Wednesday, October 25, 2023

18ம் நூற்றாண்டிலே எரிகற்களை (meteorite) பார்த்த சேலம் சுற்றுவட்டார மக்கள்.

18ம்  நூற்றாண்டிலே எரிகற்களை (meteorite) பார்த்த சேலம்  சுற்றுவட்டார மக்கள்.


1832ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைசூரிலும் சேலத்திலுமிருந்த மக்கள் பல நாட்கள் இரவிலே பழுக்கக்காய்ச்சின இரும்பை சம்மட்டி கொண்டு அடிக்கும் போது தெறித்து விழும் நெருப்புப் பொறிகளைப் போன்று வான மண்டலத்திலே எரிகற்களின் கூட்டங்களைக் கண்டனர். அதற்கு அடுத்த ஆண்டே (1833) பெரிய பஞ்சம் தோன்றியது. இப்பஞ்சத்தை மக்கள் சக்கி முக்கிப் பஞ்சம் என்றழைத்தனர். சேலத்தில் மட்டும் 28% மக்கள் இறந்தனர். தென் ஆற்காட்டில் மக்கள் இறந்த தொகை இதைவிட அதிகமாயும். கோயம்பத்தூரில் சற்று குறைவாகவும் இருந்தது.

Book Link

People around Salem saw the meteorite in the 18th century.

In November 1832, the people of Mysore and Salem saw clusters (meteorite) of embers in the sky, like fire traps, when hot iron was struck at night for several days. The next year (1833) there was a great famine. People called this famine as Shakki Mukpi Pancham. 28% of the population died in Salem alone. The death toll in South Arcot will be more than this. It was slightly less in Coimbatore.


Courtesy: Mr. Balabharathi, Trichy.

Thanks:  Dr. Rajasekar, VSSC, ISRO.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Monday, October 16, 2023

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் உலக மாணவர்கள் தினம் -உறுதிமொழி ஏற்பு.

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் உலக மாணவர்கள் தினம் -உறுதிமொழி ஏற்பு. 


இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும், கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்துசக்தியாக விளங்கினார் அப்துல் கலாம். எனவே, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15-ம் நாள் உலக மாணவர்கள் தினம்  மற்றும் இளைஞர் எழுச்சி நாளாக  ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுகிறது.



நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக உலக மாணவர்கள் தினம் அக்டோபர் 16 திங்கட்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன் மற்றும் கல்லூரி செயலர்  திரு.பொன். ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு மூங்கில் செடி வழங்கி, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும், மூங்கில் அதிக அளவில் ஆக்சிஜன் வழங்குவது குறித்தும் விளக்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் மற்றும் சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி அவர்கள் நமது வாழ்வில் துன்பத்தில் துவளும் யாரேனும் ஒருவர் வாழ்வில், நாம் ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி, அவரை துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றால், நாம் மனிதனாக பிறந்த பலன் நம்மை முற்றிலும் வந்ததையும் என்ற அப்துல் கலாம் உறுதிமொழி வாசிக்க பேராசிரியர்கள் முன்னிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். 




இயற்பியல் துறை தலைவர்  முனைவர்  அ. ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றினர். கல்லூரி தர கட்டுப்பாடு தலைவர் முனைவர் க.சரவணன், முனைவர் இரா.கபிலன், ரமேஷ் பாபு,  முருகானந்தம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்துல் கலாம் வளர்ந்த விதம், அறிவியல் துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய சாதனைகள், மக்கள் குடியரசு தலைவராக அவரின் எளிமை போன்ற பல கருத்துக்களை கருத்துக்களை மாணவ மாணவிகள் அறிந்து கொண்டனர். அனைவருக்கும் கலாம் முகமூடி, டி-ஷர்ட், மூங்கில் செடி, சான்றிதழ், மெடல், தொப்பி, பாரம்பரிய 15 தானிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இயற்பியல் உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.







இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Thursday, October 5, 2023

கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகதில் பயிற்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரியி உதவி பேராசிரியர்.

கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகதில் பயிற்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரியி உதவி பேராசிரியர்.



கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் ( Kodaikanal Solar Observatory) என்பது இந்திய வானியற்பியல் மையத்தித்தால்  இயக்கப்படும் ஆய்வகம் ஆகும். தென்னிந்தியாவிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில்  மலையின் உச்சியில் அமைந்துள்ளது. 1881 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்தியாவின் வானிலை ஆய்வுச் செய்தியாளர் பிலான்போர்டு சூரிய ஆய்வுக்கான விதையை விதைத்தார். "பூமியின் மீதான சூரிய வெப்ப சக்தியினை துல்லியமாக அளவிடுவது, குறிப்பிட்ட காலத்திற்கான அதன் வேறுபாடுகள் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக மேம்பட்ட சூரிய கண்காணிப்பு முறைகள் முதலிய முன்னேற்ற நடவடிக்கைகளை இவர் பரிந்துரைத்தார்.



20 அங்குல தொலைநோக்கிகளால் எடுக்கப்பட்ட சூரியன், விண்மீன்களின் புகைப்படங்கள், அவற்றின் கதிர்நிரல் வரைபடங்கள் ஆகியனவற்றின் முக்கியத்துவமும் அவை குறிப்பாக தென்னிந்தியாவின் மலை வாழிடத்தில் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் 1882, மே மாதத்தில் நார்மன் இராபர்ட்டு போக்சான் மதராசில் முன்மொழிந்தார்.




1893 ஆம் ஆண்டு மதராசு மாகாணத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தை தொடர்ந்து, சூரியனைப் பற்றிய புரிதல்களை அதிர்கரிக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. தென்னிந்தியாவின் மிக உயரமான, தூசு குறைந்த கொடைக்கானலில் ஒரு சூரிய இயற்பியல் வான் ஆய்வகத்தை நிறுவிட இலார்டு கெல்வின் முடிவு செய்தார். மிச்சி சிமித் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 1895 இல் பணிகள் துரிதமாக நடந்தன. மதராசு வான் ஆய்வகத்திலிருந்த கருவிகள் கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டு 1899 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 இல் கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் நிறுவப்பட்டது.


1909 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்குதான் முதன்முதலில் எவர்செட்டு விளைவு கண்டறியப்பட்டது. இந்த ஆய்வகத்தில் திரட்டப்பட்ட சூரிய தரவுகள் உலகில் கிடைக்கப்பெறும் மிகப்பழமையான தொடர் வரிசைத் தரவுகளாக 120 ஆண்டுகளுக்கு மேல் பராமரிகப்படுகிறது. பூமத்திய செறிவு, மின்னோட்டம் தொடர்பாக இங்குத் திரட்டப்படும் துல்லியமான தரவுகள் தனித்துவம் மிக்கவையாகும். அயன மண்டல ஆழம் காணல், புவிகாந்தம், சூரிய கரும்புள்ளி  நகர்வு, சூரியனின் மேற்பரப்பு ஆய்வுகள் போன்றவை இங்கு வழக்கமாக நடைபெற்று வருகின்றன. இங்கு திரட்டப்படும் தரவுகளின் தொகுப்புகள் தேசியத் தரவு மையம் மற்றும் உலாகாயத் தரவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.


 வைணு பாப்பு 1960ல் இங்கு இயக்குநராகப் பதவியேற்றார். நவீன கதிர் நிரல் வரைபட வசதிகள் கொண்ட 12 மீ சூரிய கோபுரம் ஏ.கே. தாசுவால் 1960 இல் இங்கு நிறுவப்பட்டு சூரியமைய்ய நிலஅதிர்ச்சியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. காந்தப்புல வரைபட ஆய்வுமுயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 1977 இல் இங்கிருந்த வானியல் அறிஞர்கள் பலர் பெங்களூருக்கு மாற்றப்பட்டு அங்கு இந்திய வானியற்பியல் நிறுவனத்தைத் தொடங்கினர்.


கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகத்தில்  தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகம், இந்திய வான் இயற்பியல் மையம் மற்றும் கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் இணைந்து மூன்று நாள் (30.09.23 முதல் 02.10.23 வரை) மாநில அளவிலான பயற்சி நடத்தியது. இதில் நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் பங்கு பெற்று அங்கு நடைபெறும் ஆராய்ச்சி பற்றி நேரடியாக தெரிந்து கொண்டார்.



இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...