Thursday, January 11, 2024

✍🏻🐹🐹இயற்கை வாழ்வியல் முறை🕊️🐹🐹தழுதாழையின் நன்மைகள்.

✍🏻🐹🐹இயற்கை வாழ்வியல் முறை🕊️🐹🐹தழுதாழையின் நன்மைகள்.


🐹🐹🐹🐹🐹🐹

தழுதாழை இலை, வேர் ஆகியவை கைப்பு, துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. நோய் நீக்கி உடலைத் தேற்றும்; வாத நோய்களைக் கண்டிக்கும்; உடல் வலியைப் போக்கும்.

தொடர்ந்து உபயோகித்து வந்தால் இளம்பிள்ளை வாதத்தால் ஏற்பட்ட முடக்கத்தைச் சரியாக்கும் வல்லமை கொண்டது தழுதாழை என்கின்றனர் மருத்துவர்கள்.

🐹🐹🐹🐹🐹🐹

இதன் இலையை வெந்நீரீல் போட்டு குளித்து வந்தால் வராத சுலை நோய்கள் குணமடையும்.

🐹🐹🐹🐹🐹🐹

இதன் இலைச்சாற்றைக் கெட்டியாக இடித்து மூக்கில் தடவிக் கொண்டால் மண்டைக் குடைச்சல், மூக்கில் நீர் வடிதல், தும்மல் போன்றவை குணமடையும்.

🐹🐹🐹🐹🐹🐹

இஞ்சி, மிளகு, புதினாக்கீரையோடு இதன் இலையை சேர்த்து அரைத்து விழுதாக்கி தினம் ஒரு சிறு உருண்டை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி வளரும்.

🐹🐹🐹🐹🐹🐹

இதன் இலையை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலமடையும். தோள் புஜங்களும் உறுதியுடன் இருக்கும். கால்களும் நன்கு சதைப்பற்றுடன் காணப்படும்.

🐹🐹🐹🐹🐹🐹

எலும்பாக இருப்பவா;கள் இந்த மருந்தினை சாப்பிட்டு வந்தால் சதைப் பற்றுடன் இருப்பார்கள்.

🐹🐹🐹🐹🐹🐹

தழுதாழை இலைச்சாற்றை சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து, தினமும் ஒன்றிரண்டு தேக்கரண்டி உட்கொள்ள, மேக நோய்கள் நீங்கும்.

🐹🐹🐹🐹🐹🐹

வாதத்தால் ஏற்படும் வலி நீங்க, இதன் இலைகளை ஒன்றிரண்டு கைப்பிடி அளவுக்கு எடுத்து, தேவையான அளவு நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, மிதமான சூட்டில், வலி ஏற்பட்ட இடங்களில் ஊற்றிக் கழுவ வேண்டும்.

🐹🐹🐹🐹🐹🐹

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் தழுதாழை இலையை வதக்கி, வலி, வீக்கம் ஏற்படும் இடங்களில் கட்டு போட்டுவர, பிரச்னை தீரும். இதன் இலையை ஆலிவ் எண்ணெய் விட்டு வதக்கி, விரைவாதம் மற்றும் நெறிகட்டிய இடங்களில் கட்டுப்போட, அவை குணமாகும்.

🐹🐹🐹🐹🐹🐹

சுளுக்கு, மூட்டு வலி இருப்பவர்கள், இதன் இலையை அரிசி கழுவிய நீரில் வேகவைத்து, துணியில் முடித்து வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். இலைகளை விளக்கெண்ணை விட்டு வதக்கி, வலி ஏற்படும் இடங்களில் பற்று போடலாம்.


🐹🐹🐹🐹🐹🐹

தழுதாழை இலையை அரைத்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு ஏற்படாது.

 இதனால் சொறி சிறங்கு தோள்களில் ஏற்படாமலிருக்க தொடர்ந்து தழுதாழை இலையை பயன்படுத்த வேண்டும். தோள்களில் சொரி சிரங்கு உள்ளவர்கள் விடுதலையை அரைத்து தேய்த்து வர வேண்டும். இதனால் தோல்களில் உள்ள சொரி சிறங்கு விரைவில் குணமாகும்.

🐹🐹🐹🐹🐹🐹

பின்குறிப்பு: எந்த மூலிகையை மருத்தவமாக பயன்படுத்தம்போது, சித்தமருத்தவர் அனுமதி பெற்றே பயன்படுத்துங்கள். 

சித்த மருத்துவத்தை பொறுத்தவரை உடல் உஷ்ணத்திற்கேற்ப மாறுபடும்.

🐹🐹🐹🐹🐹🐹

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚

 உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர்,🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.              

🕚🕚🕚🕚🕚

செல் நம்பர்  7598258480,  6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

🕚🕚🕚🕚🕚

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...