புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் புதுமுக மாணவர்களுக்கு தொடக்க விழா.
அவரைத் தொடர்ந்து கல்லூரிச் செயலர் பொன். இரவிச்சந்திரன் அவர்கள் மாணவர்களுக்கான சுதந்திரத்தைப் பயன்படுத்தி வாழ்வில் நல்ல முன்னேற்றங்களைக் காண வேண்டும் என்று கூறி சிறப்புரை வழங்கினார்.
துணை முதல்வர் முனைவர் K.T. தமிழ்மணி அவர்கள் கல்லூரி வளாகத்தின் கலாச்சாரத்தையும் வழிகாட்டி நெறிமுறைகளையும் எடுத்துரைத்தார்.
கல்லூரி தர கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் தேசியத் தர மதிப்பீட்டுக் குழுமத்தின் சிறப்பினை எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை ஜெயலட்சுமி அவர்கள் பங்கேற்று சிரமங்களைக் கடந்தால்தான் சிகரங்களை தொட முடியும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தன் வாழ்வில் சந்தித்த பல சவால்களை எவ்வாறு எதிர்கொண்டு நாசா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டார் என்பதை எடுத்துரைத்தார். தான் வாழும் ஆதனக்கோட்டை கிராமத்தில் கிராமாலயா தொண்டு நிறுவனம் மூலம் 126 கழிப்பறைகளை கட்டி கொடுத்து மகாராஷ்டிரா மாநில பள்ளி பாடப் புத்தகத்தில் கனவு மெய்ப்படும் என்ற தலைப்பில் இடம் பெற்றதையும் விளக்கி கூறினார். ஒவ்வொருவரும் வாழ்வில் தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் எவ்வளவு உயர்ந்த நிலையாக இருந்தாலும் அடைய முடியும் என மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.
சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி சைபர் கிரைம் காவல்துணை ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள் இணைய பாதுகாப்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இணைய வழியில் பண மோசடி குறித்து எடுத்துரைத்தார். மேலும் இணையதள சூதாட்டங்கள் விளையாட்டுகள் வழியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கினார். இணையதள வழியாக வேலை வாய்ப்பு இருப்பதாக் கூறி ஏமாற்றுபவர்களிடம் பணத்தினை இழந்து விடக்கூடாது என்றும், UPI செயலி பயன்படுத்தி பண மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ள வழிமுறைகளைக் கூறினார். சமூக வலைதளங்களில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். சைபர் கிரைம் குறித்த படிப்பினை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் குழுமம் செயற்குழு உறுப்பினர் எழிலன் அவர்கள் இன்றைய உழைப்பு நாளைய சாதனை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதில் மற்றவர்களுக்கு தெரிந்த விஷயமும், மற்றவர்களுக்கு தெரியாத விஷயமும் தெரிந்து வைத்திருந்தால் எளிதாக வேலை கிடைக்கும். ஒவ்வொருவரும் தன் பட்டப்படிப்புடன் சேர்த்து ஒரு திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் திறன் இருந்தால் அந்த திறனை பயன்படுத்தி பல்வேறு துறைகளில் எளிதில்வேலைக்கு செல்லலாம். நீங்கள் படிக்கும் இந்த பட்டப் படிப்பு தான் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மந்திரக்கோல் ஆகும் என்று சிறப்புரை ஆற்றினார். மேலும் கேள், படி, எழுது, சொல்லுதல் என்னும் நான்கு மந்திர முன்னேற்ற படிகளை சொல்லிக் கொடுத்தார். நினைத்த இலக்கை அடைவதற்கு ஏன்? எதற்கு? எப்படி? என்ற சிந்தனையுடன் அனைத்து துறைகளிலும் பயில வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நிறைவாக வணிகவியல் துறை இயக்குனர் முனைவர் மதிவாணன் அவர்கள் நன்றியுரை கூறினார். நிகழ்வில் முதலாம் ஆண்டு புதுமுக மாணவர்கள் சுமார் 700 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மேலும் படிக்க
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மேலும் படிக்க
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.
நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment