் முறையை இந்தியாவில் பயன்படுத்தினர்என்பதை எடுத்துக் கூறினார். யுரேனியம்-233 யுரேனியம்-235, புளூட்டனியம்  மூன்றையும் பயன்படுத்தும் அணு உலை உலகிலேயே கல்பாக்கதில் மட்டுமே உள்ளது என்பது மாபெரும் சாதனையாகும் என்பதை எடுத்துக் கூறினார். இந்தியாவில் அணு உலைகள் தொடங்கபட்ட  விதம் மற்றும் கல்பாக்கம் அணுஉலையில் எவ்வாறு யுரேனியம் அணுவை செறிவூட்டி  மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பதை விளக்கினார். உலகில் இந்திய அணுஉலை எவ்வாறு சிறப்புத்தன்மை வாய்ந்து என்பதையும், இந்தியாவில் எத்தனை அணு ஆராய்ச்சி நிலையம் உள்ளது அங்கு என்னொன்ன ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது என்பதை விளக்கினார்.



கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு அறிவியல் உதவியாளர் IGCAR கல்பாக்கம், ராமு மற்றும் பார்த்திபன் அணு உலையில் நடக்கும் வினையை அணு உலை மாதிரிகளுடன் தெளிவாக விளங்கினார். அணு உலைகளில் யுரேனியம் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்பது பற்றியும், காமினி பரிசோதனை அணு உலைகளில் எவ்வாறு பரிசோதனை நடைபெறுகிறது என்பது பற்றியும் தெளிவாக எடுத்து கூறினார்.


முன்னதாக கல்லூரி துணை முதல்வர் குமாரராமன் அனைவரையும் வரவேற்றார். துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன் சிறப்பு விருத்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.  கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன்,   கல்லூரி செயலர்  பொன்.ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக பேராசிரியர் இரா.கபிலன் நன்றியரை வழங்கினார். பேராசிரியர் ரமேஷ் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.



இஸ்ரோ, உலக விண்வெளி வார கண்காட்சியில் பங்கேற்ற நேரு நினைவு கல்லூரி மாணவர்கள். 


1957-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி ’ஸ்புட்னிக்-1’ என்கிற செயற்கை விண்கலம் விண்ணில்  ஏவப்பட்ட நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை உலக விண்வெளி வாரமாக கொண்டாடுகின்றன. மனிதகுலத்தின் தேவைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. 


இதை முன்னிட்டு இஸ்ரோ மகேந்திரகிரி (IPRC) பிரிவால் நாமக்கல் மஹிந்திரா பொறியியல் கல்லூரியில் உலக விண்வெளி வாரம் அக்டோபர் 17 முதல் 19 வரை ISRO SPACE-EXPO 2022 கொண்டாடப்பட்டது. அதில் நேரு நினைவு கல்லூரி  இயற்பியல்  துறையை சார்ந்த சுமார் 20 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். 


இந்த இஸ்ரோ கண்காட்சியில்  VIKAS, CYRO, PSLV-PS4, CE-20,  CUS போன்ற நவீன ரக PSLV, GSLV ராக்கெட்டில் பயன்படுத்தும் என்ஜின்கள் மற்றும் விண்வெளி உடைகள் ஆகியவற்றை நேரடியாக பார்க்க முடிந்தது. மேலும் இந்தியாவின் சரித்திர சந்திராயன்-1, சந்திராயன்-2, மங்கள்யான் மற்றும் உலக சாதனை 104 செயற்கைக்கோள் ஏவியது பற்றிய காட்சி விளக்கங்களுடன் தெளிவாக விளக்கினார்கள். இஸ்ரோ இதுவரை செலுத்திய செயற்கைகோள்கள், அடுத்து செலுத்த இருக்கும் ககன்யான், ஆதித்யா போன்றவை திட்ட மாதிரிகளுடன் விளக்கப்பட்டது.


இஸ்ரோவில் என்ன என்ன வேலை வாய்ப்புகள் உள்ளன, எவ்வாறு வேலை பெறுவதற்கு படிக்க வேண்டும்,  எவ்வாறு போட்டி தேர்வில் வெற்றி பெறுவது போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளால் கருத்தரங்கம் மூலம் விளக்கினார்கள்.  பங்கேற்ற அனைவருக்கும் இஸ்ரோ சான்றிதழ் வழங்கப்பட்டது.






































நேரு நினைவுக் கல்லூரியில் விண்வெளி கண்காணிப்பு மற்றும் வாய்ப்புகள் -கருத்தரங்கம்.



புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் விண்வெளி கண்காணிப்பு மற்றும் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை (11.01.23) நடைபெற்றதுவிண்வெளி தொடர்பாளர் மற்றும் விண்வெளி புகைப்பட கலைஞரான மோகன்ராஜ், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்இதில் புதன்வெள்ளிபூமிசெவ்வாய், வியாழன்சனியுரேனஸ்நெப்டியூன் மற்றும் நிலா உருவான விதம் பற்றியும் ஏன் பூமியில் மட்டும் உயிரினங்கள் வாழ்வதற்கான காரணங்கள் உள்ளன என்பது பற்றியும் தெளிவாக விளக்கினார்எந்த காரணத்தால் புளூட்டோவை கோள் என்ற நிலையிலிருந்து அதை எடுத்தார்கள் போன்ற காரணத்தையும் விளக்கினார்லிப்பர்ஷி அறிஞர் குழந்தைகள் விளையாடுவதை பார்த்து லென்ஸ்களை மாற்றி அமைத்து தொலைநோக்கி உருவாக்கினார்இதை வைத்து கலிலியோ கலிலி அதி நவீன தொலைநோக்கி உருவாக்கி வியாழன் கோளையும்வியாழன் நிலாக்களான ஐஓஐரோப்பாகனிமீடு மற்றும் காலிஸ்டோ  ஆகியவற்றை தெளிவாக கண்டறிந்தது எவ்வாறு என்பதை எடுத்துரைத்தார். ஒளி எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் வகையான தொலைநோக்கிகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன எந்த தொழில் நுட்பத்தில் அது வேலை செய்கிறது என்பதை விளக்கமாக எடுத்து கூறினார். ஒரு தொலைநோக்கி வைத்து அந்த தொலைநோக்கியில் எவ்வாறு குவிய தூரம் அமைக்கப்பட்டுள்ளது, எவ்வாறு கண்ணா இருக்கு லென்ஸ் அமைக்கப்பட்டுள்ளது, எவ்வளவு தொலைவில் உள்ள பொருளை பார்க்க முடியும் என்பதற்கான செயல்முறை விளக்கத்தையும் கூறினார்.

நிறப்பிரிகை நிறமாலைமானி மூலம் விண்வெளியில் அணுக்கள்வாயுக்கள் என்னென்ன இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் விளக்கினார்மின்காந்த அலைகள் பற்றியும் அலை நீளம்அதிர்வெண் வைத்து நட்சத்திரங்களை கண்டுபிடிப்பது பற்றியும் கூறினார்அதிக அலை நீளம் கொண்ட ரேடியோ அலைகளை ரேடியோ தொலைநோக்கி வழியாக இரவு பகல் முழுவதும் ஆராய்ச்சி செய்து விண்வெளியில் விண்வெளியில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்யலாம்ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அகச்சிவப்பு (IR) கதிர்களை உள்வாங்கி அதன் மூலம் விண்வெளியில் உள்ள  விண்வெளி பொருட்களை ஆய்வு செய்கிறதுமேலும் சூரியனில் எவ்வாறு அணுக்கருவு இணைவு வினை நடைபெறுகிறது, சூரியனின் ஆயுட்காலம் எவ்வளவு இருக்கிறதுஅணுக்கருவி இணைவு நடைபெறாத இடத்தில் கரும்புள்ளி காணப்படுவது எவ்வாறு என்று கூறினார்தொலைநோக்கி வழியாக அனைத்து மாணவிகளும் நேரடியாக சூரியனின் கரும்புள்ளியை கண்டு மகிழ்ந்தனர். 



முன்னதாக இந்த நிகழ்வை இயற்பியல் துறை தலைவர் வெங்கடேசன்  அனைவரையும் வரவேற்றார்கல்லூரி தலைவர், செயலர், முதல்வர்  மற்றும் சுய நிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்உதவி பேராசிரியர் கபிலன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்இவ்விழாவைக்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் அவர்கள் செய்திருந்தார்இந்த நிகழ்வுகளில் இயற்பியல் துறை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கு பெற்றனர்.


  • புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நட்சத்திர திருவிழா தொடக்கம்.


    கி. பி. 1610 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வானியலாளர் கலிலியோ கலிலி நம் சூரிய குடும்பத்தின் வியாழன் கோளை தன்னுடைய தொலைநோக்கி மூலமாக கண்டறிந்து அதனை சுற்றிவரும் நான்கு நிலவுகளை முதலில் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு தான் உலகை புரட்டிப் போட்ட நாள் என்பதை கொண்டாடும் விதமாக முதல்முறையாக இந்த நட்சத்திர திருவிழா கொண்டாடப்பட்டது.


    நட்சத்திர திருவிழாவை கல்லூரி தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா பொன் பெரியசாமி தலைமை வகித்தார். முன்னதாக இயற்பியல் பேராசிரியர் இரா.கபிலன் வரவேற்புரை ஆற்றினார். இயற்பியல் பேராசிரியர் பொ .ரமேஷ் விழா ஏற்பாடுகளை செய்தார். சூரிய குடும்பம் பற்றி காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டது. கைபேசி வழியாக புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் கோளையும், நிலா, நட்சத்திரங்கள் மற்ற கோள்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக காட்சிப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டது. இந்த நட்சத்திர திருவிழாவிற்காகஅதிநவீன தொலைநோக்கி வாங்கப்பட்டது. 


    நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு தொலைநோக்கிகள் மூலம் நிலா, நட்சத்திரங்கள் கண்டு களித்தனர்.  விண்வெளி நிகழ்வுகளை நேரடியாக காண்பது அறிவியல் அபூர்வங்களை புரிந்த கொள்ள எளியதாவும், மேலும் தெரிந்து கொள்ள ஆர்வத்தை தூண்டுவதாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வு ஜனவரி 8, 9 என மேலும் இரு நாட்களிலும் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும்.மேலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், இன்னும் பலர் வானியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்குகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளது.





    நேரு நினைவுக் கல்லூரி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகியவை இணைந்து இந்த நட்சத்திர திருவிழாவை நடத்தியது. தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நட்சத்திர திருவிழாவானது நடைபெற்றது.













புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நிலா திருவிழா தொடக்கம்.


புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இன்று (25.02.23) மாலை NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் இயற்பியல் துறை சார்பில் நிலா திருவிழா  தொடங்கப்பட்டது. தேசிய அறிவியல் நாள் (National Science Day) பிப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.


இயற்பியல் துறை உதவி பேராசிரியர் கபிலன் வரவேற்புரை ஆற்றி, நமது தொலைநோக்கி பற்றி எடுத்துரைத்தார். இந்த நிலா திருவிழா நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஆர் பொன்பெரியசாமி தொடங்கி வைத்து, விண்வெளி பற்றிய பல அதிசய நிகழ்வுகளை இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு அதை தொலைநோக்கிய வழியாக கண்டு களித்து அறிவியல் வளர்ச்சியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் பேசுகையில் நிலவின் இயக்கம்  வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் நிலவானது 12 டிகிரி நகர்வதை வைத்து திதி கணக்கிடுகிறார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில்  நிலவு பயணம் செய்யும் போது அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் தமிழ் மாதமாக குறிக்கப்படுகிறது என்பதையும், நிலவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். 



புத்தனாம்பட்டி சமூக ஆர்வலரான பேராசிரியர் முனைவர் சரவணன் நடேசன் அவர்கள் பேசுகையில் 60 தமிழ் வருடங்கள் கணக்கிடுவது பற்றியும், அனைவரும் அவர்கள் பிறந்த தமிழ் வருடத்தின் பெயரை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த புத்தனாம்பட்டி கிராமத்திற்கு நவீன தொலைநோக்கி அனைவரும் பயன்படுத்தி அறிவியலை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார். நேரு நினைவுக் கல்லூரியின் முன்னாள் மாணவர் கோவிந்தராஜ் கலந்து கொண்டுபேசுகையில்   வியாழன் வெள்ளி, செவ்வாய், சனி புதன் மற்றும் நட்சத்திரங்கள் பற்றி எடுத்து கூறினார். IQAC ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் உள்ளிட்ட பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். 


இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு  அதிநவீன தொலைநோக்கி மூலம் அழகிய நிலா, வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், வெள்ளிகோள், செவ்வாய் கோள்,  ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு மேலும் பிப்ரவரி 26, 27, 28 மூன்று  நாட்கள் நடைபெறுகிறது. அந்த மூன்று  நாட்களிலும் மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை தொலைநோக்கி மூலம் நேரடியாக காணலாம்.



தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், இந்திய வான் இயற்பியல் மையம், இந்திய வானியல்  சங்கம், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், அறிவியல்பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகியவை இணைந்து தமிழகம் முழுவதும் 200 இடங்களில் இந்த நிலா திருவிழாவை நடத்துகிறது.


































நிலவாகிய என்னை பற்றி சில தகவல்கள்.

  • நிலவாகிய நான் பூமியின் ஒரு இயற்கைத் துணைக்கோளாக உள்ளேன். 
  • நான் ஏறத்தாழ 4 . 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக பிறந்தேன்.
  • பூமியின் மீது செவ்வாய் கிரகம் போன்ற ஒரு கோள் மோதி ஏற்பட்ட துகளில் இருந்து நான் உருவானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • நான் பூமியின் அளவில் மூன்றில் ஒரு பங்குதான் உள்ளேன்.
  • நான் சூரிய குடும்பத்தில் உள்ள 5 ஆவது மிகப்பெரிய துணைக்கோளும், 2 ஆவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆவேன்.
  • பூமியிலிருந்து நான் மூன்று லட்சத்து 84 ஆயிரத்து நானூற்றி மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளேன். 
  • என்னை நானே சுற்றவும் பூமியை வலம் வரவும் ஒரே நேரத்தை 29.5 நாட்கள் எடுத்துக் கொள்வதால் என் ஒரு பக்கத்தை மட்டுமே பூமியிலிருந்து நீங்கள் பார்க்க முடியும். 
  • என் ஈர்ப்புவிசை குறைவாக (1/6) இருப்பதால் பூமியில் 120 கிலோ உள்ள மனிதன் என் நிலா பரப்பில் 20 கிலோதான் இருப்பார். 
  •  என் மீது படும் சூரிய ஒளியை எதிரொளிப்பதால் நிலவொளி ஏற்படுகிறது.
  • என் மீது படும் சூரிய ஒளியில் 7.3 சதவீதத்தை மட்டுமே எதிரொளிக்கிறேன்.
  • என் நிலவொளி பூமியை வந்தடைய 1.3 நொடிகளாகிறது.
  • என் ஈர்ப்புவிசையால் கடல் அலைகள் உருவாகின்றன.
  • எனக்கு வளிமண்டலம் இல்லாததால் நீங்கள் பேசினால் கேட்காது.
  • என் நிலா பரப்பில் டைட்டானியம் கனிமம் அதிக அளவில் இருக்கிறது.
  • 1969-ல் ஜூலையில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், காலின்ஸ் மூவரும் அப்பல்லோ 11 மூலம் நிலவுக்கு வந்தனர். 
  • என் நிலாப்பரப்பில்  இறங்கிய முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங். 
  • பூமியைத் தவிர மனிதர்கள் கால் பதித்த ஒரே வான்பொருள் நிலவாகிய நான் தான் என்பதில் பெருமை கொள்கிறேன். 
  • நிலா பரப்பில்  முதலில் இறங்கி ஆய்வு செய்யப்பட்ட இடம் அமைதிக்கடல் என்று அழைக்கப்படுகிறது.
  • என் நிலாப்பரப்பில் உள்ள நீரை முதன் முதலாக கண்டறிந்தது  இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-1 என்ற செயற்கை கோளில் இருந்த எம்.3 என்ற கருவியாகும்.
  • நான் பூமியை விட்டு ஆண்டுக்கு 3.82±0.07 செமீ அளவில் விலகிச் சென்று கொண்டிருக்கிறேன். 

நேரு நினைவுக் கல்லூரியில் வியாழன் வெள்ளி கோள்களின் அரிய இணைவு தொலைநோக்கியில்  கண்டுகளிப்பு.


புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் இன்று (01.02.23) மாலை வியாழன் வெள்ளி கோள்களின் அரிய இணைவு தொலைநோக்கியில் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஆர். பொன்பெரியசாமி தொடங்கி வைத்தார். வானில் வெள்ளி, வியாழன் மற்றும் துணை கோளான நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில்  சந்தித்த அரிய நிகழ்வு கடந்த 10 நாட்களாக  நிகழ்ந்து வருகிறது. சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. அவ்வப்போது, சில கோள்கள் நேர்கோட்டில் வரும் நிகழ்வும் நடக்கிறது.




வெள்ளி கோள்



வெள்ளி சூரியனை ஒவ்வொரு 224.7 நாட்களில் சுற்றி வருகின்றது. இக்கோளிற்கு இயற்கைத் துணைக்கோள் ஏதுமில்லை.  இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" எனப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும்.

வியாழன் கோள்




நமது சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய வாயு கோள் வியாழன் ஆகும். மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது நொடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது. சூரிய சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சுமார் 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் சூரியனைச் சுற்றி வருகிறது. புவியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும் வியாழன், புவியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை புவியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. இது புவியீர்ப்பு விசையை விட 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிக அதிக காந்த புலத்தை கொண்டுள்ளது.




வியாழன், வெள்ளி ஆகிய கோள்களின் இணைவு இன்று (01.03.23) புதன்கிழமை மாலை 6.30 முதல் 8மணி வரை நிகழ்ந்தது. இரு கோள்களும் 0.52 டிகிரி இடைவெளியில் இரு கோள்களும் மிக அருகில் இருந்தது. இது ஒரு மாயத் தோற்றம் மட்டுமே. உண்மையில் இரு கோள்களுக்கு இடையிலான தூரம் பல 67 கோடி கிலோமீட்டர்களாக இருக்கும். இந்த இடைவெளி இன்று குறைந்து சுமார் 41 கோடி கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கும். அந்த இரு கோள்களும் பூமியிலிருந்து பார்க்கும் பொழுது ஒன்றை ஒன்று தழுவி இருப்பது போல் தெரியும்.



இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு  அதிநவீன தொலைநோக்கி மூலம் அழகிய நிலா, வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், வெள்ளி கோள், செவ்வாய் கோள்,  ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் படிக்கும் மாணவன் தேவநாதன் மாணவ மாணவிகளுக்கு  விளக்கம் அளித்தனர்.




உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா.


உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா 07.03.23 செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.



தொடக்கமாக விடுதி காப்பாளர் முனைவர் அனிதா அனைவரையும் வரவேற்றார். இந்த மகளிர் தின நிலா திருவிழா நிகழ்ச்சியை தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தலைமை உரையில் உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி வருகிறது. சூரியன், நிலா, காற்று மற்றும் இயற்கை ஆகிய அனைத்துமே மனிதனுக்கு உதவியாக இருக்கிறது. அதேபோலவே மனிதனும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும். நிலவின் இயக்கம், நட்சத்திரத்தில் நிலவு பயணம் செய்யும் குறித்தும் எடுத்துரைத்தார். பெண்கள் கடின உழைப்பின் மூலம் சிறந்த விளங்குகிறார்கள். அனைத்து மாணவிகளும் பல சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் முதலாக விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தி பேசினார். 



கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். அதில் நிலவில் முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் தான் அனைவருக்கும் தெரியும். இரண்டாவதாக வருபவர்களை உலகம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆகவே அனைவரும் தங்கள் துறையில் முதன்மையாக சிறந்த வழங்க வேண்டும் என்று வாழ்த்தினார். மேலும் மகளிர் தின சிறப்பு பரிசாக விடுதியை குளிர்சாதன வசதியுடன் நவீனமயமாக மேம்படுத்தி தரப்படும் என்று உறுதி அளித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஆர் பொன்பெரியசாமி, விண்வெளி பற்றிய பல அதிசய நிகழ்வுகளை இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு அதை தொலைநோக்கிய வழியாக கண்டு களித்து அறிவியல் வளர்ச்சியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். 



இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் பேசுகையில் நிலவின் இயக்கம்  வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் நிலவானது 12 டிகிரி நகர்வதை வைத்து திதி கணக்கிடுகிறார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில்  நிலவு பயணம் செய்யும் போது அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் தமிழ் மாதமாக குறிக்கப்படுகிறது என்பதையும், நிலவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.



இந்த நிகழ்வில் மாணவிகள் அதிநவீன தொலைநோக்கி மூலம் அழகிய நிலா, வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், வெள்ளிகோள், செவ்வாய் கோள்,  ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில்  250 க்கு மேற்பட்ட மாணவிகள் முதல் முறையாக தொலைநோக்கி வழியாக நிலவு மற்றும் கோள்களை கண்டு களித்து வியப்படைந்தனர். இந்த நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ கிளிப்  மாணவிகள்  ஒருங்கிணைத்தனர்.









நேரு நினைவு கல்லூரியில்  பூமியின் ஆரத்தை கணக்கிடும் செயல்பாடு.



எரட்டோஸ்த்தனஸ் என்ற கிரேக்க அறிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த  நிழலில்லா நாளன்றுதான் பூமியின் விட்டத்தை அளந்து கூறினார். பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், நடைமுறையில் தினமும் சூரியன் சரியாக தலைக்கு மேலே வருவதில்லை. ஆண்டிற்கு இரண்டுமுறை மட்டுமே ஒரு இடத்தின் தலைக்கு மேலே வரும். ஆக, ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது, இல்லையா அந்த நாளையே நிழலில்லா நாள்'(Zero Shadow Day) என்கிறோம். இன்று 24.04.23 திங்கள்கிழமை சென்னையில் நிழல் இல்லாத தினம் ஆகும்.



மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், அறிவியல் பலகை இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பூமியின் ஆரத்தை அளக்கும் நிகழ்வு நடத்தியது.

நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை மற்றும் NMC அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து நிழலில்லா நாள் நிகழ்வு மூலம் பூமியின் ஆரத்தை அளக்கும் நிகழ்வு நடத்தியது. கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா பொன் பெரியசாமி தலைமை வகித்தார். இயற்பியல்  துறை தலைவர் முனைவர் வெங்கடேசன், இயற்பியல்  துறை பேராசிரியர்கள் பாலமுருகன், கபிலன்,  ரமேஷ்,  ரமேஷ் பாபு,  முருகானந்தம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் மதியம் 11:55 மணி முதல் 12.35 மணி வரை சோதனை செய்து சோதனை பூமியின் ஆரம் மற்றும் சுற்றளவு அளக்கப்பட்டது. சென்னைக்கும் புத்தனாம்பட்டிக்கும் உள்ள ஆர தொலைவை வைத்தும் குச்சியின் நிழலை வைத்தும் பூமியின் ஆரம் மற்றும் சுற்றளவு கண்டறியப்பட்டது.









நேரு நினைவு கல்லூரி மாணவிகள் புதுவையில் நடைபெற்ற தேசிய அளவிலான வானியல் தொழில்நுட்ப மாநாட்டில் முதலிடம்.


திங்கட்கிழமை (15.05.23) தேசிய அளவிலான அடிப்படை அறிவியல் மற்றும் வானியல் தொழில்நுட்ப மாநாடு புதுச்சேரியில் உள்ள பாப் ஜான் பவுல் கல்வியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அறிவியல் கண்காட்சி, வினாடி வினா, ஒளிப்பட விளக்கம், கருத்து விளக்கம் மற்றும் சுவரொட்டி விளக்க காட்சி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்திய வானியல் ஆய்வு மைய அறிஞர் மற்றும் இயக்குனர் முனைவர் க்ரிஸ்பின் கார்த்திக் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் பங்கு பெற்ற நேரு நினைவுக் கல்லூரி முது அறிவியல் முதலாம் ஆண்டு  மாணவிகள் செல்வி ஆ.வித்யா, து.சினேகா மற்றும் ச.நிவேதா ஆகியோர் அல்ட்ராசோனிக் கண்டுபிடிப்பான் என்ற அறிவியல் ஆய்வு செய்து அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு பெற்றனர். 


மேலும் இ.பிரியங்கா சுவரொட்டி மூன்றாம் பரிசு பெற்றார். ச.சரோஜினி மு.ராமலட்சுமி மற்றும் சி.சூர்யா ஆகியோர் வினாடி வினா போட்டியில் பங்கேற்றனர். மாணவிகளுக்கு இந்த போட்டிகளுக்கு  இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பொ.ரமேஷ் அவர்கள் வழிகாட்டினார். இயற்பியல் துறை தலைவர், ஒருங்கிணைப்பாளர், கல்லூரி முதல்வர், கல்லூரி தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் பரிசு பெற்ற மாணவிகளை பாராட்டினர்.














Nehru Memorial College students topped the National Level Conference on Basic Scientific  Awareness Astronomy & Its Application Conference. 

NMC Astro Club Activities

நமது அஸ்ட்ரோ கிளப் ஆனது  ஜனவரி 7 அன்று  கலிலியோ முதல் முதலாக தொலைநோக்கி வழியாக பார்த்த தினத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1. 07-09.01.23 ஜனவரி 7 முதல் 9 வரை நட்சத்திர திருவிழா மூலம்  மூன்று நாட்களுக்கு நாட்கள் நமது கல்லூரியில் தொலைநோக்கி வழியாக முன்னோர்க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நட்சத்திர மற்றும் கோள்களை கண்டு களித்தனர்.

2. 10.01.23 சூரிய பொங்கல் மூலம் சூரியனை கண்டு மகிழ்ந்தோம்.

3. 19.01.23 அரியமங்கலம் தொடக்கப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியல் தொலைநோக்கி வழியாக கண்டு களிப்பு.

4. 26.01.23 லால்குடி தென் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தொலைநோக்கி வழியாக கண்டுகளித்தனர்.

5.02-04.02.23 மூன்று நாட்கள் நமது கல்லூரி வால் நட்சத்திர திருவிழா மூலம் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண்டு மகிழ்ந்தனர்.

6. 06.02.23 நாமக்கல் பழைய பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வால் நட்சத்திர திருவிழா மூலம் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

7.17.02.23 தேனூர் பயிர் அறக்கட்டளை பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

8. 24.02.23 பெரம்பலூர் நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண்டு மகிழ்ந்தனர்.

9. 25-28.02.23 நமது கல்லூரியில் நிலா திருவிழா மூலம் நான்கு நாட்களில் 400 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு.

10. 01.03.23 வியாழன் மற்றும் வெள்ளி கோள்கள் இணையும் நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு.

11.07.03.23 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா.  250 கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு.

12.18.04.23 தேனுர் பயிர் அறக்கட்டளை பள்ளியில் வானியல் அபூர்வ நிழலில்லா நாள் (Zero Shadow Day).

13. 24.04.23 நேரு நினைவு கல்லுரியில் பூமியின் ஆரத்தை கணக்கிடும் செயல்பாடு.

14. 10.06.23 நேரு நினைவு கல்லூரியில் தேசிய மாணவர் படை வீரர்களுக்கு வான்நோக்கும் நிகழ்ச்சி 400 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  பங்கேற்பு.

15. 05.07.2023  மண்ணச்சநல்லூர் ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 400க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

Farewell Day 29.03.2023

















இந்த சாதனைக்கு உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏..... 

 

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...