Sunday, December 10, 2023

இஸ்ரோவில் அசத்தலான வேலை.. மாதம் 64 ஆயிரம் வரை சம்பளம்..

இஸ்ரோவில் அசத்தலான வேலை.. மாதம் 64 ஆயிரம் வரை சம்பளம்..


இஸ்ரோவில் டெக்னிஷியன் 'பி' பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எனப்படும் இஸ்ரோவின் தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இஸ்ரோ நிறுவனத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அலுவலகம் உள்ளது. இஸ்ரோவில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது டெக்னிஷியன் - பி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: எலக்ட்ரானிக் மெக்கானி (33 பணியிடங்கள்), எலக்ட்ரிக்கல் (02), இன்ஸ்ட்ருமண்ட் மெக்கானிக் (09), போட்டோகிராபி (02), டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர் (02) என மொத்தம் 54 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி: எஸ்.எல்.எஸ்.சி/ எஸ்.எஸ்.சி தேர்ச்சியுடன் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ/என்.டி.சி / என்.ஏ.சிஆகிய ஏதேனும் ஒரு தொழிற்படிப்பு துறை சார்ந்த பிரிவில் முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர்களும் 35 வயது பூர்த்தி அடையாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி? தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு விண்ணப்பதாரகளுக்கு ரூ.100 கட்டணம் மட்டும் பிடித்தம் செய்த பிறகு மீதமுள்ள தொகை திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு மையம்: எழுத்து தேர்வு திறன் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். நாடு முழுவதும் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறும்.

சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை ரூ.21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும். பணியிடங்கள் குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிப்பில் பார்த்து தேர்வர்கள் உறுதி செய்து கொள்ளலாம். தேர்வு அறிவிப்பை படிக்க https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2023_December/NRSC_RMT_4_09122023.pdf கிளிக் செய்யவும்.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025. சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே ந...