Saturday, July 13, 2024

மரம் நடும் வாரம் முன்னிட்டு திருப்பட்டூர் கோவில் குளம் சுற்றி மரம் நட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

மரம் நடும் வாரம் முன்னிட்டு திருப்பட்டூர் கோவில் குளம் சுற்றி மரம் நட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.


வன மஹோத்ஸவ் என்ற மரம் நடும் வார விழா, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் வாரத்தில், மரங்களை வளர்ப்பதன் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை பொது மக்களிடையே புகுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேரு நினைவு கல்லூரி மாணவர்கள், திருப்பட்டூர் கோவில் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவங்கள் உடன் இணைந்து திருப்பட்டூர் குளத்தை சுற்றி பல வகையான பழ மரங்கள் நடப்பட்டன. இந்த பழ மரங்கள் வளர்ந்து பயன் தரும் போது கிராமத்தை சுற்றி வலம் வரும் குரங்கு கூட்டங்களுக்கு உணவு கிடைக்கும். இதன் மூலம் பொது மக்களுக்கு குரங்குகள் மூலம் வரும் இடையூறு தவிக்கப்படும் என்று விளக்கி திருப்பட்டூர் கோவில் அறநிலையத்துறை அதிகாரி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி திருச்சி பண்பலை 102.1 வானொலி மூலம் நேரடியாக ஒலிபரப்ப பட்டது.






கல்லூரித்  தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன்,  அனுமதி மற்றும் வழிகாட்டுதல் உடன் இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் ஒருங்கிணைத்தார்.

Trichy FM 102.1MHz Live

Getlokalapp News

 இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025. சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே ந...