இனி 2 ஆண்டு பி. எட் படிப்புகளுக்கு அனுமதி இல்லை முக்கிய அறிவிப்பு வெளியீடு.
அடுத்த கல்வியாண்டு (2024-25) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்பு நடத்த கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தேசிய மறுவாழ்வு கவுன்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி கல்வி துறையில் வேலை செய்வததற்கு பி.எட் படிப்பு முக்கியமான ஒன்றாகும். அதற்கு இது வரை 2 ஆண்டு பி.எட் படிப்பு மற்றும் எதோ ஒரு பட்ட படிப்பு பெற்றிருந்தால் போதுமானதாக இருந்து வந்தது. ஆனால் அதில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கீழ இயங்கி வரும் தேசிய மறுவாழ்வு கவுன்சில் தான் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த கல்வியாண்டு (2024-25) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்பு நடத்த கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அடுக்க கல்வி ஆண்டு (2024-25) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்புக்கு புதிய அனுமதிகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டு பி.எட் திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.சி.டி.இ. 2 ஆண்டு பி.எட் பாடத்திட்டத்தில் போதிய கல்வித் தகுதிகள் இல்லை. மாறாக, 4 ஆண்டு பி.எட் பாடத்திட்டம் கற்பித்தலை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், கல்வி ஆராய்ச்சி, குழந்தை உளவியல், கல்வித் தொழில்நுட்பம் மற்றும் பிற பாடங்களையும் எடுத்துக்காட்டுகிறது. இது ஆசிரியர்களுக்கு மிகவும் வலுவான அடித்தளத்தை வழங்குகிறது. 2 ஆண்டு பி.எட் பாடத்திட்டம் வருங்கால மாணவர்களுக்கு பதிலாக 4 ஆண்டு திட்டத்தில் மட்டுமே இனி சேர வேண்டும்.
தற்போது இளநிலைப் பட்டப் படிப்புக்கு 3 ஆண்டுகள், பி.எட் படிப்புக்கு 2 ஆண்டுகள் என 5 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு மாற்றாக புதிய கல்விக் கொள்கையின் கீழ் 4 ஆண்டுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு, பி.எட் படிப்புடன் கூடிய ஓருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை (ஐடிஇபி) மக்கிய கல்வித்துறை அமைச்சகம் அறிமுகம் செய்தது
இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும்.
இந்த நிலையில் அடுத்த கலவி ஆண்டு (2024-25) முதல் 2 ஆண்டு பி.பட் படிப்புக்கு புதிய அனுமதிகளை கலவி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டு பி.எட் திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று ஆர்.சி.ஐ அறிவித்துள்ளது.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
No comments:
Post a Comment