Sunday, February 8, 2026

சரஸ்வதி பாடல் எழுதி உலக சாதனை நிகழ்வு-த.பாதர்பேட்டை பள்ளி ஆசிரியர் தனலட்சுமி

சரஸ்வதி பாடல் எழுதி உலக சாதனை நிகழ்வு-த.பாதர்பேட்டை பள்ளி ஆசிரியர் தனலட்சுமி.

பெங்களூர் ஷியாம்ஸ் ஆர்ட் மற்றும் கிராஃப்ட் அகாடமி யூனிட்டி யூனிவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட் நிறுவனம் இன்று காலை எட்டு மணி அளவில் இணையவழி காணொளி மூலம் உலக சாதனை நிகழ்ச்சி ஆனது மிகச் சிறப்பாக நடைபெற்றது. சரஸ்வதி ஓவிய படத்தில் சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லி மாலை, கலைமகள் போற்றி, வீணை ஏந்தும் சரஸ்வதி போன்ற பாடல்களை போஸ்டரில்  (நீளம் 4 அடி, அகலம் 3 அடி) திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பேட்டையில் பணியாற்றி வரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் தன் வீட்டில் இருந்து  எழுதினார்.



சரஸ்வதி தேவியின் ஓவியத்தில் சுமார் 2 மணி நேரத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி சாதனை படைத்துள்ளார். அறிவியல் பட்டதாரி ஆசிரியராக இருந்தாலும் தொடர்ந்து தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ஆசிரியரின் உலக சாதனை நிகழ்வானது போற்றுதலுக்குரியது. விடுமுறை நாட்களையும் பாராமல் இந்த உலக சாதனை நிகழ்வை நிகழ்த்தியுள்ளார். இந்நிகழ்வை பாராட்டி மற்ற ஆசிரியர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டு வருகின்றார்கள்.





No comments:

Post a Comment

😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026

  😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026. 2026 Celestial Events and European Travel Safety Guid...