ISRO வின் மாபெரும் வெற்றி-நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் 3.
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்துஎல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தை இயக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல ஏதுவாக, அதில் உள்ளஉந்துவிசை இயந்திரங்கள் இயக்கப்பட்டு,அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம்படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து, விண்கலத்தை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி, நிலவின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் செலுத்தும் முயற்சி நேற்று முன்தினம் (ஜூலை 31) நள்ளிரவு 12.05 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் சிக்கலான இப்பணியை முடித்து, சந்திரயான்-3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் உந்தி தள்ளப்பட்டது. ஆக.5-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் விண்கலத்தை உந்தி தள்ளப்பட்டது. அதன்பிறகு, விண்கலத்தின் உயரம்படிப்படியாக குறைக்கப்பட்டு, திட்டமிட்டபடி நிலவில் ஆக.23-ம் தேதி மிக மெதுவாக தரையிறக்கப்படும்.
இது போன்ற தகவல் பெற
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment