Thursday, September 25, 2025

ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி.

ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி.


ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக 2,000 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக அக்னி - ப்ரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த அடுத்த தலைமுறை ஏவுகணை 2000 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது பல்வேறு மேம்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.
நகரும் ரயில்களின் மூலம் ஏவுகணைகளை ஏவும் அமைப்பை உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இந்த அக்னி - ப்ரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததற்காக டிஆர்டிஓ, எஸ்எஃப்சி மற்றும் ஆயுதப்படைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வகை ஏவுகணை ரயில் நெட்வொர்க் மூலம் நகரும் திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக நாடு முழுவதிலும் இருந்து, குறுகிய நேரத்தில் நமது எதிர்வினையை தொடங்க முடியும்” என்றார்.

டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்த ஏவுகணைகள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன. தொடர்ந்து, அடுத்த தலைமுறை ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் டிஆர்டிஓ, வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில், அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து அசத்தியுள்ளது.

முதன் முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று, இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. அக்னி-1, அக்னி-2 வரிசையில், மேம்படுத்தப்பட்ட பதிப்பான அக்னி பிரைம் எடை குறைவாகவும், கையாள எளிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ரயில், சாலை போன்ற பல்வேறு தளங்களில் இருந்தும் ஏவும் வகையில், சிறப்பு மிக்க நகரும் ஏவுதள அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக, கேனிஸ்டர் எனப்படும் சிறப்பு கொள்கலனில் இந்த ஏவுகணை வைக்கப்பட்டுள்ளதால், இதனை ரயில்கள், லாரிகள் போன்ற வாகனங்களில் எளிதாக ஏற்றிச் செல்ல முடியும்.




இத்தகைய சிறப்புவாய்ந்த திட்டத்திற்கு சோவியத் யூனியன் தான் முன்னோடி. 1980-களில், RT-23 Molodets என்ற கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையை ரயில் அடிப்படையிலான அமைப்பில் சோவியத் யூனியன் நிலைநிறுத்தியது. பனிப்போர் சமயத்தில், அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, தங்கள் அணு ஆயுத ஏவுகணைகளை மொபைல் கேனிஸ்டர் அமைப்பில் வைத்து ரயில்களிலும், சாலைகளிலும் நகர்த்தி வந்தது சோவியத் யூனியன்.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி.

ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி. ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக 2,000 கி.மீ. வரையிலா...