த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.
இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பேட்டையில் வானவியல் கண்காட்சி வெகுச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக பள்ளி தலைமையாசிரியர் திரு.அசோக்குமார் அவர்கள் வரவேற்புரை நடத்தினார். அக்டோபர் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தேசிய விண்வெளி வாரம் என்பதால் மாணவர்களுக்கு வானியல் சார்ந்த கண்காட்சி வைக்க திட்டமிடப்பட்டது.
அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி.தனலட்சுமி அவர்கள் விண்வெளி குறித்த படைப்புகளை செய்ய மாணவர்களுக்கு வழிகாட்டி இருந்தார்.இந்நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இதில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது விண்வெளி சார்ந்த படைப்புகளை செய்து விளக்கி கூறினார்கள். இக்கண்காட்சியில் செயற்கைகோள்,ராக்கெட்,நிலா ,சூரியகுடும்பம்,கிரகணங்கள், பிஸ்கட் மூலம் தேய்பிறை, வளர்பிறை,வாட்டர் பாட்டிலில் ராக்கெட்,பூமியின் சுழற்சி ,நெபுலா மூலம் வகுப்பறையில் விண்மீன் கூட்டம், பால்வழித்திரள் போன்ற படைப்புகளை காட்சிப்படுத்தினார். உடன் சுப்ரமணியன், தனலட்சுமி, சுதாகர், சாந்தி ஆகிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வானவியல் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற திருச்சி அஸ்ட்ரோ கிளப் வழிகாட்டியது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தகவல் பெறhttps://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
நன்றி.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.