புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி இணைந்து நடத்தும் 31 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தொடக்க விழா 2023 நவம்பர் 25 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் இனிதே நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக முனைவர் அ.அருண் விவேக், கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை நல்கினார். கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி.சியாமளா இரவிச்சந்திரன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். முனைவர் வெ.சுகுமாரன் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிமுக உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போற்றியும் நினைவு பரிசு வழங்கியும் சிறப்பிக்கப்பட்டது.
கல்லூரி தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன் அவர்கள் அறிவியல் இயக்கத்தின் சிறப்பினை யும்,அறிவியலால் நாம் அடையும் பயன்களையும் எடுத்து கூறி வாழ்த்துரை வழங்கினார்கள்.
கவிஞர் நந்தலாலா மாநிலத் துணைத் தலைவர் அவர்கள் மனித ஆயுளின் ரகசியத்தையும், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றினையும், சமூகம் மேல்நோக்கி செல்வதற்கு அறிவிலே காரணம் என எடுத்து கூறி வாழ்த்துரை வழங்கினார்.
பேராசிரியர் முனைவர்.மு.கிருஷ்ணன் மாண்பமை துணைவேந்தர் மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர், அவர்கள் அறிவியல் தொழில்நுட்பம் கடந்து வந்த வரலாற்றினையும், முன்னோர்கள் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மனிதநேயத்தின் மாண்புகள் காக்கப்பட வேண்டும் என்றும், மாநாட்டில் கலந்து கொண்ட மாணவர்களை இளம் விஞ்ஞானிகளே என்று அழைத்து நம்பிக்கை விதையினை விதைத்துத் தொடக்க விழா பேருரையாற்றினார்.
விழாவுக்கு மாநில மாநாட்டு செயல் தலைவர் சிவ.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் அவர்கள் முன்னிலை வகித்து பேசினார். முனைவர் K.T.தமிழ் மணி கல்லூரி துணை முதல்வர், முனைவர் மு.மீனாட்சிசுந்தரம் கல்லூரி ஒருங்கிணைப்பாளர், ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொ.ரமேஷ், இயற்பியல் துறை பேராசிரியர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஹரி பாஸ்கர் மாவட்ட இணை செயலாளர் அவர்கள் நிகழ்வின் நிறைவில் நன்றி உரை ஆற்றினார். முனைவர் சி.பிரபாகரன், தமிழ் ஆய்வுத்துறை, பேராசிரியர் M.மாணிக்கத்தாய், மாநில துணைத்தலைவர் அவர்கள் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கினார்.
இது போன்ற தகவல் பெற
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment