Tuesday, July 15, 2025

விண்வெளி ஆய்வு நிறைவு - வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் ஷுபன்ஷு சுக்லா.

விண்வெளி ஆய்வு நிறைவு - வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் ஷுபன்ஷு சுக்லா.

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அமெரிக்​கா​வின் கலிபோர்போனியா அருகே பசிபிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது.

ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்​வெளி வீரர்​களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் இருந்து டிராகன் விண்​கலத்​தில் பூமிக்கு புறப்​பட்​டனர். சுமார் 23 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு டிராகன் விண்​கலம் இந்திய நேரப்படி மாலை 3 மணி அளவில் பூமியை வந்​தடைந்தது.

அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம் பசிபிக் கடலில் விண்​கலம் இறங்கியது. சுமார் 5.5 கி.மீ. உயரத்​தில் பாராசூட்​கள் விரிக்​கப்​பட்டு விண்கலம் கடலில் பாது​காப்​பாக இறக்​கப்​பட்டது.

டிராகன் விண்​கலத்​தின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் மற்​றும் நாசா​வின் மீட்​புக் குழுவினர் 4 விண்​வெளி வீரர்​களை​யும் விண்​கலத்​தில் இருந்து பத்​திர​மாக மீட்டனர். இதன்​பிறகு சு​மார்​ இரண்​டு ​வாரங்​கள்​, 4 வீரர்​களும்​ பல்​வேறு மருத்​துவ ஆய்​வு​களுக்​கு உட்​படுத்​தப்​படு​வார்​கள்​. இந்​த நடை​முறை​களுக்​குப்​ பிறகே ஷுபன்​ஷு சுக்​லா இந்​தி​யா திரும்​பு​வார்​.

முன்னதாக, அமெரிக்​கா​வின் அக்​ஸி​யம் ஸ்பேஸ், நாசா, இஸ்​ரோ, ஐரோப்​பிய விண்​வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு பால்​கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்​கலத்தை அனுப்​பின. இந்த விண்​கலத்​தில் இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்​லா, அமெரிக்​கா​வின் பெக்கி விட்​சன், போலந்​தின் ஸ்லா​வோகி உஸ்​னான்​ஸ்​கி, ஹங்​கேரி​யின் திபோர் கபு ஆகியோர் 28 மணி நேரம் பயணம் செய்து கடந்த 26-ம் தேதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடைந்​தனர்.

கடந்த 28-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் சுக்லா உரை​யாடி​னார். கடந்த 3, 4, 8 ஆகிய தேதி​களில் திரு​வனந்​த​புரம், பெங்​களூரு, லக்​னோவை சேர்ந்த 500 மாணவ,​ மாணவிகளு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார். கடந்த 6-ம் தேதி இஸ்ரோ விஞ்​ஞானிகளு​டன் அவர் ஆலோ​சனை நடத்​தி​னார்.

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் ஷுபன்ஷு சுக்லா 17 நாட்​கள் தங்​கி​யிருந்​தார். அப்​போது அவர் சுமார் 60 வகை​யான ஆய்​வு​களை செய்​தார். குறிப்​பாக நெல், காராமணி, எள், கத்​தரி, தக்​காளி உள்​ளிட்ட 6 வகைகளை சேர்ந்த 4,000 விதைகளை சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். அந்த விதைகளை அவர் விண்​வெளி​யில் சிறப்பு பெட்​டிகளில் வைத்து முளைக்​கச் செய்​தார். இந்த ஆராய்ச்​சி​யில் இஸ்​ரோ, கேரள வேளாண் பல்​கலைக்​கழகம், ஐரோப்​பிய விண்​வெளி முகமை ஆகிய​வை​யும் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன.

பாசி பன்​றிக்​குட்டி என்ற நுண் உயி​ரியை ஷுபன்ஷு சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இதை வெறும் கண்​ணால் பார்க்க முடி​யாது. நுண்​நோக்கி உதவி​யுடன் மட்​டுமே பார்க்க முடி​யும். இந்த நுண் உயிரி விண்​வெளி​யில் எவ்​வாறு வளர்​கிறது என்​பது குறித்​தும் சுக்லா ஆய்வு செய்​தார்.நீல பச்சை பாசி வகையை சேர்ந்த இரு பாசிகளை அவர் விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இந்த பாசி வகைகள் எவ்​வாறு வளர்​கின்றன என்​பது குறித்து அவர் ஆய்வு நடத்​தி​னார்.

மைக்​ரோஅல்கா என்ற பாசி வகை​யை​யும் சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இதன் வளர்ச்சி குறித்​தும் அவர் செய்​தார். இந்த வகை பாசி மூலம் உணவு, எரிபொருள், ஆக்ஸிஜனை உற்​பத்தி செய்ய முடி​யும். இது எதிர்​கால விண்​வெளி பயணத்​துக்கு பயனுள்​ள​தாக இருக்​கும். இவை உட்பட ஒட்​டுமொத்​த​மாக 60 வகை​யான ஆராய்ச்​சிகளை ஷுபன்ஷு சுக்லா விண்​வெளி​யில் மேற்​கொண்​டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விண்வெளிக்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் கோடிக்கணக்கானவர்களின் கனவுகளை ஊக்குவித்துள்ளார். இது நமது சொந்த மனித விண்வெளி பயணமான ககன்யானை நோக்கிய மற்றுமொரு முக்கிய நடவடிக்கை" என தெரிவித்துள்ளார்.

Thanks: Hindutamil news

இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...