Tuesday, January 30, 2024

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி,கணிதத்துறை சார்பில் பயிலரங்கம்.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி,கணிதத்துறை  சார்பில் பயிலரங்கம்.


புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் கணிதத்துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில்  பயிலரங்கக்கூட்டம் (30/01/2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதத்துறை பேராசிரியர் முனைவர் P.S.ஸ்ரீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கணித கட்டமைப்புகளின் கூற்றுகளை பற்றியும் அதற்கு எதிர்மறையான கூற்றுகளை எப்படி அமைப்பது என்பதை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.


இந்நிகழ்வின் தொடக்கத்தில் சுயநிதிப்பிரிவின் கணிதத் துறை தலைவர் திருமதி.P.பாக்கியலெட்சுமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு.A.வெங்கடேசன் அவர்கள் துவக்க உரை வழங்கி சிறப்பித்தார். கல்லூரியின் செயலர் பொன்.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையுரை வழங்கி பெருமைசேர்த்தார். அதனைத்தொடர்ந்து சுயநிதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு.M.மீனாட்சிசுந்தரம் அவர்கள் வாழ்த்துறை வழங்கி சிறப்பித்தார். அதனைத்தொடர்ந்து கணிதத்துறை தலைவர் முனைவர் திருமதி.V.சாவித்திரி அவர்கள் வாழ்த்துறை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியின் நிறைவுவிழா மதியம் 3.00 மணி அளவில் தொடங்கப்பட்டது. நிறைவுவிழாவில் கல்லூரியின் தலைவர் திரு பொன். பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வின் முடிவில் கணிதத்துறை பேராசிரியர் R.மார்க்கண்டன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவினை கணிதத் துறை தலைவர் திருமதி P.பாக்கியலெட்சுமி அவர்கள் ஏற்பாடு செய்தார்.





No comments:

Post a Comment

ஓநாய் சூப்பர்மூன் Wolf Supermoon 2026 #supermoon

ஓநாய் சூப்பர்மூன் Wolf Supermoon 2026 #supermoon இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும...