Tuesday, April 18, 2023

தேனுர் பயிர் அறக்கட்டளை பள்ளியில் வானியல் அபூர்வ நிழலில்லா நாள்.

தேனுர் பயிர் அறக்கட்டளை பள்ளியில்வானியல் அபூர்வ நிழலில்லா நாள் (Zero Shadow Day).

நேரு நினைவு கல்லுரி, நேரு நினைவு கல்லுரி அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து தேனுர் பயிர் அறக்கட்டளை பள்ளியில்  நிழலில்லா நாள் நிகழ்வு  கோலாகலமாக நடந்தது. நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் ரமேஷ் அவர்கள் பங்குபெற்று நிழலில்லா நாள் பற்றி எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிழல் இல்லா நாள் குறித்தும் அந்த நிழலை வைத்து எவ்வாறு பூமியின் சுற்றளவு மற்றும் ஆரத்தை அளக்க முடியும் என்பதும்  விளக்கப்பட்டது. 18.04.23 செவ்வாய் கிழமை மதியம் 12:15 மணி அளவில் சோதனை மூலம் நிரலா தினம் மாணவ  மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.


பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், நடைமுறையில் தினமும் சூரியன் சரியாக தலைக்கு மேலே வருவதில்லை. ஆண்டிற்கு இரண்டுமுறை மட்டுமே ஒரு இடத்தின் தலைக்கு மேலே வரும். ஆக, ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது, இல்லையா அந்த நாளையே நிழலில்லா நாள்'(Zero Shadow Day) என்கிறோம்.


மகரரேகைக்கும்(Tropic of Capricorn)  கடகரேகைகக்கும்( Tropic of Cancer) இடையில் உள்ள நாடுகளில் மட்டுமே இந்நிகழ்வைக்காண முடியும்.  அனைத்து இடங்களிலும் ஒரேநாளில் இது நிகழ்வதில்லை. சூரியனின் வடசெலவு நாட்களில் ஒருநாளும், தென்செலவு நாட்களில் ஒருநாளும் என ஆண்டிற்கு இருமுறை மட்டும் நிகழும். மேலும், மதியம் 12 மணிக்குத்தான் நிழல் பூஜ்ஜியமாகும்.

சென்னை- ஏப்ரல்26, ஆகஸ்ட்16

திருச்சி - ஏப்ரல்17, ஆகஸ்ட்16

மதுரை - ஏப்ரல்15, ஆகஸ்ட்27

சேலம் - ஏப்ரல்20, ஆகஸ்ட்22

தஞ்சை - ஏப்ரல்18, ஆகஸ்ட்24

புதுக்கோட்டை- ஏப்ரல்17, ஆகஸ்ட்25

மற்ற ஊர்காரர்கள் பின்வரும் தொடர்பு மூலமாக உங்கள் இடத்தைத் தேர்வு செய்வதன் மூலம் உங்கள் ஊரில் எப்போது இந்நிகழ்வு நடைபெறும் என அறிந்துகொள்ளலாம்.

https://alokm.com/zsd.html




இதைத் தெரிந்துகொள்வதால் என்ன பயன்?

பல்வேறு பொருட்களின் நிழலின் நீளங்களை உற்றுநோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவமாகவும், மகிழ்வான செயல்பாடாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. எரட்டோஸ்த்தனஸ் என்ற கிரேக்க அறிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த  நிழலில்லா நாளன்றுதான் பூமியின் விட்டத்தை அளந்து கூறினாராம்.

https://link.public.app/1Grks

Trichy mail News

Arasiyal today News

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...