Sunday, December 10, 2023

இஸ்ரோவில் அசத்தலான வேலை.. மாதம் 64 ஆயிரம் வரை சம்பளம்..

இஸ்ரோவில் அசத்தலான வேலை.. மாதம் 64 ஆயிரம் வரை சம்பளம்..


இஸ்ரோவில் டெக்னிஷியன் 'பி' பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எனப்படும் இஸ்ரோவின் தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இஸ்ரோ நிறுவனத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அலுவலகம் உள்ளது. இஸ்ரோவில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது டெக்னிஷியன் - பி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: எலக்ட்ரானிக் மெக்கானி (33 பணியிடங்கள்), எலக்ட்ரிக்கல் (02), இன்ஸ்ட்ருமண்ட் மெக்கானிக் (09), போட்டோகிராபி (02), டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர் (02) என மொத்தம் 54 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி: எஸ்.எல்.எஸ்.சி/ எஸ்.எஸ்.சி தேர்ச்சியுடன் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ/என்.டி.சி / என்.ஏ.சிஆகிய ஏதேனும் ஒரு தொழிற்படிப்பு துறை சார்ந்த பிரிவில் முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர்களும் 35 வயது பூர்த்தி அடையாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி? தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு விண்ணப்பதாரகளுக்கு ரூ.100 கட்டணம் மட்டும் பிடித்தம் செய்த பிறகு மீதமுள்ள தொகை திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு மையம்: எழுத்து தேர்வு திறன் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். நாடு முழுவதும் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறும்.

சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை ரூ.21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும். பணியிடங்கள் குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிப்பில் பார்த்து தேர்வர்கள் உறுதி செய்து கொள்ளலாம். தேர்வு அறிவிப்பை படிக்க https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2023_December/NRSC_RMT_4_09122023.pdf கிளிக் செய்யவும்.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Tuesday, December 5, 2023

✍இயற்கை வாழ்வியல் முறை🕊️🌵🌵இஞ்சியின் நன்மைகள்.

✍இயற்கை வாழ்வியல் முறை🕊️🌵🌵இஞ்சியின் நன்மைகள்.


🌵🌵🌵🌵🌵🌵

இஞ்சி, உணவின் ருசி கருதி  உணவுடன் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் கூட. இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல் என பொருள்படும். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.

🌵🌵🌵🌵🌵🌵

இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும்  மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. அது மாத்திரமன்றி, இன்னும் பல மருத்துவ குணம்களையும் உடையது  இஞ்சி.


🌵🌵🌵🌵🌵🌵

இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம்  வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு  உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை  துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும். இஞ்சியை சுட்டு சாப்பிடுவதன் மூலம் பித்த, கப நோய்கள் நீங்கும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிடுவதன்  மூலம் பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் என்பன நீங்கும் அதேவேளை, சுறுசுறுப்பும்  ஏற்படும். காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் பருகுவதன் மூலம் பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல் தீரும். உடம்பும் இளமை பெறும்.

🌵🌵🌵🌵🌵🌵

பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும். இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வெந்நீர் குடித்துவர தொந்தி கரையும். இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

🌵🌵🌵🌵🌵🌵

இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும். இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

🌵🌵🌵🌵🌵🌵

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

🌵🌵🌵🌵🌵

புற்றுநோய்

இஞ்சியில் உள்ள காரமான உட்பொருட்களான ஜின்ஜெரால்கள், பாராடோல்கள், ஷோகோல்கள் மற்றும் ஜின்ஜெரான்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவற்றை அழிக்கவும் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், இஞ்சியை ஜூஸ் செய்து குடித்து வாருங்கள். குறிப்பாக ஆண்கள் பருகினால், புரோஸ்டேட் புற்றுநோய் வராது.

🌵🌵🌵🌵🌵🌵

மறதி தள்ளிப் போடப்படும்

இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள், நரம்பு மண்டலத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். முக்கியமாக இஞ்சி ஜூஸைக் குடித்து வந்தால், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் மேம்படும். இப்படி புரோட்டீன் அளவு அதிகரித்தால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

🌵🌵🌵🌵🌵🌵

சர்க்கரை நோய் கட்டுப்படும்

இஞ்சியில் உள்ள ஆன்டிபயாடிக் தன்மை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸைப் பருகி வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.


🌵🌵🌵🌵🌵🌵

ஆர்த்ரிடிஸ் வலி

இஞ்சியில் உள்ள நிவாரணிப் பொருட்கள், நாள்பட்ட மூட்டு வலிகளில் இருந்து விடுபட உதவும். மேலும் இது ஆய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மூட்டு வலி பிரச்சனைகள் இருப்பவர்கள், இஞ்சி ஜூஸை அடிக்கடி பருகி வருவது நல்லது.

🌵🌵🌵🌵🌵🌵

இரைப்பைக் குடல்

புற்றுநோய் இஞ்சி வயிற்றுப் பிரச்சனைகளான செரிமானமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தருவதால், இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து அடிக்கடி பருகி வந்தால், இரைப்பைக் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதோடு, வராமலும் தடுக்கப்படும்.

🌵🌵🌵🌵🌵🌵

கொலஸ்ட்ரால் குறையும்

இஞ்சி இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்

🌵🌵🌵🌵🌵🌵

🌷🌷🌷🌷🌷

🔹🔹🔹🔹🔹

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...