தங்க மங்கை வினேஷ் போகத்!?
100 கிராம்
சமையலறையில் இருந்து பெண் சமீப காலமாகத்தான் வெளியில் வந்திருக்கிறாள். அவள் வளர்ச்சி விண்ணை முட்டினாலும் அவள் உடல் சார்ந்த சோதனைகள் அவளை மண்ணைக் கவ்வவே செய்கிறது. எத்தனை முன்னேற்றம் வந்தாலும் எத்தனை தொழில்நுட்பம் வளர்ந்தாலும் என்ன கலாச்சார மாற்றம் நிகழ்ந்தாலும் பெண் என்பவள் படுக்கைக்கு உரியவள் என்ற போக்கு என்றும் உள்ளதுஎனவே அது இன்றும் உள்ளது .
அதைஎதிர்த்து அவள் கண்ணீர் விட்டால்....சிரித்து விட்டுப் போவார்கள்! கோபம் கொண்டால்...ஏளனமாய் பார்ப்பார்கள்! சீறிப் பாய்ந்தால் நெருப்பைக் கொண்டு அணைப்பார்கள்! போராடினால் சாமானியப்பெண்ணாக இருந்தால் உடனே வேரோடு பிடுங்கி வீசிவிடுவார்கள்!
சாதனை நிகழ்த்தக்கூடிய பெண்ணாக இருந்தால் சோதனை கொடுத்து மூலையில் அமர வைப்பார்கள்! அப்படி இப்போது அமர்ந்திருக்கும் பெண்தான் வினேஷ். ஆம்! வினேஷ் போகத். ஹரியானாவில் பிறந்தவர் மல்யுத்த குடும்பத்தைச் சார்ந்த மனவலிமை கொண்ட வீராங்கனை! 2014 கிளாசிகோ தங்கம், 2018 கோஸ்ட் கோஸ்ட் 2022பர்மிங்கம் தங்கம், 2014 இஞ்சியோனில் வெண்கலம், 2018 ஜெகர்தா தங்கம், 2013 நியூ டெல்லியில் வெண்கலம், 2015 தோகாவில் வெள்ளி, 2016 பாங்காங் வெண்கலம், 2013 ஜெகன்ஸ் பெர்லின் வெள்ளி. நடப்பு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார் உலக சாம்பியன் மற்றும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான யூயி சுசாகியோடு விளையாடி கால் இறுதிக்கு முன்னேறி அடுத்து ஒரு மணி நேரத்தில் உக்ரைன் வீராங்கனை அக்ஷானா லிவாட்ச் யை வீழ்த்தி அரை இறுதியில் கியூபா வீராங்கனை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் ஏமாற்ற நெடி....இறுதிச்சுற்றில் எடை அதிகமாம்! தகுதி நீக்கமாம்! "என்னடா இது பித்தலாட்டமா இருக்கு"
என்ற காமெடி போல் உள்ளது! வினேஷ் தங்கம் வாங்குவார் அதை கொண்டாடலாம் என காத்திருந்த நாம் அவர் தாக்கப்பட்ட போது பேசாமல் இருந்தோம்!
நேற்று வரை அவர் பதக்கம் பெறுவார் என இருந்தோம் இன்று எந்த பதக்கமும் இன்றி தரவரிசையில் இறுதியாக தள்ளப்பட்டு வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணம் ஒலிம்பிக் விதிமுறை அல்ல...வினேஷ் போகத்தின் கூடிய எடை அல்ல...இப்படி அவர் வெளியேற்றப்பட வேண்டும் என்பது அவர் விதி அல்ல...அன்று அவர் தாக்கப்பட்ட போதே நாம் கொதித்தெழுந்திருக்க வேண்டும் அன்று அவர் கழுத்தில் பூட்ஸ் கால்கள் பட்ட போது அதன் வேரை நாம் பிடுங்கி இருக்க வேண்டும்! பாலியல் புகார் எழுந்தபோது நாம் விழித்திருக்க வேண்டும்! ஏனெனில் இது மக்களாட்சி நாடு...குடியரசு நாடு! சர்வாதிகாரமும்...தனிநபர் ஆட்சியும் கொண்ட நாடு அல்ல ஆனால் நமக்குத்தான் எதற்குமே நேரம் போதாதே! நம் வாழ்க்கையில் முன்னேற்றவே நமக்கு நேரம் போதாது பிறகு ஏன் பிறரைப் பற்றி கவலைப்படுவானேன்! நேற்று அவருக்காக போராட தவறினோம்! இன்றும் தவறுகிறோம்! நாளையும் தவறுவோம்....
கட்டுரை: ந.ஹூமேரா பர்வீன்
இது போன்ற தகவல் பெற
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment